உன் வீட்டார் THY HOUSE செவ்வாய் கிழமை மாலை, ஆகஸ்டு 8, 1961 வீட்டுக் கூட்டம், டிஃப்டன், ஜார்ஜியா, அமெரிக்கா 1. நான் உங்களுக்குக் கூறுகிறேன்... அது... அது... நான் கூறுவதைக் கேட்கும்படி நீங்கள் அங்கே வருவதில்லை என்பது எனக்குத் தெரியும். பாருங்கள், எனென்றால் ஒரு பிரசங்கி பேசுவதைக் கேட்க யாருமே அவ்வளவு தூரம் காரோட்டிக் கொண்டு வர மாட்டார்கள். நீங்கள் - நீங்கள் செய்தியை விசுவாசிக்கிற காரணத்தினாலும், கிறிஸ்துவில் உங்க ளுக்கு விசுவாசம் இருக்கிற காரணத்தினாலும் தான் நீங்கள் அங்கே வந்திருக்கிறீர்கள். நான் அதைப் பாராட்டுகிறேன். நான் அப்படிப்பட்ட நண்பர்களைக் கொண்டிருப்பதற்காக மிகவும் நன்றியுள்ளவனாயிருக்கிறேன். நீங்கள் செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கும் உங்களுடைய - உங்களுடைய முயற்சிகளைப் பாராட்டுகிற யாரோ ஒருவரை கொண்டிருப்ப தென்பது - அவர்களுடைய நிலைமையில் அவ்வளவு தூரம் காரோட்டி வருவதென்பது. ஒரு காரியத்தை மாத்திரமே என்னால் கூற முடியும், நான் அதை விரும்பினேன்... நான் மேடாவிடம் கூறினேன்; நான், ‘ஐம்பது மைல்களுக்கும் அதிகமான தூரத்திலிருந்து வீட்டிற்கு போஜனத்திற்காக வருகிற ஜனங்கள் அனைவரையும் நம்மால் கொண்டிருக்கக் கூடுமோ என்று வியக்கிறேன்?’ என்றேன். பாருங்கள்? அவர்களை வைத்துக் கொண்டு நாங்கள் என்ன செய்வோம் என்பது எனக்குத் தெரியவில்லை. உங்களுக்குப் புரிகிறதா? காரணம் என்னவென்றால் நம்முடைய சபையின் மிகப் பெரிய பாகம், அவர்களில் 80 சதவீதத்தினர் ஜனங்களாகிய நீங்கள் தான் என்று நினைக்கிறேன். நீங்கள் வந்திருக்கிற மிசிசிபி, அலபாமா, மற்றும் ஜார்ஜியாவிலிருந்தும், மற்றும் அதைப் போன்ற இடங்களிலிருந்தும் கூடி வந்திருக்கிறீர்கள். நீங்கள் அதை சிந்தித்துப் பாருங்கள்... 2.வருகிற ஜனங்களில் யாருமே செல்வம்படைத்த ஜனங்களல்ல. அவர்கள் வெறுமனே சாதாரண ஜனங்கள் தான். நீங்கள் சேமிக்கிற உங்களுடைய - உங்களுடைய அதிகமான காசுகளை (pennies) அதைச் செய்வதற்காகவே நீங்கள் செலவழிக்கிறீர்கள் என்பதை நான் அறிவேன். ஏனென்றால் வந்து செல்வதற்கு எவ்வளவு பெட்ரோல் செலவாகும் என்பது எனக்குத் தெரியும். அதுவுமல்லாமல், பிரயாணத்தில் ஒரு கார் அதில் பிரயாணம் போய் வரும்போது (எவ்வாறு) சேத மடையும், ஓ, ஒரு செய்திக்காக, ஏறக்குறைய 1600, 1700 மைல்கள் பிரயாணம் என்று நினைக்கிறேன். அவ்வாறு ஒவ்வொரு வாரமும் வருகிறீர்கள். அதைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள். புரிகிறதா? நான் அப்படியே - நான் அதைக்குறித்து கொஞ்சம் சிந்தித்துப் பார்க்கிறேன். உத்தமம். நான் எப்படியாக - நான் எப்படியாக அதைப் பாராட்டுகிறேன் என்று உண்மையாகவே உங்களிடம் கூறும்படி உங்களுக்கு முன்பாக நிற்பதற்கு நான் அரை அங்குலமே உயரமுடையவனாய் இருந்தது போன்று நான் உணருகிறேன். 3.ஜனங்களாகிய நீங்கள் வரவில்லை என்றால், கூடா ரத்தில் நான் ஆராதனை நடத்திக் கொண்டிருக்கும் போது, அந்த ஆராதனை எனக்கு ஏற்ற பலன் அளிக்காது. ஏனென் றால், ஜனங்களாகிய உங்களுக்காக அது இல்லையென்றால், அங்கேயிருப்பதைக் காட்டிலும், இப்பொழுது இந்த அறையில் அதிகமானவர்கள் இருக்கிறார்கள் என்று மனைவியும் நானும் பேசிக்கொண்டிருந்தோம். அது முற்றிலும் உண்மை. வேதவாக்கியம் கூறுவதை அது நிறைவேற்றுகிறது. நம்முடைய சொந்த தேசத்தில், நம்முடைய சொந்த ஜனங்கள் மத்தியில்... உங்களுடைய - உங்களுடைய - உங்களுடைய மரியாதையும் கனமும் எப்போதுமே வெளியிலிருந்து வருபவர் களிடமிருந்து தான் வருகிறது. ஏனென்று (தெரிய)வில்லை. ஆனால் நான் ... வெளியிலிருப்பவர்களைக் குறிப்பிடவில்லை. நான் உங்களுடைய சொந்த வீட்டிற்கு வெளியிலிருந்து வருபவர்களைத்தான் குறிப்பிடுகிறேன். நிச்சயமாகவே, வெளி யிலிருந்து வந்திருக்கிற உங்களெல்லாரையும் குறித்து சிந்தித்துப் பார்க்க முடியவில்லை, நீங்கள் என்னுடைய சக சகோதரர்களும், தேவனுடைய இராஜ்யத்தின் பிரஜைகளுமாயிருக் கிறீர்கள். 4.இங்கே சிறிது காலத்திற்கு முன்பு, இங்கே அடைத்து வைக்கப்பட்டிருந்த சிறிய வயதுடைய ஒரு முதலை எனக் கிருந்தது. நான் அதைக் கொண்டு செல்ல வந்திருக்கிறேன் என்று சகோதரன் வெல்ச் அவர்களிடம் கூறினேன். சிறு பிள்ளைகள் தங்கள் விடுமுறையை முடித்திருக்கவில்லை. நான் அவர்களை ஃபிளோரிடாவிலுள்ள, செய்ன்ட். பீட்டர்ஸ் பர்க்கிற்கு காலையில் அழைத்துச் செல்லலாம் என்று எண்ணி னேன். அங்கிருந்து மியாமிக்குச் சென்று, பிறகு டமியாமி ட்ரெயிலுக்குச் சுற்றி வந்து, வீட்டிற்குத் திரும்பி விடலாம் என்று எண்ணினேன். அவர்கள் உடனடியாக பள்ளிக்குப் போக வேண்டியுள்ளது, முதலையைப் பார்ப்பதற்கான ஒரு நல்ல நேரம் இதுவாகத்தான் இருக்கும் என்று எண்ணினேன். எனவே சகோதரன் வெல்ச் - சகோதரன் ஃபிரட்டும், சகோதரன் உட்டும் என்னோடு வந்தனர், எனவே சிறு பிள்ளை களை அழைத்து வருவதற்கு அது எனக்கு ஒரு தருணத்தை அளித்தது. அவர்கள் என்னுடைய முதலையைத் திரும்பவும் கொண்டு வரப்போகின்றனர். நான் இங்கே இருந்த போது இவ்வாறு எண்ணினேன், உங்களை எவ்வளவு பாராட்டுகிறேன் என்பதையும் - உங்களுடைய பிரயாசங்களை நான் எவ்வளவு மெச்சுகிறேன் என்பதையும் உங்களிடம் கூறும்படிக்கு, உங்க ளுடைய சிறு கூட்டமானது ஒன்றாகக் குழுமியிருக்க வேண்டு மென்று நான் வாஞ்சித்தேன். 5.சகோதரன் மற்றும் சகோதரி ஈவான்ஸ்-ம், மற்றும்- மற்றும் சகோதரன் மற்றும் சகோதரி... நான்-நான் அதைப் புரிந்து கொண்டேன்... நான் அதை S.T. என்று அழைக்கிறேன். அது S.T என்பது எனக்குத் தெரியும். நான்... அவர்கள் ST37 என்று அழைக்கிற ஒரு-ஒரு- வாய் கொப்பளிப்பதற்காக உதவும் திரவம், வாய்க்கழுவும் சாதனம் அங்கே உள்ளது, அவ்வாறு தான் நான் உங்களை S.T. என்று அழைக்கிறேன்... இருந்து அல்ல. அது - அதுவும் கூட ஒரு நல்ல காரியம் தான். அது மிகவும் நல்லதொரு காரியமாகும். என்னுடைய அபிப்ராயத் தின்படி, மற்றவை எல்லாமே தோற்கடிக்கப்பட்டு விட்டன. மேலும் அவர்கள் அதை இராணுவத்திலும் பயன்படுத்துகி றார்கள், நான்-நான் அதை எதற்காவது பயன்படுத்துகிறேன். நான் வாய் கொப்பளிப்பதற்காகவும், வாய் கழுவுவதற்காகவும் வேட்டை பயணத்தில் அதை என்னோடு எடுத்துச் செல்கி றேன். என்னுடைய குதிரைக்கு காயம்பட்டால், அந்தவிடத்தில் நான் அதை சிறிது ஊற்றுகிறேன், அதை நீங்கள் அறிவீர்கள். அப்படியே - அப்படியே எதற்கும் அதை உபயோகப்படுத்து கிறேன். அது - அது எல்லாவற்றுக்குமே நல்லது. நீங்கள் அவரையும் கூட அந்தவிதமாகக் காண்கிறீர்கள் என்று யூகிக்கிறேன், இல்லையா, சகோதரியே? எல்லா வகை யிலும், சில சமயங்களில் பாத்திரங்களைக் கழுவுவதற்கும், மற்ற காரியங்களுக்கும்... 6.ஆகையால், நான் நினைத்தேன், ஒருக்கால்... இன்றிரவு கேட்டேன் - கேட்டேன், நான் சகோதரன் வெல்ச் அவர்களிடம், ‘ஜனங்கள் வரும்போது, நீங்கள் - நாம் என்ன பேசலாம்... என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?’ என்று கேட்டேன். நாங்கள் இவ்வாறு எண்ணினோம், ஒருக்கால் உங்களுடைய மனதில் ஒரு சிறு கேள்வி இருக்குமானால், உங்களால் முடிந்த ஏதோவொரு சிறிய கேள்வி - ஒருக்கால் என்னால் பதிலளிக்க கூடிய ஏதோவொரு கேள்வி, ஒருக்கால் நீங்கள் அங்கே மேலே கூடாரத்தில் இருக்கும் சமயத்தில் பதிலளிக்கும்படி நேரம் எடுத்துக்கொள்ள விரும்பாத ஏதோவொரு சிறு கேள்வி யாக அது இருக்கலாம். அதற்காகத்தான் நான் வந்துள்ளேன். அதன்பிறகு, நீங்கள் காலையில் வேலைக்குப் போகி றீர்கள் என்பதை நாங்கள் அறிவோம். இப்பொழுது, மணி 9:10 ஆகிறது. எனவே, நாம் சரியாக அதற்குள் கடந்து போவோம். ஆனால் நாம் அதை செய்வதற்கு முன்பு, ஒரு சிறு ஜெபத் திற்காக நம்முடைய தலையைத் தாழ்த்துவோமா. 7.எங்கள் பரலோகப் பிதாவே, ஒரு பாவமான ஜீவியத்தி லிருந்து எங்கள் ஆத்துமாக்களை இரட்சித்து, எங்கள் கர்த்த ராகிய இயேசு கிறிஸ்துவின் இராஜ்யத்தின் பிரஜைகளாக எங்களை ஆக்கியிருக்கிற எங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வுக்காக நாங்கள் மிகவும் சந்தோஷமாயிருக்கிறோம். அவரு டைய கிருபையால் நாங்கள் இரட்சிக்கப்பட்டோம், அது நாங்க ளாகவோ, எங்கள் கிரியைகளின் மூலமாகவோ அல்ல, ஆனால் அவருடைய இரக்கத்தால் நாங்கள் இரட்சிக்கப் பட்டோம். எனவே, நாங்கள் அதற்காக மிகவும் மகிழ்ச்சியாயிருக் கிறோம். ஏதோவொரு நாளில் நாங்கள் அவரைக் காண்போம் என்பதை அறிவோம். அவருக்கு சொந்தமான மகிமையான சரீரத்திற்கு ஒப்பான ஒரு சரீரத்தை நாங்கள் கொண்டிருப்போம், அவர் இருக்கிறவண்ணமாகவே நாங்கள் அவரைக் காண் போம். அது எவ்வாறு சம்பவிக்கும் என்று நாங்கள் இன்னும் இச்சமயத்தில் அறியாதவர்களாயிருக்கிறோம். ஆனால் நாங்கள் அதை அறிய வேண்டும் என்பதற்காக அல்ல. நாங்கள் அதை விசுவாசத்தின் மூலம் மாத்திரமே எதிர்நோக்குகிறோம். எங்கள் நடைகள் முழுவதும் விசுவாசத்தைக் கொண்டே நடக்கிறோம். எனவே, நாங்கள் இக்காரியங்களுக்காக நன்றியுள்ளவர்களா யிருக்கிறோம். 8.கர்த்தாவே, இந்த ஜனங்களை நீர் ஆசீர்வதிக்க வேண்டுமென்று நாங்கள் ஜெபிக்கிறோம். நான் இங்கே காரோட்டி வரும்போது, மனைவியும் நானும் சாலையினூடாக பேசிக் கொண்டே வருகையில், கடந்த இரவில் எங்கள் இருதயங்களில் என்ன இருந்தது என்பதை நீர் அறிவீர். வெறுமனே ஒரு செய்தியைக் கேட்பதற்காக, ஒரு இரவு பகல் முழுவதும் அந்த நூற்றுக்கணக்கான மைல்கள் காரோட்டி, தேவகுமாரனுடைய மகிமையான சுவிசேஷத்தை கேட்கும்படி தியாகம் செய்து வருகிற நண்பர்களைக் கொண்டிருப்பதென்பது எங்களை எவ்வளவாகப் பேரின்பமடையச் செய்கிறது. தேவனே, நீர் அந்த இராஜ்யத்தில் அவர்கள் ஒவ்வொரு வருக்கும் ஒரு மகிமையான வீட்டைக் கொடுத்தருள வேண்டு மென்று நான் ஜெபிக்கிறேன். அவர்கள் இங்கே பூமியில் இருக்கும்போது, அவர்களை ஆசீர்வதியும். அவர்கள் என்ன செய்தாலும் அதில் அவர்களுக்கு செழிப்பைக் கொடும். அது செழிப்படைவதாக. மேலும் கர்த்தாவே, இந்த வாலிப ஜனங்கள் இன்னும் வெறுமனே சிறு பிள்ளைகளாகவே இருக்கிறார்கள். இங்கேயிருக்கும் அவர்களில் அநேகர் டீன் ஏஜ் (13 க்கும் 19க்கும் இடைப்பட்ட வயதினர் - மொழிபெயர்ப்பாளர்.) பிள்ளைகளா யிருக்கிறார்கள், இருப்பினும் அவர்கள் பயபக்தியோடும், வயது வந்தவர்களாக மரியாதையோடும் அமர்ந்திருக்கிறார்கள். தேவனே, அவர்கள் தேசத்திலேயே சிறப்பானவர்கள் என்று நினைக்கிறேன். கர்த்தாவே, நீர் அவர்களை ஆசீர்வதிக்க வேண்டுமென்று ஜெபிக்கிறேன். அவர்கள் ஒருக்கால் எதையும் ஒருபோதும் விரும்பாதவர்களாக இருக்கலாம். பிதாவே, அங்கேயுள்ள அந்த மகத்தான இராஜ்யத்தில், குடும்பத்தினர் எல்லாரும் ஒன்றாகக் கூடி வரும்போது, அவர்களும் அங்கே இருப்பார்கள் என்ற நிச்சயமுடையவனாயிருக்கிறேன். அவர் கள் ஒவ்வொருவரையும் நீர் அங்கே கொண்டிருக்க வேண்டு மென்று நான்-நான் ஜெபிக்கிறேன். அவர்கள் அந்த மகத்தான குறுகலான பாதையை விட்டு ஒருபோதும் திசை திரும்பா திருப்பார்களாக, அதில் நடந்து வரும்படிக்கு அவர்கள் போதிக் கப்பட்டிருக்கிறார்கள். இதை அருளும், கர்த்தாவே. 9.இப்பொழுதும், பிதாவே, இன்றிரவு ஜனங்களுடைய இருதயங்களில் என்ன உள்ளது என்பதை நாங்கள் கண்டறிய வேண்டுமென்று நான் நினைத்தேன். அவர்களுடைய இருதயங் களை நீர் அறிந்திருக்கிறீர். பிதாவே, அவர்களுடைய கேள்வி களுக்கு பதிலளிக்கும்படியாக எனக்கு நீர் உதவி செய்ய வேண்டுமென்று நான் உம்மிடம் ஜெபிக்கிறேன். அது எங்க ளுக்கு நன்மையாயிருக்கட்டும். நாங்கள் இங்கே இருப்பது எங்களுக்கு நல்லதாக இருக்கிறது, ‘அவருடைய பிரசன்னத் தின் நிமித்தமாக நம்முடைய இருதயங்கள் நமக்குள்ளே கொழுந்து விட்டு எரியவில்லையா?’ என்று கூறியபடியே நாங்கள் போகட்டும். இப்பொழுது வாரும், கர்த்தாவே. இருக்கைகளைச் சுற்றிலும் உலாவும். ஒவ்வொரு தோளின் மேலும் உமது கரத்தை வையும். எங்களுடைய கர்த்தர் அருகிலேயே இருக்கிறார் என்பதை நாங்கள் அறிந்து கொள்ளும்படியாக, உம்மு டைய ஆணி கடாவப்பட்ட தழும்புள்ள கரத்தை ஒவ்வொரு இருதயத்தின் மேலும் தடவும். இயேசுவின் நாமத்தில் நாங்கள் இதைக் கேட்கிறோம். ஆமென். 10.இங்கே நம்மிடம் ஒரு வேதாகமம் உள்ளது என்று நினைக்கிறேன். நாம் அந்தப் பாடத்திற்குள் - அல்லது சரியாகக் கூறினால் கேள்விகளுக்குள் போவதற்கு முன்பு, ஒரு சிறு தொடக்கத்திற்காக, சற்று நேரம் இதிலிருந்து ஒரு-ஒரு- வேத வாக்கியத்தை வாசிக்க விரும்புகிறேன். இது - இந்தப் பிற்பகல் வேளையில் நான் கண்டறிந்த ஒரு - ஒரு இடத்திலிருந்து இதை வாசிக்க விரும்புகிறேன். நான் அங்கேயிருக்கும் சகோதரன் சாத்மனுடைய பாரவண்டி யின் (truck) முன்பக்க இருக்கையில் சகோதரன் வெல்ச் அவர்களோடு பிரயாணம் பண்ணிக் கொண்டிருந்தேன். அப்பொழுது நான் நினைத்த ஏதோவொன்றை வாசித்தேன், நான் ஒரு சில நிமிடங்கள் அதிலிருந்து தான் சற்று பேச விரும்புகிறேன். நான் அதை அவருடைய ... ல் கண்டுபிடிக்கக் கூடுமானால். ஓ, ஆமாம். இதோ நாம் கண்டுபிடித்து விட்டோம். அப்போஸ்தலர் நடபடிகளின் புஸ்தகம் 16ம் அதிகாரத் தில், ஏறக்குறைய 37ம் வசனம் தொடங்கி. அதற்குப் பவுல்: ... எங்களை அவர்கள் ... வெளி யரங்கமாய் அடித்து... (உங்கள் மன்னிப்பைக் கோருகிறேன். நான் தொடங்கி வாசிக்க விரும்பின - நான் விரும்பின இடம் அதுவல்ல.) அது... நான் இங்கே ஒரு இடத்திலிருந்து வாசித்துக் கொண்டிருந்தேன், அப்படியே... ஒரு நிமிடத்தில் நான் அதை எடுத்து விடுகிறேன். இதோ நாம் அதைக் கண்டுபிடித்து விட்டோம். அது 29-வது வசனம் - 28-வது வசனம், நாம் தொடங்குவோம். (அப். 16:28-31) பவுல் மிகுந்த சத்தமிட்டு: நீ உனக்குக் கெடுதி ஒன்றுஞ் செய்துகொள்ளாதே; நாங்கள் எல்லாரும் இங்கே தான் இருக்கிறோம் என்றான். அப்பொழுது அவன் தீபங்களைக் கொண்டுவரச் சொல்லி, உள்ளே ஓடி, நடுநடுங்கி, பவுலுக்கும் சீலாவுக் கும் முன்பாக விழுந்து, அவர்களை வெளியே அழைத்து வந்து: ஆண்டவ மாரே, இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்யவேண்டும் என்றான். அதற்கு அவர்கள்: கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப் படுவீர்கள் என்று சொல்லி, 11.குழப்பமாக இருப்பதாக நான் எண்ணின இந்தச் சிறு கேள்விகளில் ஒன்றாக இது இருக்கிறது, ‘உன் வீட்டார்’ என்பதைக் குறித்து நான் சிறிது நேரம் பேச விரும்புகிறேன், உங்களுடைய வீட்டை ஒழுங்குபடுத்துவதில் நீங்கள் ஒவ்வொருவரும் மிகவும் அருமையானவர்களாயிருக்கிறீர்கள் என்று காண்கிறேன். உங்களுடைய - உங்களுடைய பிள்ளைகள் இரட்சிக்கப்பட்டிருக்கிறார்கள், உங்கள் குடும்பத்தினர் எல்லாரும் கிறிஸ்தவர்களாயிருப்பது என்பது அருமையானது. ஏனென்றால் நான்... நாம் - நாம் நம்முடைய குடும்பத்தினர் கிறிஸ்தவர்களாக இருப்பதையே விரும்புகிறோம். நாம் ஒவ்வொருவரும் நம்முடைய பிள்ளைகளைக் குறித்து எண்ண முடையவர்களாயிருக்கிறோம். இங்கேயிருக்கும் அருமையான ஜனங்களாகிய உங்களிடம் உங்கள் அன்பான பிள்ளைகளைக்குறித்து நிச்சயமாகவே என்னால் பாராட்ட முடியும், நீங்கள் அவர்கள் எல்லாரையும் எவ்வளவாக ஒழுங்குக்குள் வைத்துள் ளீர்கள் மற்றும் அதைப்போன்ற ஒவ்வொன்றையும் செய்துள் ளீர்கள். நான்... எப்படியிருக்கிறீர்கள், சகோதரியே? இது ஒரு... என்று விசுவாசிக்கிறேன். அங்கே பின்னாலிருக்கிற அந்தத் தாயார் இப்பொழுது தான் வந்தார்கள், இல்லையா? கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. இன்றிரவு மீண்டும் உங்களைக் காண்பதில் மகிழ்ச்சியடைகிறேன். இது சகோதரன் வில்லியுடைய மனைவி என்று நம்புகிறேன், அது சரியல்லவா? நான் புரிந்து கொண்ட படி, அது அங்குள்ள அக்குடும்பத்தின் தலைவர், அது... அல்லது அதேவிதமாகத்தான் நம்முடைய வீட்டிலும் நடக்கிறது. 12.உங்களுடைய வீட்டாரைக் கொண்டிருப்பதற்கு. இப்பொழுது, பவுல் இங்கே இந்த ரோம நூற்றுக்கு அதிபதி யிடம் கூறினான், அவன்... சாயங்காலத்திற்கு முன்னமே நியாயாதிபதிகளின் கட்டளையினால் பவுல் அடிக்கப்பட்டிருந் தான் என்பதை நாம் கண்டுகொள்ளுகிறோம், அவன் தீமை யான எதையும் செய்யாதிருந்த காரணத்தினால் அவன் அடிக்கப்பட்டிருந்தான்: அவன் அங்கே சுவிசேஷத்தைப் பிரசங்கம் பண்ணியிருந்தான், அதுதான் காரணம். அங்கே யிருந்த மதகுருமார்கள் பவுலுக்கு விரோதமாக அதைக் கொண் டிருந்தனர். ஏனென்றால் அவன் சுவிசேஷத்தைப் பிரசங்கம் பண்ணினான். அவன் உலகத்தைக் கலக்கிக் கொண்டிருந்ததாக அவர்கள் கூறினர். அவன் தெருவில் போன போது, அங்கே குறி சொல்லுகிற (fortuneteller) ஒருத்தியிருந்தாள். அங்கே குறி சொல்லுகிற ஆவியையுடைய ஒரு ஸ்திரீ இருந்தாள். அவள் குறிசொல்லுவதற்காக கூலிக்கு அமர்த்தப்பட்டிருந்தாள். அவர்கள் தெருவில் போய்க் கொண்டிருந்தபோது, அவள் பவுலைப் பின்தொடர்ந்து வந்து சத்தமிட்டு, ‘இவர்கள் ஜீவ வழியை நமக்கு அறிவிக்கிற தேவனுடைய மனுஷர்கள்’ என்றாள். 13.பிசாசு எந்த காரியத்திலாகிலும் பவுலுக்கு உதவியா யிருக்க வேண்டுமென்பது அவனுக்கு அவசியமில்லாதிருந்தது, எனவே அவன் சற்று திரும்பிப்பார்த்து, அந்த ஸ்திரீயிடமிருந்த ஆவியைக் கடிந்து கொண்டான். இது நடந்தபோது, ஓ, அது ஒரு அமளி (கலகம்) ஏற்படக் காரணமாகியது. அந்த ஆவி அவளை விட்டுப் போய் விட்டதை அவர்கள் கண்டுபிடித்த போது, அதற்குமேலும் அவளால் குறிசொல்ல முடியவில்லை. எனவே, அங்கே அவளைக் கூலிக்கு அமர்த்தி, அநேக மாக அவளைக் கவனித்துக் கொண்டிருந்தவன், ஏன், அது ஒரு பெரிய கலகம் ஏற்படக் காரணமாகியது, அவர்கள் அவனை அடித்து சிறையிலடைத்தனர். பவுலும் சீலாவும் அங்கே பின்னாலிருந்த அந்தப் பழமையான மூட்டைப் பூச்சிகள் நிறைந்த சிறைச்சாலையின் உட்காவலறையில் கிடப்பதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது. வெளியே - அங்கே விசேஷமான கைதிகள் பாதுகாப்பாக அடைக்கப் பட்டிருந்தனர், அது போதுமான அளவு மோசமானதாயிருந்தது. ஆனால் இவர்களோ உள்ளே இருந்தனர், அவர்கள் அங்கே பின்னால் அடைக்கப்பட்டு போன போது, அவர்கள் (கால் களைத்) தொழுமரத்தில் மாட்டி வைத்தனர். 14.எனக்குத் தெரியாது, எந்த... நீங்கள் எல்லாரும் எப்பொழுதாவது தொழுமரத்தைப் பார்த்திருக்கிறீர்களா? நான் அவைகளைக் காணும்படியான சிலாக்கியம் எனக்கு கிடைத்தது. அவர்கள் - அவர்கள் அவைகளை உங்களு டைய - உங்களுடைய காலின் குறுக்காக மாட்டி வைப்பார்கள். பிறகு அவர்கள் அவைகளை உங்கள் கைகளிலும் மாட்டி வைப்பார்கள். அதன்பிறகு உங்கள் கழுத்திலும் அதை மாட்டிவைப்பார்கள். அப்போது நீங்கள் அங்கேயே தான் இருப்பீர்கள். சீனர்களுடைய முதன்மையான தண்டனையானது, அவர்கள் வழக்கமாக அதை மிகவும் கொடூரமான விதத்தில் செய்வார்கள். அவர்கள் அந்த தொழுமரங்களில் அவர்களை மாட்டி வைத்து, சொட்டு சொட்டாக வடியும் தண்ணீரையும் வைப்பார்கள், ஒரு தடவையில் வெறுமனே ஒரு சொட்டு தண்ணீர் அவர்களுடைய தலையின் உச்சியில் இவ்விதமாக வந்து விழும், அது அவர்களைப் பைத்தியமாய் ஆக்கும் மட்டுமாக அந்தத் தண்ணீர் வந்து விழுந்து கொண்டே யிருக்கும். அவர்கள் அங்கே இருப்பார்கள், அவர்களுக்கு அவ்விதமாக புசிக்கவோ குடிக்கவோ எதையும் கொடுக்க மாட்டார்கள். அவர்களுடைய-அவர்களுடைய கண்கள் நிறம் மாறிப்போய்விடும், மேலும் ஒவ்வொரு காரியமும் சம்பவிக் கும். அது அப்படியே பயங்கரமான காரியமாயிருந்தது. 15.நிச்சயமாக, ஒருக்கால் முதல்நாளில் முதல் சில சொட்டு தண்ணீரினால், அது மிக மோசமாக இருக்காது என்று அவர்கள் கூறுகிறார்கள். ஆனால் ஒரு சில நாட்களுக்குப் பிறகு, அந்தச் சொட்டுத் தண்ணீர்கள் 50 டன்கள் அளவு விழுந்து கொண்டிருக்கும் என்று அவர்கள் கூறுகிறார்கள், அந்த தண்ணீர் சொட்டுகள் ஒவ்வொரு தடவையும் சரியாக ஒரே இடத்தில் விழும் என்பது உங்களுக்குத் தெரியும். ஏனென்றால் உங்களால் உங்கள் தலையை அசைக்கவே முடியாதபடி, நீங்கள் அந்த தொழுமரத்தில் மாட்டி வைக்கப் பட்டிருப்பீர்கள். பவுலும் சீலாவும் சுவிசேஷத்தைப் பிரசங்கித்ததற்காக அங்கே பின்னாலிருந்த அந்த அழுக்கடைந்த அசுத்தமான பழைய இடத்தில் வைக்கப்பட்டிருந்ததை சற்று சிந்தித்துப் பாருங்கள். அநேகமாக எலிகளும், சுண்டெலிகளும், மூட்டைப் பூச்சிகளும் மற்றும் ஒவ்வொன்றும் அவர்கள் மேல் இருந்தன. ஒரு மனிதன் சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதற்கான என்ன வொரு இடம். நாம் இன்று எண்ணிப் பார்க்க வேண்டும், நமக்குக் காரியங்கள் கொஞ்சம் கடினமாயிருக்கிற காரணத் தினால், நாம் குறைகூறுகிறோம். அவர்கள் என்ன செய்தனர் என்பதைக் கவனியுங்கள். அவர்களுக்கு என்ன காத்துக் கொண்டிருந்தது என்பதை அறிந்திருந்தனர், ஒருவேளை அடுத்த நாள் காலையில் மரண தண்டனை அவர்களுக்குக் கிடைக்கலாம். 16.ஆனால் அவர்கள் உண்மையுள்ளவர்களாயிருந் தனர்.அவர்கள்-அவர்கள்... நம்பிக்கைக்குரியவர்களாய் நிலைத் திருந்தனர். ஏறக்குறைய நடுஇரவு மட்டுமாக அங்கே உள்ளே இருந்தனர், அவர்கள் எவ்வாறு உணர்ந்திருக்க வேண்டும் என்பதை என்னால் - என்னால் அப்படியே சிந்தித்துப் பார்க்க முடிகிறது, அவர்களுடைய முதுகுகள் அந்தப் பழைய அசுத் தத்தில் ஒட்டிக்கொண்டிருந்தது, அங்கே கைதிகள்... அந்நாட் களில் குஷ்டரோகங்களும் மற்ற ஒவ்வொன்றும் இருந்தன, குஷ்டரோகிகள் அந்தக் கடினமான பழைய தரையில் படுத் திருப்பார்கள்... நிச்சயமாக, அது ஒரு அசுத்தமான தரையாக இருந்திருக்கும், எலிகள் அவர்கள் மேல் ஓடிக் கொண் டிருந்தன... ஆனால் அவையெல்லாவற்றின் மத்தியிலும் அநேக மாக இரவு உணவு அவர்களுக்கு இல்லாதிருந்தது. அவர் களுக்கு இரத்தம் வழிந்து, காயமுண்டாகி, புண் ஏற்படுவது மட்டுமாக அவர்கள் அடிக்கப்பட்டனர். காயங்களைக் கழுவ மருத்துவர் கிடையாது, அல்லது தொற்று நோய்க்காக இன்று நாம் உபயோகப்படுத்துகிற எதுவும், அல்லது அதைப்போன்ற எதுவும் கிடையாது. அவர்களைத் தொழுமரத்தில் மாட்டி வைத்து, அவர்களை அங்கே பின்பகுதியில் போட்டு விட்டார் கள், அவர்கள் அந்த நிலையில் வைக்கப்பட்டிருந்தார்கள். ஆனால் அவர்களோ குறைகூறிக் கொண்டிருக்க வில்லை. அவர்களிடமிருந்து குறைகூறும்படியான ஒரு வார்த் தையும் வரவேயில்லை. ஒருக்கால் அடுத்த நாள் காலையில், அவர்கள் --நியாயாதிபதிகள் அநேகமாக அவர்களை பேரரசர் முன்பாக அழைப்பார்கள் என்றும், அவர்கள் அவ்வாறு அழைக்கப்படும்போது, மதத்திற்கு விரோதமான இக்கொள்கை யை (heresy)  - (அந்நாட்களில் அவ்வாறுதான் அதை அழைத்தார்கள்) பிரசங்கம் பண்ணினதற்காக அவர்கள் சனகரீப் சங்கத்தினரால் மரணதண்டனையைப் பெற்றுக் கொள்ளக்கூடும் என்பதையும் அறிந்திருந்தார்கள். நாம் உண்மையாகவே இன்று அந்த அதே விசுவாசத்திற்காக தைரியமாய் போராடுகிறோமே, அதே சுவிசேஷம் தான் அது... அப்படியானால் நாம் அதைக் குறித்து சிந்தித்துப் பார்க்கப் போனால், ஒருவர் மற்றவருக்கு இடையேயுள்ள மைல் தூரங்கள் கொஞ்சம் மைல் தூரங்களாக குறைந்து விடும், (நீங்கள் பாருங்கள்?), நாம் அதைக் குறித்து சிந்தித்துக் கொண்டேயிருக்கிற ஒவ்வொரு தடவையும் அது அப்படியே ஆகி விடும். 17.அதன்பிறகு, ஏறக்குறைய நடுராத்திரி முழுவதும் நாம் அதைக் கண்டு கொள்ளுகிறோம், பவுலும் சீலாவும் ஏறக் குறைய நடுராத்திரி மட்டுமாக கர்த்தரைக் குறித்துப் பேசி யிருக்க வேண்டும், அதன்பிறகு அவர்கள் கீர்த்தனைகளை, ஏதோவொரு நல்ல பழைய கிறிஸ்தவ பாடலை பாடத் தொடங்கினர். ஓ, நாம் இன்று அதைப் பாடுவோமானால், நாம், ‘இரத்தத்தில் வல்லமை உண்டு’ என்றோ, அல்லது ‘ஓ, நான் இயேசுவை எவ்வளவாய் நேசிக்கிறேன்’ என்றோ அல்லது அதைப் போன்ற ஏதோவொரு பாடலைப் பாடியிருப்போம். அவர்கள் பாடல் பாடத் தொடங்கின போது, சடுதியாக ஒரு பூமியதிர்ச்சி அந்த இடத்தைத் தாக்கியது. அது எவ்வாறு சம்பவித்தது என்பதைக் கவனியுங்கள். அந்தப் பெரிய பழைய கட்டிடத்தின் அச்சுவர்கள் அவைகளின் உச்சியிலிருந்து ஒன்றன் மேல் ஒன்றாக விழுந்து, அவர்களைக் கூழாக்கி, அவர்கள் சாவதற்குப் பதிலாக, அது அந்த சுவர்களைப் பலமாக அசைத்து அவர்களுக்கு அப்பால் குலுக்கியது. அது மட்டுமல்ல, அது-அது-அது அந்த தொழுமரங்களையும், கம்பி களையும் உடைத்துப் போட்டு, அவர்களைக் கட்டவிழ்த்தது. அவர்கள் விடுவிக்கப்பட்டார்கள். இப்பொழுது, அதை சிந்தித்துப் பாருங்கள். அவர் களுடைய கால்களுக்கு மேலேயும், அவர்களுடைய கைக ளுக்கு மேலேயும், அவர்களுடைய கழுத்துக்கு மேலேயும், அவர்கள் விடுவிக்கப்பட்டார்கள், அவர்கள் ஒவ்வொருவரும் விடுவிக்கப்பட்டார்கள். இப்பொழுது, அந்தப் பழைய பெரிய கனமான ரோமச் சிறைச்சாலை அவர்கள் மேல் உடைந்து விழுவதற்குப் பதிலாக, அது அவர்களுக்கு வெளியே இவ்விதமாக விழுந்தது; அது மட்டுமல்ல, விலங்குகளும் காரியங்களும் அவர்களுக்கு வெளியே போய் விழுந்தது. 18.பாருங்கள், அதுதான் நமது தேவன், நாம் விசுவா சத்தை தொடர்ந்து பற்றிக் கொண்டிருக்கும் போது. பாருங்கள், நாம் நிச்சயமாக திடமான விசுவாசத்தில் தரித்திருக்க வேண் டும். நாம் விசுவாசமுள்ளவர்களாய் இருக்கும் காலம் வரையில் தொடர்ந்து, நாம்... இப்பொழுது, நாம் ஒருக்கால் அந்தவிதமான ஒரு தோற்றத்தில் இல்லாமல் இருக்கலாம். நாம் - நம்மில் யாருமே ... (அப்படி) இல்லாமல் இருக்கலாம். நாம் அவ்விதமாக இல்லை என்று நான் நம்புகிறேன். ஆனால் நாம்-நாம் எதனூடாக கடந்து செல்ல வேண்டுமோ அதில் நாம் விசுவாசமுள்ளவர் களாய் இருக்க முடியும். அது ஒருக்கால் ஒரு உபத்திரவமாக இருக்கலாம், ஒருவேளை அது உங்களைப் பார்த்து சிரிக்கிற யாரோ ஒருவராக இருக்கலாம். ஒருக்கால் ‘நீங்கள் பழங்காலத்தவர், நீங்கள் ஒரு பரிசுத்த உருளை’ என்றோ, அல்லது அவர்கள் உங்களை அழைக்க விரும்புகிற எதுவாகவோ, அல்லது உங்களைக் கேலி செய்கிற எதுவாகவோ, அல்லது ஏதோவொன்றாகவோ அது இருக்கலாம். நாம் அப்படியே மாறாமல் விசுவாசமுள்ளவர்களாய் இருப்போம், ஏனென்றால் அவர்கள்-அவர்கள் எதனூடாகப் போக வேண்டியிருந்ததோ அவற்றில் அவர்கள் விசுவாசமுள்ளவர்களாயிருந்ததை தேவன் கனப்படுத்தின அதேவிதமாகவே தேவன் நம்முடைய விசுவாசத்தையும் கனப்படுத்துகிறார். 19.அப்போது, திடீரென்று, அந்த சிறைச்சாலைக்காரன் - அல்லது நூற்றுக்கதிபதி நிச்சயமாக - நிச்சயமாகவே... அந்த வாசல் காவலாளன், அவன் நிச்சயமாக அவைகளை ஆழ்ந்து சிந்தித்துக் கொண்டிருந்திருக்க வேண்டும். அந்த இராத்திரியில் பவுலும் சீலாவும் வேதவாக்கியத்தின் பேரில் பேசிக் கொண் டிருந்த போது, அவன் ஏதோவொன்றை கற்று அறிந்திருக்க வேண்டும், ஏனென்றால் அவனுக்கு அம்மனிதர்களைத் தெரி யாது, ஆனால் அவன் ஏதோவொரு விதத்தில் அறிந்திருக்க வேண்டும், அல்லது அவர்கள் பாடிக் கொண்டிருந்ததைக் கேட்டிருக்க வேண்டும், அல்லது அவர்கள் பரிசுத்தமான மனிதர்கள் என்று துரிதமான அவனை அறியச் செய்வதற்குக் காரணமான ஏதோவொன்றை அவன் கொண்டிருந்திருக்க வேண்டும். ஏனென்றால், நீங்கள் பாருங்கள், அவர்கள் - அவன் ஒரு ரோமனாயிருந்தான், அவர்களோ யூதர்களாயிருந்தனர். அவன் வேற்று மதத்தினனாயிருந்தான் (pagan), அவர்களோ கிறிஸ்தவர்களாயிருந்தனர். ஆனால் நீங்கள் கவனித்தீர்களா? அந்த சிறைச்சாலை குலுங்கி அசைந்து விழுந்து போனதை அவன் கண்டவுடனே, அவன் அந்த இரவு நேர காவலுக்காக பதில்கூறியாக வேண்டியிருந்ததை அவன் அறிந்து கொண்டான்... எலியாவின் காலத்தில், அவன் தானே மாறுவேடமிட்டு, அங்கே வெளியேயிருந்த ஆகாப் இராஜாவை சந்தித்து, ‘நான் ஒரு காவலாளியாக இருந்தேன் மேலும் என்னுடைய ஜீவனா னது, முழுமையாக, அந்த மனிதனோடு பிணைக்கப்பட்டிருந் தது, அவனோ தப்பி ஓடி விட்டான்’ என்று கூறினது உங்களுக்கு ஞாபகம் உள்ளதா? 20.அவன், ‘நல்லது, அப்படியானால் நீ அதற்காக உன்னுடைய ஜீவனை கிரயம் செலுத்துவாய். அது ஒரு காவலாளியின் கடமையன்றோ’ என்றான். 21.எனவே அவன் தானே மாறுவேடத்தைக் கலைத்து, தான் எலியா தீர்க்கதரிசி என்று கூறினான். ‘நீ அந்த ஆகாக் இராஜாவை போக விட்டு விட்டாய். நீ-நீ அதற்காக உன்னு டைய சொந்த ஜீவனையே கிரயமாக செலுத்துவாய்’ என்றான். அவன் அதைச் செய்தான். 22.எனவே பிறகு, இந்த ரோம நூற்றுக்கதிபதி இதற்காக தன்னுடைய சொந்த ஜீவனையே கிரயமாக செலுத்த வேண்டி யிருந்ததை அறிந்து கொண்டான் என்பதை நாம் கண்டு கொள்கிறோம், அவர்கள் போய் விட்டார்கள் என்று அவன் கண்டவுடனே, அவன் தனது பட்டயத்தை உருவி - அவன் அந்த தண்டனையினூடாகக் கடந்து போக வேண்டியதற்குப் பதிலாக தன்னுடைய சொந்த ஜீவனை எடுத்துப் போடும்படி தன்னைத்தானே கொலை செய்யத் தொடங்கினான். அவர் களில் சிலர்... ஒருக்கால் அவன் மரித்துப் போகும் வரையில், அதேவிதமான தொழுமரங்களிலும் மற்றவைகளிலும் உட்கார் ந்து இருக்க வேண்டியிருக்கும். எனவே, அவை எல்லா வற்றையும் ஒரு முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று எண்ணினவனாய், அவனுடைய பட்டயத்தை சட்டென உருவி, தன்னைத்தானே கொலை செய்ய (முயன்றான்). 23.ஆனால் பவுல் அதைக் கண்ட போது, அவன் தீவிரமாய் உரத்த சத்தமிட்டு, ‘நீ உனக்குக் கெடுதி ஒன்றுஞ் செய்து கொள்ளாதே; நாங்கள் எல்லாரும் இங்கே தான் இருக்கின்றோம்’ என்றான். பாருங்கள்? அவர்கள் கிறிஸ்தவ மனிதர்களாகவோ அல்லது பரிசுத்த மனிதர்களாகவோ இருந் தார்கள் என்று இம்மனிதனை அறிந்து கொள்ளும்படி செய்வ தற்கு முன்பாக அங்கே ஏதோவொன்று சம்பவித்துக் கொண் டிருக்க வேண்டும் என்பதை அப்போது அந்த மனிதன் உணர்ந்து கொண்டான், ஏனென்றால் அவன் துரிதமாக அவர் களுடைய கால்களில் விழுந்தான். அவர்கள் பாடல்களைப் பாடிக் கொண்டிருந்ததை அவன் கேட்டதை நான் கற்பனை பண்ணிப் பார்க்கிறேன். அவர்கள் சாட்சி கூறிக் கொண்டிருந்ததையும் அவன் கேட் டான்; அவன் அவர்களுடைய (சம்பாஷணைகளையும்) உரையாடலையும் கேட்டான். 24.இப்பொழுது, ஜனங்களே, நாம் அப்படியே ஒரு நிமிடம் சிந்தித்துப் பார்ப்போம். அடிக்கப்பட்ட கைதிகளா யிருந்த அந்த இரண்டு மனிதர்கள் (இப்பொழுதோ, நாம் இன்னும் விடுதலையாகவே இருக்கிறோம், நாம் அடிக்கப் படவில்லை, அல்லது கைதிகளாகவும் இல்லை) பேசிக் கொண் டிருந்ததை அவன் கேட்டதினிமித்தமாக அந்த ரோம நூற்றுக் கதிபதி நம்பி, ஏற்றுக் கொண்டான், ஆனால் அவர்களுடைய சாட்சியை அவன் கேட்டுக் கொண்டிருந்தது, ‘இரட்சிக்கப்படுவ தற்கு நான் என்ன செய்ய வேண்டும்?’ என்று அவன் கூறக் காரணமாகும் அளவுக்கு அவ்வளவு ஒரு தாக்கத்தை ஏற்படுத் தியிருந்தது, அப்படியானால் நம்முடைய செல்வாக்கைக் கொண்டு நாம் என்ன செய்ய வேண்டும்? பாருங்கள்? நாம் சாட்சி கூற வேண்டும். வாலிப ஜனங்களே, அது என்னவாக இருந்தாலும் நாம் அதைச் செய்ய வேண்டும். நீங்கள் ஒருக்கால் பிரசங்கம் பண்ணாமல் இருக்கலாம். ஒருக்கால் தேவன் உங்களை பிரசங்கம் பண்ண அழைக்காமல் இருக்கலாம், ஆனால் நீங்கள்... நீங்கள் ஒரு இல்லத்தரசி யாகவோ, அல்லது நீங்கள் என்னவாக இருந்தாலும், அல்லது ஒரு டீன்ஏஜ் பிள்ளையாகவோ இருந்தாலும், நாம் எதை யாகிலும் செய்வோம், அது உங்களுக்குத் தெரியும்... ஜனங்கள், ‘நல்லது, அங்கே போய்க் கொண்டிருக்கிறானே அவன் தான் கிறிஸ்தவன். அது தான் - அவன் தான் கிறிஸ்தவன்’ என்று அவர்களைக் கூறச் செய்கிற ஒரு ஜீவியம் ஜீவியுங்கள். 25.எனவே, அவர்கள் கிறிஸ்தவர்கள் என்று இந்த மனிதன் உணர்ந்து கொள்ளும்படியாக, அவர்களுடைய பாடல் களின் மூலமாகவோ, அல்லது அவர்கள் அங்கே உள்ளே செய்து கொண்டிருந்த எதுவாக இருந்தாலும், அதன் மூலமா கவோ, ஏதோவொரு விதத்தில் ஈர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்பதை நாம் கண்டு கொள்கிறோம். எனவே, அவன் ஒரு வெளிச்சத்தைப் பெற்றுக் கொண்டான், அவன் உள்ளே வந்து பவுல் அங்கே நின்று கொண்டிருந்ததை கண்ட போது, அங்கே உள்ளே பின்புறத்திலிருந்த அந்தக் கைதிகள் கூட, அவர்கள் யாருமே தப்பிச் செல்லும்படி முயற்சி செய்யவேயில்லை. எல்லாருமே அங்கே தான் இருந்தனர். எனவே, அவன்-அவன் தன்னுடைய பட்டயத்தை வைத்து விட்டு, பவுல் மற்றும் சீலாவுடைய கால்களில் விழுந்து, ‘ஆண்டவமாரே, இரட்சிக்கப் படுவதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?’ என்று கேட்டான். 26.இப்பொழுது, நீங்கள் கவனித்தீர்களா, இன்று நீங்களும் நானும் - பெரும்பாலும் எல்லா ஊழியக்காரர்களும் அல்லது மற்றவர்களும் - நாம் எப்போதுமே ஒரு நபரிடம் எதைச் செய்யக் கூடாது என்று கூறவே முயற்சிக்கிறோம். நாம், இப்பொழுது, ‘நீ புகைபிடிப்பதை விட்டு விடு. பொய் பேசுவதை விட்டு விடு. திருடுவதை விட்டு விடு. உன்னுடைய இதை, அல்லது அதை விட்டு விடு’ என்று கூறுகிறோம். 27.இப்பொழுது அந்த மனிதன் கேட்டது அதுவல்ல.அவன்-அவன், ‘நான் இரட்சிக்கப்படுவதற்கு எதை விட்டு விட வேண்டும்?’ என்று கேட்கவில்லை. அவன், ‘இரட்சிக்கப்படுவ தற்கு நான் என்ன செய்ய வேண்டும்?’ என்று தான் கேட்டான். 28.பாருங்கள், அவர்கள் செய்து வரும் எதை கட்டாயமாக விட்டு விட வேண்டும் என்று நாம் அவர்களிடம் கூற முயற்சிக்கிறோம். பாருங்கள்? ‘நல்லது, நான் நிச்சயமாக இதை, அதை அல்லது மற்றதைச் செய்தாக வேண்டும்’ என்று கூறுகிறோம். இல்லை. பாருங்கள்? அதுவல்ல கேள்வி. ‘நான் என்ன செய்ய வேண்டும்?’ என்பது தான் கேள்வி; ‘நான் எதை விட்டு விட வேண்டும்’ என்பதல்ல. ஆனால் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று உங்களிடம் எதிர்பார்க்கப்படுகிறதோ, சரியாக அதையே நீங்கள் செய்யுங்கள், மற்ற எல்லா காரியங் களும் தானாகவே கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும். ‘இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?’ என்ற கேள்விக்கு பவுல் அளித்த பதிலை நீங்கள் செய்யும் போது, உங்களுடைய பொய் பேசுதல், திருடுதல், அல்லது-அல்லது மது அருந்துதல், சூதாடுதல், பொல்லாங்கான காரியங்களை செய்தல், அவை (யாவும்) நின்று விடும். 29.அவன், ‘கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள் (அப். 16:31)’ என்றான். 30.இப்பொழுது, இதைக் கூறுவதைக் குறித்து நான் எண்ணிப் பார்த்ததற்கான காரணம் என்னவென்றால், இங்கே யிருக்கிற ஜனங்களாகிய உங்களின் நிமித்தமாகத்தான், உங்க ளில் அநேகரும்,உங்கள்-உங்களுடைய பிள்ளைகளும் இரட்சிக்கப்பட்டவர்களாயிருக்கிறீர்கள், பாருங்கள்? அவர்கள் கிறிஸ்தவர்களாயிருக்கிறார்கள். நான் சகோதரன் ஈவான்ஸ் அவர்களுடைய குடும்பத்தினரையும், இங்கேயிருக்கிற இந்த வாலிபர்களையும் பாராட்டினேன். வழக்கமாக, நீங்கள் யாரைப் பெற்றுக் கொள்வீர்கள் என்றால், சுற்றிலும் உட்கார்ந்து, ஏதோ வொரு பிரசங்கியார் பேசுவதை கவனித்துக் கேட்கும் ஒரு டீன்ஏஜ் பிள்ளையையா? ஏன், அவர்கள் வெளியே இருந்து எங்கேயோ போய் விட்டனர். அவ்விதமாக சிறு பெண் பிள்ளைகளும்... நான் சகோதரன் ஃபிரட் அவர்களிடம் கூறினேன், ஏன், அவருடைய வாலிப பிள்ளைகள், அவர்கள்-அவர்கள் தவறாக இருக்கும் ஒரு காரியத்தை நான் கூறுவதை சற்று கேட்கக் கூடுமானால், அவர்கள்-அவர்கள்-அவர்கள் அதைச் சரியாக இப்பொழுதே நிறுத்தி விட ஆயத்தமாயிருக்கிறார்கள், (நீங்கள் பாருங்கள்?) வேகத்தை அதிகப்படுத்துவதற்காக மாற்றியமைக் கப்பட்ட மோட்டார் வாகனம் நோக்கம் ஏதுமின்றி சுற்றித் திரிவது (போல) வெளியே அலைந்து திரிவதற்குப் பதிலாக, அவர்கள் உயர்ந்த மரியாதையோடு உட்கார்ந்திருக்கிறார்கள். அவர்கள்... நீங்கள் சுவிசேஷத்தைக் குறித்துப் பேசுவதை அவர்கள் கேட்கும் போது, அவர்கள் அங்கேயே உட்கார்ந்து அதற்குக் கவனம் செலுத்த ஆயத்தமாயிருக்கிறார்கள், பாருங்கள்? இப்பொழுது, நாம் எல்லாருமே - அதை விரும்பு கிறோம் என்பது எனக்குத் தெரியும், நம்முடைய வாலிப பிள்ளைகள் ரவுடிகளாகவும் அதைப் போன்ற காரியங்களா கவும் இருக்கிறார்கள் என்று நினைக்கிறோம், ஆனால் நாம்- நாம் அதை நிறுத்தியாக வேண்டும். இந்தப் பிள்ளைகள் உலகத் திலேயே மிகச்சிறந்த வாலிப பிள்ளைகளாக இருக்கிறார்கள் என்பதை நாம் நினைவில் கொண்டாக வேண்டும் என்று நான்- நான் நம்புகிறேன், ஏனென்றால் அவர்கள் நம்முடைய பிள்ளை களாக இருக்கிறார்கள், நாம் தேவனுக்காக அவர்களை உரிமைகோருகிறோம். 31.இப்பொழுது, உங்களுடைய இரட்சிப்பானது அந்தப் பிள்ளையை இரட்சிக்காது. ஆனால் இப்பொழுது, பவுல், ‘கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள் (அப். 16:31)’ என்றுகூறினான்-கூறினான். இப்பொழுது, அவன்... இப்பொழுது, அவன் அதன் மூலமாக எதை அர்த்தப்படுத்துகிறான்? அவர் கள் இரட்சிக்கப்பட்டதன் நிமித்தமாக அதனோடு அவர் களுடைய வீட்டாரும் இரட்சிக்கப்படுவார்கள் என்ற அர்த்தத் தில் அவன் கூறவில்லை. அவன் இவ்வாறு தான் அதை அர்த்தப்படுத்திக் கூறுகிறான்: தான் இரட்சிக்கப்படுவதற்கு அவனுக்குப் போதுமான விசுவாசம் இருக்குமானால், அவனு டைய இரட்சிப்புக்காக அவன் கொண்டிருந்த அவனுடைய அதே அளவு விசுவாசமானது அவனுடைய பிள்ளைகளுக் காகவும் கிரியை செய்யும் என்பதை தான் அவன் பொருள் படுத்திக் கூறுகிறான். ஏனென்றால் அவர்கள்... நான் என்ன கூறுகிறேன் என்பது புரிகிறதா? 32.இப்பொழுது, எனக்கும் பிள்ளைகள் இருக்கிறார்கள். அங்கே என்னுடைய சிறிய மகன் ஜோசப்பும், பில்லியும், சாராவும், ரெபேக்காவும் இருக்கிறார்கள். நல்லது இப்பொழுது, அவர்கள் ஒவ்வொருவருமே சுவிசேஷத்தில் ஒரு வேலை யாளாய் இருந்து ஏதோவொன்றை செய்து கொண்டிருப்பதை காணவே நான் விரும்புகிறேன். அவர்கள் இரட்சிக்கப்பட்டு, பரிசுத்த ஆவியால் நிறையப்படுவதைக் காணவே நான் விரும்புகிறேன். இப்பொழுது, நானோ அவர்களை தேவனிடமே ஒப்புக் கொடுத்து, ‘அவர்களுக்காக தேவனையே பற்றிக் கொண்டிருக் கிறேன்’ என்று தான் நான் கூறுகிறேன். பாருங்கள்? அவர்கள் இரட்சிக்கப்படப் போகிறார்கள் என்று நான் விசுவாசிக்கிறேன், அவர்கள் ஒவ்வொருவருமே. பாருங்கள்? அவர்கள் இரட்சிக் கப்படப் போகிறார்கள் என்றும், நான் அவர்களை அக்கரையில் கொண்டிருப்பேன் என்றும் விசுவாசிக்கிறேன். என்னுடைய இரட்சிப்பு அவர்களையும் இரட்சித்து விடும் என்று நான் நம்புவதில்லை. இல்லை. ஆனால் தேவனிடம் உள்ள என்னுடைய விசுவாசம் அதைச் செய்யும். நீங்கள் பாருங்கள், தேவன் அதைச் செய்வார் என்று என்னுடைய விசுவாசம் நம்பிக் கொண்டிருக்கிறது, அதுவே அவர்கள் கிறிஸ்துவிடம் வருவதற்குக் காரணமாகும். 33.அங்கு தான் ஜனங்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளை களுக்காக ஜெபித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று நம்புகிறேன், ஆகையால் தான் நாம் ஜீவித்துக் கொண்டிருக்கிற இந்த ஒழுக்கக்கேடான காலத்தில் உங்களுடைய பிள்ளைகள் (நல்)நடத்தை உடையவர்களாகவும், உண்மையான சீமாட்டி களாகவும், நற்பண்புகள் கொண்ட பெரிய மனிதர்களாகவும் இருக்கிறார்கள். இருப்பினும் எந்த வாலிப பிள்ளைகளிடத் திலும் நான் அறிந்திருக்கிற அவர்களைக் குறித்த மிகச்சிறந்த அந்தப் பாகத்தை அவர்கள் கொண்டிருக்கிறார்கள். பாருங்கள்? நல்லது, அதற்குக் காரணம் என்னவென்றால், அவர்களுக்காக நீங்கள் ஜெபிக்கிற ஜெபங்கள் தான் என்று நினைக்கிறேன், மேலும் நீங்கள் அவர்களை தேவனிடத்தில் ஒப்புவித்து, பொறுமையோடு காத்துக் கொண்டிருக்கிறீர்கள். 34.பாருங்கள் இப்பொழுது, அந்த ரோமன், ‘நான் என்ன செய்ய வேண்டும்?’ என்று கேட்கிறான். அவன் வெறு மனே தனக்காகத் தான் அதைக் கேட்டான். அவன், ‘நான் என்ன செய்ய வேண்டும்?’ என்று கேட்டான். 35.அவனோ (பவுலோ), ‘கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக் கப்படுவீர்கள்’ என்று கூறினான். பாருங்கள்? 36.இப்பொழுது-இப்பொழுது, நாம் செய்ய வேண்டிய ஒரு காரியத்தைப் புரிந்து கொண்டு விட்டோம். என்னுடைய பாடத்தை விளக்கிக் கூறுவதற்கான ஒரு காரியத்தை பெற்றுக் கொள்வதற்காக, நாம் அப்படியே ஒரு நிமிடம் பின்னால் திரும்பிச் செல்வோம். இப்பொழுது, இதோ அது இருக்கிறது. வேதாகமத்தில் நான் அறிந்த யோபு என்ற பெயருடைய ஒரு வயதான மனிதனை எடுத்துக் கொள்வோம். இப்பொழுது, யோபு ஒரு மகத்தான மனிதனாக இருந்தான். அவனுடைய நாட்களில் அங்கே அவனைப் போல யாருமேயில்லை. யோபு ஒரு தீர்க்கதரிசியாக இருந்தான். யோபு பேசுவதைக் கேட்க தூரத்திலிருந்தும் சமீபத்திலிருந்தும் ஜனங் கள் வருவார்கள். தேவன் அவனை ஆசீர்வதித்தார். அவன்- அவன் செழிப்படைந்திருந்தான், அவன் ஒரு ஐசுவரியவான் (செல்வந்தன்). ஓ, அவனிடம் ஆயிரக்கணக்கான கால்நடை களும், ஆடுகளும் மற்றும் அவனுக்கு சொந்தமான காரியங் களும் இருந்தன. ஏன், அவன் வெளியே வீதிகளில் செல்லும் போது, கிழக்கிலிருந்து வந்த வாலிப பிரபுக்கள் (அவர்கள் சாஸ்திரி களாகவும் (Magis), ஞானிகளான வான சாஸ்திரிகளாகவும் (wise astronomers) இருந்தனர் என்பது உங்களுக்குத் தெரி யும்) அவர்கள் பேசுவார்கள் என்றும்- அவர்கள் அவனுடைய ஞானத்தைக் கேட்கும்படியாக அவனுக்கு முன்பாக குனிவார் கள் என்று அவன் கூறினான். பாருங்கள்? அவன் ஒரு விவேகமுள்ள (புத்திசாலியான - smart)  மனிதனாயிருந்தான். அவன்-அவன் ஒரு தீர்க்கதரிசியாகவும் இருந்தான். 37.எனவே, பிசாசு கீழே நோக்கிப் பார்த்து, அவன் ஒரு விவேகமுள்ள மனிதன் என்று கண்டான். எனவே, ஒரு விவேகமுள்ள மனிதன் என்ன செய்கிறான் என்பதை நான் உங்களுக்குக் காண்பிக்கிறேன். இப்பொழுது, ‘நீயும் உன் வீட்டாரும்’ என்ற பாடத்திற்கே திரும்பி வந்து கொண்டிருக் கிறேன். யோபு கூறினான், எல்லாமே அப்படியே நல்ல ஒழுங்கில் இருந்ததை அவன் கண்ட போது (இப்பொழுது உங்களுடைய வீடுகள் இருப்பதைப் போல); அவன், ‘என்னு டைய பிள்ளைகள் விவாகம் செய்து, தூரமாய் போயிருக்கி றார்கள் என்று உங்களுக்குத் தெரியும்.’ ஆனால், ‘ஒருக்கால், ஒருவன்-ஒருவன்... தற்செயலாக அவர்களில் ஒருவன் பாவம் செய்திருக்கலாம்’ என்று கூறினான். இப்பொழுது, அங்கே தேவனுக்கு ஒன்று தான் அவசிய மாயிருந்தது: அதுதான் சர்வாங்க தகனபலி (burnt offering). இப்பொழுது, ‘நான்... (நம்ப)வில்லை’ என்று அவன் கூறினான். அவனுடைய பிள்ளைகள் பாவம் செய்திருப்பார்கள் என்பதை அவன் நம்பவில்லை. ‘ஆனால்,’ ‘அவர்கள் ஒருக்கால் பாவம் செய்திருக்கலாம். ஏனென்றால் அவர்கள் ஒருவரையொருவர் சந்தித்து, ஒருவர் மற்றவருடைய வீடுகளுக்கும், மற்ற இடங் களுக்கும் விருந்துகளுக்கு போய் ஒன்று கூடுகிறார்கள், மேலும் மற்ற காரியங்களையும் செய்கிறார்கள் என்று யூகிக்கி றேன்’ என்றான். அவன், ‘எனவே கர்த்தாவே, அவர்களில் ஒருவன் பாவம் செய்திருந்தால், நான் ஒரு சர்வாங்க தகன பலியைக் கொண்டு வந்து, என்னுடைய பிள்ளைக்காக இந்த சர்வாங்க தகன பலியைச் செலுத்துகிறேன்’ என்றான். பாருங் கள்? செய்ய வேண்டுமென்று அவனுக்குத் தெரிந்ததெல்லாம் அவ்வளவு தான். தேவனுக்கு அவசியமாயிருந்ததும் அவ்வளவு தான். ஒரு சர்வாங்க தகன பலி, அவ்வளவு தான் அவருக்குத் தேவையாயிருந்தது. 38.நல்லது, அதன்பிறகு, அந்தப் பெரிய நள்ளிரவு வேளை வந்து தாக்கி, பரிதாபமான அந்த வயது சென்ற யோபு, அவன் அந்நிலைக்குள்ளான போது, அவன்... அவன் தன்னு டைய எல்லா கால்நடைகளையும், அவனுடைய எல்லா ஆடு களையும் இழந்து விட்டிருந்தான் என்பது உங்களுக்குத் தெரி யும், புயல்கள் வந்து அவனுடைய பிள்ளைகளைக் கொன்று போட்டது. அக்கினியோ அவனுடைய ஊழியக்காரர்களை பட்சித்தது. மேலும்-மேலும் அவன்... அவனுடைய சொந்த உடல் ஆரோக்கியமே (கெட்டுப்) போய் விட்டது. அவன் வீட்டின் பின்புறத்திலுள்ள ஒரு சாம்பல் குவியலின் மேல் உட்கார்ந்தான். அவன் ஒரு ஓட்டுத்துண்டை (crock) எடுத்து, தன்னுடைய பருக்களை சுரண்டும் அளவுக்கு அவனுடைய சொந்த சரீரமே பருக்களால் உடைக்கப்பட்டு போயிருந்தது. அவனுடைய மனைவி கூட அவனுடைய மனம் தளர்ந்து போகும்படி செய்தாள், அவள் வந்து, ‘யோபே...’ என்று கூறினாள். 39.இப்பொழுது, அவள் அதைக் கூறின விதத்தை நாம் சற்று அனுதாபத்தோடு சிந்தித்துப் பார்ப்போம். இப்பொழுது, கவனியுங்கள், அங்கே யோபு உட்கார்ந்திருக்கிறான். அவன் அங்கே வெளியே இரவு முழுவதும் உட்கார்ந்து கொண்டிருந்தான். அவனுடைய தேற்றரவாளர்கள் தங்களுடைய முதுகை அவனுக்குத் திருப்பினவர்களாயிருக்க அவன் அங்கே உட்கார்ந்திருந்தான். அவன் பாவம் செய்தவன் என்று அவர்கள் அவனிடம் கூறினார்கள். அது தான் சபை அங்கத் தினன்; அது தான் டீக்கன் வாரியம், அல்லது அது சபை யினுடைய என்னவாக இருந்தாலும் அது, அவர்கள் அவனைக் காண வந்தனர். அவர்கள் அங்கே ஏழு நாட்களாக உட்கார்ந்து, இன்னும் அவனைப் பார்த்து, ‘யோபே, நீ நன்றாக அறிக்கை செய்தாக வேண்டும். ஏனென்றால் நீ பாவம் செய்திருக்கிறாய், காரணம் என்னவென்றால் தேவன் இதைப்போன்ற வாதையை ஒரு நீதிமானுக்கு அனுமதிக்க மாட்டார்’ என்று கூறிக் கொண்டிருந்தனர். ஆனால் தேவன் ஒரு நீதிமானுக்கு அதைப் போன்ற தாங்க முடியாத வேதனையை அனுமதிக்கிறார். பாருங்கள், தேவன் சிலசமயங்களில்... நாம் பாவம் செய்த காரணத்தினால் நமக்குக் காரியங்கள் சம்பவிக்கின்றன. ஆனால் சிலசமயங்களில் ஒரு பாவியை தண்டிப்பதற்குப் பதிலாக, அது-அது ஒரு பரிசுத்தவானை சோதிக்கிறது. ஆகவே, தேவன் யோபை சோதித்த போது, (என்ற போதிலும்) அவன் ஒரு நீதிமானாயிருந்தான் என்று நாம் கண்டு கொள்கிறோம், ஏனென்றால் சாத்தான், ‘ஓ, நிச்சயமாகவே...’ என்றான். அவன் மேலே வந்து, தேவனுக்கு முன்பாக (நின்ற) போது, தேவ புத்திரர்களும் உடனிருந்தார்கள், அவன்... என்று கூறினான். 40.தேவன் அவனிடம், ‘நீ எங்கேயிருந்து வருகிறாய்?’ என்று கேட்ட போது, அவன், ‘ஓ, பூமியெங்கும் உலாவி, அதில் சுற்றித்திரிந்து வருகிறேன்’ என்றான். 41.அவர், ‘என் தாசனாகிய யோபுவின் மேல் கவனம் வைத்தாயா? அவன் ஒரு உத்தமன். அவனைப் போல பூமியில் ஒருவனும் இல்லை’ என்றார். தேவனுக்கு அது பிரீதியா யிருந்தது. ஓ, அவர் மேல் நம்பிக்கை வைக்கக்கூடிய ஒரு ஊழியக்காரனைக் கொண்டிருப்பதற்கு அவர் விரும்புகிறார். அவர், ‘அவனைப் போல பூமியில் வேறொருவன் இல்லை’ என்றார். பாருங்கள்? ‘அவன் உத்தமன்’ என்றார். அது இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சிந்தப்படுவதற்கு முன்பாக, பாருங்கள்? அவர், ‘அவன் உத்தமன். அவன் நீதிமான்; அவன் சன்மார்க் கன். அவனைப் போல யாருமேயில்லை’ என்றார். 42.சாத்தான், ‘ஓ, நிச்சயமாக. நீர் அவனுக்காக என்ன செய்திருக்கிறீர் என்பதைக் கவனித்துப் பாரும். நீர் அவனுக்கு எல்லாவற்றையும் கொடுத்திருக்கிறீர். அவனுக்கு வீடுகள் இருக் கின்றன; பிள்ளைகள் இருக்கிறார்கள்; கால்நடைகள் உள்ளன, அவன் விரும்புகிற யாவுமே அவனுக்கு இருக்கின்றன. நிச்சய மாகவே, அவ்விதமாக எவருமே உம்மை சேவிக்க முடியும். அவனை ஒரு தடவை என்னிடம் கொடுத்து விடும், அப்பொழுது நான் அவனை உமது முகத்துக்கு எதிரே உம்மைத் தூஷிக்கச் செய்வேன்’ என்றான். 43.அவர், ‘சாத்தானே, அவன் உன் கையிலிருக்கிறான். ஆனால் அவனுடைய ஜீவனை எடுக்காதே’ என்றார். இப்பொ ழுது, அவருடைய தீர்க்கதரிசி அவர் ஏமாற்றமடையும்படி செய்ய மாட்டான் என்ற தேவனுடைய நம்பிக்கையாக அது இருக்கிறது. பாருங்கள்? அவர் உங்களையும் என்னையும் தான் நம்பியிருக்கிறார், அவர் ஏமாற்றமடையும்படி நாம் செய்யவே மாட்டோம். 44.அதன்பிறகு அவர்... அவர், ‘நீ அவனுடைய ஜீவனை எடுக்கக் கூடாது’ என்றார். சாத்தான் அவனுடைய ஜீவனை எடுப்பதைத் தவிர மற்ற யாவற்றையும் செய்தான். அவனுடைய பிள்ளைகள் கொல்லப்பட்டனர். அவனுடைய கால்நடைகளும் கொல்லப்பட்டன. எல்லாமே... அவனுடைய ஐசுவரியம் எல்லாம் அவனை விட்டுப் போய் விட்டது. அவனு டைய சரீர ஆரோக்கியத்தையும் அவன் இழந்து போனான், அவனுடைய ஜீவனைத் தவிர மற்ற யாவற்றையுமே அவன் இழந்து, அங்கே வெளியில் உட்கார்ந்து கொண்டு, அவனு டைய பருக்களை சுரண்டிக் கொண்டிருந்தான். அவனுடைய மனைவி கதவண்டை வந்து (சாத்தான் அவளுக்குள் புகுந்திருந்தான்), ‘நீர்...’ என்று கூறினாள், அவள் அங்கே வெளியே நோக்கிப் பார்த்து, ‘நீர் ஏன் தேவனை சபித்து ஜீவனை விடக்கூடாது? நீர் மிகவும் பரிதாபகரமாகக் காணப்படுகிறீரே’ என்றாள். 45.அவன், ‘நீ ஒரு பயித்தியக்காரி போலப் பேசுகிறாய்’ என்றான். பாருங்கள். இப்பொழுது, அவள் பயித்தியக்காரி என்று அவன் ஒருபோதும் கூறவில்லை; அவள் ஒரு பயித் தியக்காரி போலப் பேசுவதாக தான் அவன் கூறினான். பாருங் கள்? அவன், ‘நீ ஒரு பயித்தியக்காரி போலப் பேசுகிறாய், கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தார். கர்த்தருடைய நாமத் துக்கு ஸ்தோத்திரம்’ என்றான். பாருங்கள்? வேறு வார்த்தை களில் கூறினால், ‘நிர்வாணியாய் உலகத்திற்குள் வந்தேன், நிர்வாணியாய் திரும்புவேன், ஆனால் எப்படியிருந்தாலும் கர்த்தருடைய நாமத்துக்கு ஸ்தோத்திரம். நான் இங்கே வரும் போது, நான் ஒன்றையும் கொண்டிருக்கவில்லை, நான் எதுவு மில்லாமல் இங்கிருந்து கடந்து செல்வேன். ஆனால் இன்னும் கர்த்தருடைய நாமத்துக்கு ஸ்தோத்திரம்’ என்றான். ஓ, என்னே. 46.சாத்தான் நம்மை நீண்ட காலம் சோதிக்க தேவன் அனுமதிப்பார் என்பது உங்களுக்குத் தெரியும், அதன்பிறகு அவன் அதைக் குறித்து களைத்து சோர்ந்து போய் விடுகிறான், நீங்கள் பாருங்கள்? எனவே, அவன் தன்னால்... முடியாது என்று கண்டான். அதன்பிறகு சாத்தான் அவனை விட்டு அகன்று போக வேண்டியிருந்தது. ஆனால் பில்தாதுவும் அவர்கள் எல்லாருமே இன்னும் அங்கேயே தங்கியிருந்து, ‘ஏன், நீ ஒரு இரகசிய பாவி’ என்றார்கள். 47.ஆனால் யோபு அதை மறுத்து, ‘நான் ஒரு பாவி அல்ல’ என்றான். பாருங்கள்? 48.‘யோபே, நீ... நீ செய்திருக்கிறாய்... அதை ஒப்புக் கொள்ள உனக்கு விருப்பமில்லை, (பாருங்கள்?) ஏனென்றால் நீ ஒரு இரகசிய பாவி. நீ இரகசியமாக அதைச் செய்து கொண் டிருக்கிறாய், தேவன் அதற்காகத் தான் உன்னைத் தண்டித்துக் கொண்டிருக்கிறார், எனவே அக்காரணத்தினால் தான் அந்த காரியங்கள் அவைகள் இருக்கிற விதமாக உனக்கு சம்ப வித்துக் கொண்டிருக்கின்றன.’ 49.ஆனால் அவனோ, ‘இல்லை, ஐயா. நான் ஒரு பாவி அல்ல’ என்றான். ஏனென்றால் அவன் அந்த தேவனுடைய நீதியின் பேரில், அந்த சர்வாங்க தகன பலியின் பேரில் உறுதி யாக நின்றான். அவன் அந்த பலியை செலுத்தியிருந்தான். அவன் செலுத்த வேண்டியிருந்ததெல்லாம் அவ்வளவு தான். தேவனுக்கு தேவையாயிருந்ததெல்லாமே அவ்வளவு தான். நீங்கள் கவனித்தீர்களா, தேவனுடைய ஆவி அந்தத் தீர்க்கதரிசியின் மேல் வந்து, எல்லாமே சரியான பிறகு, (நீங்கள் பாருங்கள்?) தேவன் யோபுவுக்கு எதைத் திரும்ப அளித்தார்? அவர் அவனுக்கு அவனுடைய... (அவை)களைத் திரும்ப அளித்தார். அங்கே அவனுக்கு 10,000 கால்நடைகள் இருந்தன, அவரோ அவனுக்கு 20,000 கால்நடைகளைக் கொடுத்தார். அவனுக்கு 40,000 ஆடுகள் இருந்தன, அவரோ அவனுக்கு 80,000 ஆடுகளைக் கொடுத்தார். பாருங்கள்? அவன் கொண் டிருந்த யாவற்றையும் அவர் அவனுக்குத் திரும்பவும் அளித்தார். 50.மேலும் இது, ‘அவர் அவனுடைய ஏழு பிள்ளை களையும் திரும்ப அளித்தார்’ என்று கூறுவதைக் கவனியுங் கள், பாருங்கள்? அவர் யோபுவின் ஏழு பிள்ளைகளையும் அவனுக்குக் கொடுத்தார். அவர் அவனுக்கு வேறு ஏழு பிள்ளைகளைக் கொடுக்கவில்லை, இல்லை, ஆனால் அவர் அவனுடைய ஏழு பிள்ளைகளையும் அவனுக்குக் கொடுத்தார். இப்பொழுது, அது என்னவாக இருந்தது? அவனுடைய வீட்டார், - ‘நீயும் உன் வீட்டாரும்,’ ஏனென்றால் அவன் நீதிமா னாயிருந்தான், ஏனென்றால் நீதிமானாயிருப்பதற்கு தேவன் நமக்குக் கொடுத்திருந்த - அல்லது அவனுக்குக் கொடுத்தி ருந்த யாவற்றின் பேரிலும் அவன் அசையாமல் நின்று கொண்டிருந்தான், அவன் அந்த சர்வாங்க தகன பலியை செலுத்த வேண்டியிருந்தது. அது தேவனுடைய வார்த்தை என்றும், அது தவறிப் போக முடியாது என்றும் அவன் அறிந்திருந்தான். எனவே, அந்த (யோபுவின்) பிள்ளைகள் எங்கேயிருந்தார்கள் என்பதை நீங்கள் எப்பொழுதாகிலும் எண்ணிப் பார்த்ததுண்டா? அவர்கள் பரலோகத்தில் இருந்து அவனுக்காகக் காத்துக் கொண் டிருந்தனர், பாருங்கள்? அவன் இன்று அவர்களோடு இருக்கி றான். தேவன் யோபுவின் பிள்ளைகளை இரட்சித்தார். அவர் கள் பரலோகத்தில் அவனுக்காகக் காத்துக் கொண்டிருந்தனர். பாருங்கள்? 51.இப்பொழுது, நீதிமானாக இருக்கும்படி என்ன செய்ய வேண்டுமென்று தேவன் யோபிடம் கூறின அதே காரியத் தையே அவன் செய்து, (நீதிமானாயிருப்பதற்கு (செய்ய வேண் டிய) ஒரே காரியம் என்னவெனில், சர்வாங்க தகன பலி செலுத்துவதாகத் தான் இருந்தது), அது நீதியாக இருந்து... அவர் யோபையும் அவனுடைய வீட்டாரையும் இரட்சித்தார். அதன் பிறகு தேவனுக்கு முன்பாக நீதி என்பது என்ன? ‘கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்.’ எனவே, நான் என்னுடைய வீட்டாருக்காக விசுவாசம் கொண்டிருந்து, நீங்களும் உங்கள் வீட்டாருக்காக விசுவாசம் கொண்டிருப்பீர்களானால், அதை விசுவாசிப்பதின் மூலமாக, நாம் தேவனை நம்புகிறோம், அப்பொழுது நீதிக்காக தேவன் ஆபிரகாமுக்கோ, அல்லது யோபுவுக்கோ, அல்லது அவர் களில் யாருக்காவது செய்தது போல, நம்முடைய சொந்த விசுவாசத்தையும் தேவன் கௌரவிக்கிறார். நீங்கள் பாருங்கள்? எனவே, நீதிக்காக அது நமக்கு பங்கிட்டுக் கொடுக்கப் பட்டுள்ளது, அவ்வாறு தான் நீங்களும் உங்கள் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள். 52.ஓ, அது ஒரு அற்புதமான காரியம் என்று நினைக் கிறேன். எனவே அப்படியானால், அது மாத்திரமல்ல, நான் ஒவ்வொரு சகோதரனுக்காகவும், என்னுடைய சகோதரர்கள் எல்லாருக்காகவும், என்னுடைய சகோதரிக்காகவும் உறுதியாகப் பற்றிக் கொண்டிருக்கிறேன். நான் அதற்காக மட்டும் பற்றிக் கொண்டிருக்கவில்லை, ஆனால் என்னுடைய சபையிலுள்ள ஒவ்வொரு நபருக்காகவும் தொடர்ந்து பற்றிக் கொண்டிருக்கி றேன்; உங்கள் எல்லாருக்காகவும் நான் பற்றிக் கொண்டிருக் கிறேன். நீங்கள் எனக்காக பற்றிக் கொண்டிருக்க வேண்டு மென்று நான் விரும்புகிறேன். ஏனென்றால் விசுவாசத்தினால் (உண்டாகும்) நீதியினிமித்தமாகவே. நாம் ஒரு சர்வாங்க தகன பலியைச் செலுத்த வேண்டியதில்லை; கிறிஸ்துவே நம்முடைய பலி. ஆனால் கிறிஸ்து செலுத்தின அந்த பலியில் நாம் விசுவாசம் கொண்டிருக்க வேண்டும், அவர் நமக்கு இம்மாதிரி யான ஒரு-ஒருவாக்குத்தத்தத்தைப் பண்ணியிருக்கிறார்: ‘நீங்கள் என் நாமத்தினாலே பிதாவினிடத்தில் கேட்டுக்கொள்வ தெதுவோ, நான் அதைச் செய்வேன். நீங்கள் ஜெபம் பண்ணும்போது, நீங்கள் கேட்டுக்கொண்டதைப் பெற்றுக் கொள்வீர்கள் என்று விசுவாசியுங்கள், அப்பொழுது அது உங்களுக்கு உண்டாகும்.’ இப்பொழுது, தேவன் இந்த டீன்ஏஜ் பிள்ளைகளை இரட்சிக்க வேண்டுமென்று நான் ஜெபித்துக் கொண்டிருந்து, அவர் அதைச் செய்வார் என்று நான் என்னுடைய முழு இருதயத்தோடும் அதை விசுவாசித்தால், பாருங்கள், அதே விதமாகத்தான் யோபுவும் தொடர்ந்து அசையாமல் நின்றான். 53.‘ஓ, இந்த வாலிப பையனைப் பாருங்கள், அவன் என்ன செய்து கொண்டிருக்கிறான் என்று பாருங்கள்’ என்று கூறலாம். அவன் என்ன செய்து கொண்டிருந்தாலும், அல்லது அவள் என்ன செய்து கொண்டிருந்தாலும் கவலையில்லை, நான் இன்னும் அந்தப் பிள்ளையை சர்வ வல்லமையுள்ள தேவனுடைய கரத்தில் தான் வைத்திருக்கிறேன், மேலும் என்னுடைய - நானும் என் வீட்டாரும் இரட்சிக்கப்படுவோம், பாருங்கள்? ஏனென்றால் நான்... நான் ஒருக்கால் அவர்கள் மரிப்பதற்கு முன்பாகவே மரித்துப் போகலாம், அப்படியிருந்த போதிலும், அவர்கள் எப்படியும் இங்கிருந்து கடந்து போவதற்கு முன்பாகவே, தேவன் அவர்களை சரியாக அந்தப் பாதைக்கு திருப்புவார். நான்-நான்அதை விசுவாசிக்கிறேன்... எப்படியோ அல்லது வேறு (எதையாவது) செய்து, அவர்கள் நிச்சயமாக அந்தப் பாதைக்குத் திரும்பும் வரையில், அவர் அவர்களை மிகவும் துக்ககரமான நிலையில் ஆக்கி விடுவார். பாருங்கள்? அந்தவிதமாகத்தான் அது இருக்கும் என்று நான் விசுவாசிக்கிறேன், ‘நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படு வீர்கள்.’ நான் அநேகரைக் கண்டிருக்கிறேன்... அது என்னுடைய கூட்டங்களுக்குள்ளே சம்பவிப்பதை நான் கவனித்திருக்கி றேன். அநேக நேரங்களில், தன்னுடைய வாழ்க்கை முழுவதும் முரட்டுத்தனமாக ஜீவித்து வந்திருந்த வயதான மனிதன் அங்கே வந்து தன்னுடைய முழங்கால்களில் விழுந்து, கதறி அழுது, பிறகு எழுந்து, ‘நல்லது, எனக்கு ஒரு அன்பான வயது சென்ற தாயார் இருந்தார்கள். ஓ, அவர்கள் இன்றிரவு பரலோ கத்தில் இருந்து, கீழே நோக்கிப் பார்த்துக் கொண்டிருப்பார் களானால், நான் இந்தப் பீடத்தில் இருப்பதைக் கண்டு மகிழ்ச்சி யடைவார்கள் என்று எனக்குத் தெரியும்’ என்று கூறுவான். பாருங்கள்? அது என்ன, அந்த வயதான தாயார் ஜெபித்து விசுவாசம் கொண்டிருந்தார்கள், பாருங்கள். நெடுங் காலத்திற்கு முன்பே அவர்கள் மரித்துப் போய் விட்டார்கள், ஆனால் இங்கே அந்த ஜெபங்கள் இருக்கின்றன, ஏனென்றால் அந்த நீதி... பாருங்கள், நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப் படுவீர்கள். எப்படி கிரியை செய்ய வேண்டும் என்று தேவ னுக்குத் தெரியும். அதை எப்படி செய்ய வேண்டும் என்று அவருக்குத் தெரியும். எல்லாவற்றையும் எப்படி சரியாக செய்வது என்று அவர் அறிவார். 54.நான் அன்றொரு நாள் கூறினபடி, நாம் தேவனுடைய ஆவியினால் பிறக்கும் போது, தேவன் ஒரு இடத்தில் பலவீனமாகவும் வேறொரு இடத்தில் பலமாகவும் இருப்ப தில்லை. நீங்கள் தேவனுடைய ஒரு சிறு நிழலை உங்களுக்குள் பெற்றிருப்பீர்களானால், அது வெறுமனே ஒரு மிகச்சிறிய அளவு தேவன் தான், அப்போதும் நீங்கள் சகல வல்லமையும் உடையவர்களாயிருக்கிறீர்கள். அப்போது நீங்கள் ஒரு உலகத்தை சிருஷ்டித்து, வெளியே போய், அதில் வாழ்வதற்கு போதுமான வல்லமையை உங்களுக்குள் பெற்றிருக்கிறீர்கள். ஆனால், நிச்சயமாகவே, அந்த வல்லமையானது விசுவாசத்தின் மூலமே ஆதிக்கம் செலுத்துகிறது. அது அவ்வாறு இல்லாமலிருந்தால், நாம் எல்லாருமே அங்கே வெளியே நமக்கு ஒரு உலகத்தைக் கொண்டிருந்து, அதில் ஜீவித்துக் கொண்டிருப்போம். ஆனால் நீங்கள் தேவனுடைய ஒரு குமாரனாகவோ, அல்லது தேவனுடைய ஒரு குமாரத்தி யாகவோ இருப்பீர்களானால், நீங்கள் உங்களுக்குள் தேவனு டைய வல்லமையைப் பெற்றிருக்கிறீர்கள். பாருங்கள்? எனவே அப்போது, நீங்கள்... அந்தப் பிரமாணமானது அந்த விசுவா சத்தை ஒரு குறிப்பிட்ட காரியத்துக்கு பற்றிப்பிடித்து வைத்துக் கொள்கிறது. 55.இப்பொழுது, நாம் உதாரணமாக இதை எடுத்துக் கொள்வோம், நாம் யாவரும் இவ்வாறு கூறலாம். நாம் ஒருகாலத்தில் பொய் பேசி, திருடி, நாம்-நாம் சபித்து, சத்தியம் செய்தோம், மற்றும் தவறான யாவற்றையும் செய்தோம். நல்லது, ஒருநாள் நாம் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்ட போது, அவர் என்ன செய்தார்? நாம் அவரை ஏற்றுக் கொண்ட உடனே, அவர் அதை வெளிப்படுத்திக் காண்பித்தார்... அதுதான் அந்த ரோமன் கொண்டிருக்க வேண்டுமென்று பவுல் அந்த ரோம னிடம், ‘விசுவாசி’ என்று கூறினானே, அந்த விசுவாசத்தைப் பற்றியதாகும். சரியாக யோபு விசுவாசித்தது போன்று விசுவாசியுங்கள், பாருங்கள்? நாம் கிறிஸ்துவை நம்முடைய இரட்ச கராக ஏற்றுக் கொண்ட உடனே, அடுத்ததாக நாம் விடுதலை யோடு கடந்து போகும் அளவுக்கு போதுமான விசுவாசத்தை நாம் பெற்றுக் கொள்கிறோம், அதற்கு மேலும் பொய் பேச மாட்டோம், அதற்கு மேலும் திருட மாட்டோம், அதற்கு மேலும் ஏமாற்ற மாட்டோம், பாருங்கள்? அவைகளைச் செய்யவே மாட்டோம்... ஏன்? நாம் வழக்கமாக அங்கே தடை இல்லாமல் செய்து கொண்டிருந்த பாவத்திற்கு மேலாக உன்னதத்தை நோக்கி பிரயாணம் செய்தோம். நமக்கு-நமக்கு அவ்வளவு அதிகமான விசுவாசம் பங்கிட்டுக் கொடுக்கப்பட்டிருந்தது. ஏன்? அது நாம் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம் என்று விசுவாசிக்கிற காரணத்தி னால் தான். அது சரி தானா? இங்கே நாம் இரட்சிக்கப் பட்டிருக்கிறோம் என்று விசுவாசிக்கிறோம், எனவே அப்போது, நாம் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம் என்று விசுவாசிக்கிற காரணத் தினால், அதற்கு மேலாக உன்னதத்தை நோக்கியபடி பிரயாணம் செய்கிறோம். 56.இப்பொழுது, நான் கேள்விகளுக்கு வருவதற்கு முன்பு இதைக் கவனியுங்கள். பாருங்கள்? சகோதரனே, சகோதரியே, நான் என்னைக் குறித்த ஒரு சிறிய இரகசியத்தை உங்களிடம் கூறப் போகிறேன். பாருங்கள்? அந்த தரிசனங்களையும் காரியங்களையும் நான் எவ்வாறு காண்கிறேன் என்றும், எது அதை உண்டாக்குகிறது என்றும் நீங்கள் அடிக்கடி வியப் படைகிறீர்கள் என நினைக்கிறேன். அதற்குக் காரணம் என்ன வென்றால், அவர் அந்த இரவில் என்னை சந்தித்து, இது சம்பவிக்கும் என்று அதை என்னிடம் அவர் கூறின போது, (பாருங்கள்?) நான் அதை விசுவாசித்தேன். நான் பயபக்தியுடன் அதை விசுவாசித்தேன். நான் வியாதியஸ்தர்களுக்காக ஜெபிக்கச் செல்லும் போது, ஏதோவொன்று சம்பவிக்கப் போகிறது என்ற உணர்வை நான் எப்பொழுதாவது பெற்றுக் கொள்ளக் கூடுமானால், அவர்கள் சுகமாகப் போகிறார்கள். எனவே, அது எப்போதுமே ஏறத்தாழ சரியாகவே இருக்கும். அந்தவிதமாகத்தான் நாம் கேட்டுக் கொள்கிற எதற்காகவும், நம்முடைய குடும்பத்தினரோடும் நாம் செய்தாக வேண்டும்; நாம் கட்டாயம் ஜெபித்தாக வேண்டும்; தேவன் விசுவாசத்தைக் கனப்படுத்துகிறார், (நீங்கள் பாருங் கள்?) அதை விசுவாசிப்பதற்கான விசுவாசம். அது சரி என்று நாம் நிச்சயமாக விசுவாசித்தாக வேண்டும். 57.இப்பொழுது, அந்த தேவனுடைய சிறிய அளவைக் கொண்டிருந்து, நீங்கள், ‘ஆம், கர்த்தராகிய இயேசுவே, நான் ஒரு பாவி, நான் உம்முடைய அன்புக்கு பாத்திரவான் அல்ல. ஆனால் நீர் என்னை நேசித்தீர், எனவே நான் உம்மை என்னு டைய இரட்சகராக ஏற்றுக் கொள்கிறேன்’ என்று கூறின போது. உடனடியாக, நீங்கள் சரியாக அங்கிருந்து வெளியே நடந்து செல்கிறீர்கள், அது என்ன? நீங்கள் பொய் பேசுவதையும், ஏமாற்றுவதையும், திருடுவதையும், நீங்கள் செய்யக் கூடாத காரியங்களை செய்வதையும் விட்டு விடுகிறீர்கள். ஏன்? நீங்கள் ஒரு கிறிஸ்தவன் என்று நீங்கள் விசுவாசிக்கிற காரணத்தினால் தான். நீங்கள் ஒரு கிறிஸ்தவன் என்று விசுவாசிக்கிற காரணத் தினால், நீங்கள் அதிலிருந்து உயரே எழும்புகிறீர்கள்; நீங்கள் வேறொரு நிலையில் இருக்கிறீர்கள். இப்பொழுது. பாருங்கள்? இப்பொழுது, நீங்கள் வியாதியஸ்தராயிருந்தால், இதோ சுகமளித்தல் உள்ளது. நீங்கள் வெறுமனே அதை விசுவாசி யுங்கள். இப்பொழுது, நீங்கள் தானே உங்களை அதை விசுவா சிக்க வைக்க முடியாது. உங்களுடைய மனமாற்றத்தைப் போன்று, உங்களுக்கு ஏதோவொன்று சம்பவித்தாக வேண்டும். அது சம்பவித்தாக வேண்டும். 58.நான் என்னுடைய மனைவியை எவ்வளவாக நேசித்தேன் என்று நான் அன்றொரு நாள் அவளிடம் கூறிக் கொண்டிருந்தேன். ஆகையால், நான் இதைக் குறித்து பேச அவள் விரும்புகிறாள் என்று நான் நினைக்கவில்லை, ஆனால் நான் தனிப்பட்ட முறையில் அதைக் கூறினேன். எனவே என்னால் இப்பொழுது வெளிப்படையாக அதைக் கூற முடியும் என்று நினைக்கிறேன். நான் அவளை எவ்வளவாக நேசித் தேன் என்றும், முதலாவது துவக்கம் முதற்கொண்டு நான் எப்போதுமே எவ்வளவாக அவளை நேசித்து வருகிறேன் என்றும் நான் அவளிடம் கூறிக் கொண்டிருந்தேன். நான், ‘அது எந்த வித்தியாசத்தையும் உண்டுபண்ணுவதில்லை...’ என்றேன். 59. அவள், ‘ஓ, பில்’ என்றாள், அவள் எவ்வளவு... என்று கூறினாள். அவள் எப்படி பெருத்து (fat)  வருகிறாள் என்பதைக் குறித்தும், அவளுடைய தலைமுடி நரைத்துக் கொண்டிருப்பதைக் குறித்தும் தான் பேசிக் கொண்டிருந்தாள். நான், ‘தேனே, நீ அவ்வளவு பருமனாகவும், தலை முடியே இல்லாமலும் இருக்கலாம், நான் அப்பொழுதும் இதேவித மாகவே உன்னை நேசிப்பேன்’ என்றேன். பாருங்கள்? ஏனென் றால் நீங்கள் யாரோ ஒருவரை நேசித்து, நீங்கள்-நீங்கள் அந்த நபரை சந்திக்க வேண்டுமானால், அங்கே ஏதோவொன்று சம்பவித்தாக வேண்டும். அந்த நபர் வேறொரு நபரை நேசித்தாலொழிய... 60.விவாகமாகாத வாலிப பெண் பிள்ளைகளே, இது உங்களுக்காகத் தான், (பாருங்கள்?) வாலிபர்களே, நீ நேசிக்கும் அந்த வாலிப பெண்ணை நீ சந்திக்கும் போது. அங்கே ஏதோவொன்று உள்ளது, நீ அவளை நேசிக்கிறாய் என்பது உனக்குத் தெரியும், அங்கே அதற்கு வேண்டியதெல்லாம் அவ்வளவு தான், அல்லது நீ அவனை நேசிக்கிறாய், அவன் அழகானவன் என்றோ அல்லது அவனுக்கு அழகில்லை என்றோ, அல்லது அவள் அழகானவள் என்றோ அல்லது அழகில்லாதவள் என்றோ நீங்கள் கவலைப்படுவதில்லை. அது காரியமில்லை, ஆனால் நீங்கள் அதேவிதமாகவே அவர்களை நேசிக்கிறீர்கள். இப்பொழுது, நீங்கள் எச்சரிக்கையோடு இருப்பது நல்லது. நீங்கள் ஒருவிதத்தில் அங்கே அருகாமை யில் இருக்கிறீர்கள், ஏனென்றால் அது - நீங்கள் அங்கே யிருக்கும் வீட்டிற்கு அருகாமையில் வந்து கொண்டிருக் கிறீர்கள். நான்... அது... அதற்கு வெளியே சார்ந்து, செய்யப்படும் ஒரு-ஒரு விவாகம் நிச்சயமாக விழுந்து போகும், அல்லது அது ஒருபோதுமே வெற்றிகரமாக இருக்காது. அவைகள் ஒருபோதும் சந்தோஷமாக இருக்கவே இருக்காது. 61.இப்பொழுது, நான் கூற விரும்புகிற ஒரு காரியத்திற்கு கொண்டு வரும்படி தான் நான் அதைக் கூறினேன். நண்பர்களே, அதே காரியத்திற்கு வெளியே ஏற்படும் ஒரு மனமாற்றமும் நீடித்து நிற்காது. அது தொடர்ந்து நீடித்து நிற்காது. நீங்கள் சபைக்குச் சென்று, நீங்கள், ‘நல்லது, நான் சபையைச் சேர்ந்து கொள்ளப் போகிறேன், நான் ஞானஸ்நானம் பண்ணப்படப் போகிறேன்’ என்று கூறும் போது, அது அங்கே யுள்ள தேவனிடம் கொண்டிருக்கிற அன்போடு கூடிய ஒரு இருதயத்திலிருந்து வரவில்லை என்றால், அது ஒருபோதும் எங்குமே போகவே போகாது. நீங்கள் வெறுமனே... நீங்கள் செய்வதெல்லாம் சபையைச் சேர்ந்து கொண்டு, ஞானஸ்நானம் பண்ணப்படுவது தான். ஆனால் நீங்கள் கிறிஸ்துவுக்குள் மனமாற்றமடைந்து, கிறிஸ்துவை நேசிக்கும் போது, நீங்கள் உங்கள் மனைவி யையோ அல்லது உங்கள் கணவரையோ நம்புவது போன்று, நீங்கள் கிறிஸ்துவின் மேலுள்ள உங்கள் விசுவாசத்தை அதிகரித்துக் கொள்கிறீர்கள். நீங்கள் அந்த விசுவாசத்தில் நடக்கும்படியான ஒரு விசுவாசத்தை சேர்த்து அதிகரித்துக் கொள்கிறீர்கள். எனக்குத் தெரியாது, நீங்கள் அப்படியே - உங்களைக் குறித்து ஏதோவொன்றுள்ளது, அங்கே உங்களை நங்கூரமிடும் ஏதோவொன்றை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள். நீங்கள் பாருங்கள்? 62.நல்லது, கிறிஸ்துவைக் குறித்தும் அதேவிதமாகத்தான். கிறிஸ்து என்ன கூறுகிறாரோ, அதை நீங்கள் விசுவாசிக்கி றீர்கள். நீங்கள் சரியாக அதனோடு தரித்திருக்கிறீர்கள். அந்த விதமாகத்தான்... அது உங்களை அதற்கு மேலாக உயர்த்து கிறது, தேவன் அதை சம்பவிக்கப் பண்ணி, ‘நீ கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசித்தால், நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்’ என்ற தமது வாக்குத்தத்தத்தை நிறை வேற்றுகிறார். எனவே இப்பொழுது, நான் இதைக் கூற வேண்டுமென்று சற்று முன்பு தான் நினைத்தேன். நான்-நான் அதற்காக மிக அதிக நேரம் எடுத்துக் கொண்டு விட்டேன். அதைக் கூறு வதற்கு முப்பது நிமிடங்கள் எடுத்துக் கொண்டேன், ஆனால் நான் என்ன கூற விரும்பினேன் என்பதை இப்பொழுது நீங்கள் அறிந்து கொண்டீர்கள். அதுதான் அதுவாக உள்ளது. 63.நீங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை உங்களுடைய இரட்சிப்புக்காக மட்டுமல்லாமல், உங்கள் அன்பார்ந்தவர்களின் இரட்சிப்புக்காகவும், பிள்ளை அல்லது தாயின் சுகத்திற்காகவும், அல்லது நீங்கள் வாஞ்சிக்கிற சரியான காரியம்... எதற்காகவும் விசுவாசிக்க முடியும். நீங்கள் சரியில்லாத ஏதோவொன்றை வாஞ்சிப்பீர்களானால், முதலாவது காரியமாக தேவனிடம் வேண்டிக் கொள்வதற்குப் போதுமான விசுவாசம் உங்களுக்கு- உங்களுக்கிராது என்பது உங்களுக்குத் தெரியும்; ஏனென்றால் அது சரியல்ல என்று நீங்கள் அறிவீர்கள், பாருங்கள்? நீங்கள் உத்தமமாக இருந்து, அது சரி என்று அறிவீர்களானால், நீங்கள் ஒரு சுத்தமான இருதயத்தோடு தேவனிடம் கேட்க முடியும், அப்பொழுது அது சுயநலமற்ற நோக்கம் என்பது உங்களுக்குத் தெரியும். உங்களுடைய நோக்கமும் குறிக்கோள்களும் முற்றிலும் சரியாக இருக்கிறது, அதன்பிறகு ஒரு பிள்ளையைப் போன்று தேவனிடம் வேண்டிக் கொண்டு, அதைப் பெற்றுக் கொள்வீர்கள் என்று விசுவாசியுங்கள்; அப்பொழுது நீங்கள் அதைப் பெற்றுக் கொள்வீர்கள். எனக்கு அது தெரியும். 64.இப்பொழுது, ஏறக்குறைய இங்கேயிருக்கிற இந்தப் பையன்களில் ஒருவனுடைய வயது எனக்கு இருக்கும் போது தான் நான் கிறிஸ்துவிடம் வந்தேன் என்று நினைக்கிறேன். நான் ஏறக்குறைய இருபது வயது உடையவனாக இருந்தேன். நான்-நான் இந்த காலமெல்லாம் அவரை சேவித்து வருகிறேன், எனக்கு 52 வயதாகிறது, என்னுடைய பிறந்த நாளில் 53 வயதாகும். நான் கிறிஸ்துவிடம் எதற்காகவும் உத்தமமாய் கேட்பது கிடையாது என்பதை நான் மனமார கூற முடியும்- அதாவது இது - இப்பொழுது, சரியாக இருந்த எதற்காகவும் அவரிடம் உண்மையோடும் உத்தமத்தோடும் கேட்டேன்,- ஆனால் அவர் எனக்கு அதைக் கொடுத்தார் அல்லது ஏன் அதை அவரால் கொடுக்க முடியாது என்பதை என்னிடம் கூறினார். நான் அதைப் பெற்றுக் கொள்ளாதது நல்லதொரு காரியம் என்பதை அதற்குப்பிறகு தான் கண்டு கொண்டேன். பாருங்கள்? ஆனால் சற்று இதை ஞாபகம் கொள்ளுங்கள், நீங்கள் அவர் மேல் விசுவாசம் வைக்கும் போது, அவரை விசுவாசித்து அவரை நம்புகிறீர்கள். அதைச் செய்வதற்கு நீங்கள் உங்களைத் தானே நெருக்கித் தள்ள முயற்சி செய்ய வேண்டாம்: அப்படி செய்யாதீர்கள். அப்படியே அவரோடு தரித்திருந்து, அதை ஆராய்ந்து பாருங்கள் (reason out). 65.நீங்களோ - நானோ 1000 டாலர்களைக் கடன் வாங்கும்படியாக இங்கேயிருக்கும் சகோதரன் வெல்ச் அவர் களிடம் வந்திருந்தால், அது போன்றுதான் இதுவும். என்னால் அதை வாங்க முடியாது என்று நினைக்கிறேன், ஏனென்றால் அவரிடம் ஒருக்கால் அவ்வளவு பணம் இல்லாமலிருக்கலாம். ஆனால் அவரிடம் அது இருக்குமானால், என்னால்-என்னால் அதைப் பெற்றுக் கொள்ள முடியும். இப்பொழுது, நான் வந்து, அந்தக் காரியத்தைப் பணிவாக அவரிடம் கேட்க முயற்சிக்க வேண்டும். நான் வந்து, ‘வெல்ச், எனக்கு ஆயிரம் டாலர்கள் கொடுங்கள்’ என்று கூறினால், அந்தவிதமாக அதைச் செய்யக் கூடாது. தேவனிடமும் அந்தவிதமாகக் கேட்கக் கூடாது. நான் வந்து, சகோதரன் வெல்ச்சிடம் பேசி, ‘சகோதரன் வெல்ச் அவர் களே, நான் ஒரு சில நிமிடங்கள் உம்மிடம் பேசலாமா?’ என்று கூற வேண்டும். ‘நிச்சயமாக, சகோதரன் பிரன்ஹாமே’ என்று அவர் கூறுவார். 66.ஒரு பக்கமாகப் போய், அங்கே உட்கார்ந்து, நான், ‘சகோதரன் வெல்ச் அவர்களே, நான் உம்மிடம் கேட்க விரும்புகிற முதலாவது காரியம் என்னவென்றால், எனக்குக் கொடுக்க உம்மிடம் ஆயிரம் டாலர்கள் இருக்கிறதா, அது உம்மிடம் உள்ளதா?’ என்று கேட்கலாம். நல்லது, அவர்... அவர்... நாம்-நாம் நண்பர்களாயிருக்கி றோம், அல்லது அவர் என்னிடமோ, அல்லது நான் அவரி டமோ, அல்லது சகோதரர்களாகிய உங்களில் ஒருவரிடமோ கேட்கலாம், அது அதேவிதமாகவே இருக்கிறது. - அதற்கு நாம், ‘ஆம்’ என்று கூறுவோம். 67.‘இப்பொழுது, ஏன் - இது தான் எனக்குத் தேவைப் படுகிறது’ என்று கூறுவேன். நான் அதைப் பணிவாக அவருக் குத் தெளிவுபடுத்திக் காண்பிப்பேன். நான், ‘சகோதரன் வெல்ச் அவர்களே, நான் இங்கே ஒரு கூட்டத்தில் இருக்கிறேன். நான் முற்றிலுமாக அதற்கு விரோதமாகத்தான் இருக்கிறேன். நான்- நான் இந்தப் பட்டணத்தை விட்டுப் போயாக வேண்டும், எனக்கு ஆயிரம் டாலர்கள் கடன் இருக்கிறது. நான்-நான் எங்கிருந்தாவது பணத்தைப் பெற்றாக வேண்டியிருக்கிறது. இப்பொழுது, நான் உம்மிடம் வர வேண்டுமென்று கர்த்தர் என் இருதயத்தின் மேல் அதை வைத்தார்’ என்று கூறலாம். நான் அதை அவரிடம் விளக்கிக் கூறுவேன். ‘இப்பொழுது-இப்பொ ழுது, ஒரு குறிப்பிட்ட இடத்தில் நான் நடத்தின வேறொரு கூட்டத்திலிருந்து எனக்கு ஆயிரம் டாலர்கள் வர வேண்டி யிருக்கிறது, அது இப்பொழுதிலிருந்து ஏறக்குறைய மூன்று மாதங்களில் கிடைத்து விடும், அப்பொழுது நான் உமக்கு அதை செலுத்தி விடுவேன். உமக்கு விருப்பமானால், நான் அதற்கான வட்டியையும் செலுத்தி விடுவேன்’ என்று கூறலாம். நான் அவையெல்லாவற்றையும் பணிவாகக் கூறி, அது ஏன் என்று அவருக்கு விளக்கிக் கூறுவேன். நான் இவ்விதமாக அந்தப் பட்டணத்தை விட்டுப் புறப்பட்டுப் போக விரும்ப வில்லை; நான் அவ்வாறு (கடனோடு) புறப்பட்டுப் போனால், எனக்குக் கெட்ட பெயர் ஏற்படும். அப்படியானால் அவர்கள், ‘அவன் ஒரு ஏமாற்றுக்காரனும், திருடனுமாயிருக்கிறானே ஒழிய வேறு யாருமில்லை, இன்னும் கடனாகக் கொடுக்க வேண்டிய பணத்தை வைத்து விட்டு, அவன் பட்டணத்தை விட்டுப் போய் விட்டான்’ என்பார்கள், நான் கூறுவது புரிகிறதா? நான் அதை உங்களுக்கு விளக்கிக் காண்பித்தேன். ஒரு சகோதரனைப்போல நான் அமர்ந்து அதை உங்களிடம் எடுத்துக் கூறுவேன். 68.நல்லது, நான் அவ்வாறு செய்து (பேசி), நீங்கள் உங்களைப் போல என்னையும் நேசித்தால், நீங்கள்-நீங்கள்எதையும் செய்வீர்கள் என்று நான் நம்புகிறேன்.- அப்பொழுது நீங்கள்-நீங்கள் ஒரு காரை அடமானம் வைத்தோ, அல்லது பணத்தைப் பெறும்படி வீட்டிலுள்ள எதையாகிலும் விற்கவோ செய்வீர்கள். இப்பொழுது பாருங்கள், நீங்கள் அதைச் செய் வீர்கள். உங்களில் யாரும் அதைச் செய்வீர்கள். நானும் உங்களுக்காக அதைச் செய்வேன். ஆனால் அது - செய்ய வேண்டிய சரியான காரியம் என்னவென்றால், வந்து உட்கார்ந்து, ஒருவர் மற்றவரோடு அதைக் குறித்துப் பேசுவது தான், உங்களுக்கு இது தெரிந் திருக்கட்டும், (நீங்கள் பாருங்கள்?) நாம் ஒருவருக்கொருவர் நம்முடைய அனுதாபத்தை வெளிப்படுத்துகிறோம். ‘நீங்கள் என் நண்பர்; ஆகையால் தான் நான் உம்மிடம் வந்திருக் கிறேன்.’ 69.இப்பொழுது, கிறிஸ்துவிடமும் அதேவிதமாகத்தான் செய்ய வேண்டும். ‘நீரே என் ஆண்டவர். நான்-நான்-நான்வியாதியாயிருக்கிறேன். நான்... எனக்கு எதுவுமே செய்ய முடியாது என்று மருத்துவர் கூறுகிறார். ஆனால்-ஆனால் உம்மால் கூடும் என்று எனக்குத் தெரியும், ஏனென்றால் நீரே என் கர்த்தராயிருக்கிறீர்’ என்று கூறுங்கள். நீங்கள் அதைப் பெற்றுக் கொள்வீர்கள் என்று உணரும் மட்டுமாக, அப்படியே- அப்படியே அதை அவரிடம் பேசுங்கள். அதுதான் உங்கள் விசுவாசம். விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.’ நான்-நான்அந்தவிதமாக உணரும் போது, நான் அதைப் பெற்றுக் கொண்டது போல அவ்வளவு நன்றாக அது இருக்கிறது. நிச்சயமாகவே, நான் தொடர்ந்து முன் செல்ல முடியும், ஏனென்றால் அதை நான் பெற்றுக் கொண்டேன். பாருங்கள், நான் அதைச் செய்து விட்டேன்... இப்பொழுது, நான் அதைப் பெற்றுக் கொண்டேன் என்று அவர் என்னிடம் வாக்குப் பண்ணியிருக்கிறார், எனவே அது-அது அதை தீர்த்துவைக்கிறது. நான் அப்படியே தொடர்ந்து விடாப்பிடியாய் அதைப் பற்றிக் கொண்டே காத்திருப்பேன். 70.இறுதியாக, நீங்கள் அறிகிற முதலாவது காரியம் என்னவென்றால், இதோ அது வருகிறது, அது வானத்தின் தாழ்வாரங்களிலிருந்து கீழே ஊற்றப்படுகிறது, நீங்கள்-நீங்கள் பெற்றுக் கொண்டு விட்டீர்கள். ஆனால் அதுதான் காரியம், நீங்கள் பாருங்கள். ‘நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப் படுவீர்கள்.’ நீங்கள் இந்த உலகத்தை விட்டுக் கடந்து போவதற்கு முன்பாக அவர்கள் எல்லாரும் இரட்சிக்கப்படுவதை காணா விட்டாலும், நீங்கள் - சென்றடையும் போது... அந்த நேரத்தில் அவர்கள் அங்கேயிருப்பார்கள். அந்த மகத்தான வருகை வருகிற போது, அவர்கள் அங்கேயிருப்பார்கள். இப்பொழுது, நான் என்ன கூறுகிறேன் என்று புரிகிறதா? பாருங்கள்? நாம் விசுவாசத்தின் மூலமே யாவற்றையும் செய் கிறோம். கர்த்தரை விசுவாசியுங்கள். ஒரு வேலைக்காக கர்த் தரை விசுவாசியுங்கள். நீங்கள் விவாகம் பண்ண வேண்டிய மனைவியை உங்களுக்குத் தேடி - கொடுக்கும்படியாக கர்த்தரை விசுவாசியுங்கள், நீங்கள் விவாகம் பண்ணும்படியாக கணவனை கர்த்தர் உங்களுக்குக் கொடுக்கும்படியாக கர்த்தர் மேல் விசுவாசம் வையுங்கள். கொஞ்சம் புதிய மரச்சாமான் களை கர்த்தர் உங்களுக்கு அனுப்பி வைக்கும்படியாக நீங்கள் அவரை விசுவாசியுங்கள். அல்லது பானை காலியாகப் போகிற தாயிருந்தாலும், கலயம் வறண்டு போகிறதாயிருந்து, அங்கே ஆகாரமே இல்லை என்றாலும், பிள்ளைகள் பசியோடிருந்தா லும், கர்த்தர் மேல் விசுவாசம் வையுங்கள். நீங்கள் எதற்காகவும் கர்த்தரையே விசுவாசியுங்கள். பாருங் கள். அது சரியாக இருக்கும் காலம் வரை, அப்படியே கர்த்தர் மேல் விசுவாசம் வைத்திருங்கள், ‘நீ.’ பாருங்கள்? அப்பொழுது அது வரும். அது என்னுடைய ஜீவியம் முழுவதும் தவறிப் போனதை நான் ஒருபோதும் கண்டதேயில்லை. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. 71.அந்தக் கேள்விகளில் சிலவற்றை நீங்கள் எனக்காக வாசிப்பதைக் குறித்து என்ன? நீங்கள் எனக்காக அவைகளை வாசிக்க முடியுமா? இந்தக் கேள்விகள் எனக்கு சரியாக புரிகிறது என்று நான்-நான் நம்புகிறேன். இப்பொழுது நான் உங்களை அதிக நேரம் பிடித்து வைக்க விரும்பவில்லை, ஒருக்கால் ஏறக்குறைய 10 நிமிடங்கள் நாம் எடுத்துக் கொள்ள லாம். அங்கேயிருக்கும் அவைகளை சிறிது நேரம் வாசிக்கும் படி ஜிம்மியிடம் கொடுங்கள், அதைப் பார்க்கும்படி, நான்... நான் சரியாக மறந்து போனதை அவர்கள் என்னிடம் கேட்டு விடப் போகிறார்கள், எனவே, நான் அவைகளைக் கூற முடியு மானால், நீங்கள் அதை நன்கு புரிந்து கொள்வீர்கள். ஆனால் விசுவாசிக்க வேண்டுமென்று நான் கூற விரும்பி னதை இப்பொழுது நீங்கள் புரிந்து கொண்டீர்களா? ‘கர்த்தரா கிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்.’ உங்களுக்காகவே நீங்கள் விசுவாசியுங்கள், உங்கள் வீட்டாருக்காகவும் விசுவாசியுங்கள், அப்பொழுது நீங்கள் அதைப் பெற்றுக் கொள்வீர்கள். 72.நீங்கள், ‘நல்லது, நான் சுகமாக முடியாது என்று மருத்துவர் கூறினார்’ என்று கூறலாம். நல்லது, உங்களால் கர்த்தர் மேல் விசுவாசம் வைக்கக் கூடுமானால், உங்களால் சுகமாக முடியும். 73.‘நல்லது, எனக்கு-எனக்கு வேலை இல்லை’ என்று கூறலாம். ஆனால் நீங்கள் கர்த்தரை விசுவாசிப்பீர்களானால், (பாருங்கள்?) உங்களுக்கு வேலை கிடைக்கும். 74.‘இந்த சூழ்நிலையைக் குறித்து என்ன செய்ய வேண்டு மென்றுஎனக்கு-எனக்குத் தெரியவில்லை’ என்று நீங்கள் கூறலாம். கர்த்தரை விசுவாசியுங்கள். அது சரியாக இப்பொழுது என்னோடு எங்கேயிருக்கிறது என்று பாருங்கள். மேலும் அங்கேயிருக்கும் மனைவியைப் பாருங்கள். நான் ஜெபர்ஸன் வில்லை விட்டுப் போய் விட வேண்டுமென்று கர்த்தர் விரும் பினதாக நான் எப்போதுமே நினைத்ததுண்டு, இப்பொழுது, நான் என்னைத்தானே அவருக்கு சமர்ப்பிக்க வேண்டிய ஒரு நிலைக்கு அது வர வேண்டியதாயிருந்தது. எனவே இதோ நான் இருக்கிறேன். நான் எங்கே யிருக்கிறேன் என்பது அவருக்குத் தெரியும், நான் சரியாக இன்றிரவு இங்கேயிருக்கிறேன். எனவே, நான் எங்கு போக வேண்டுமென்று அவர் விரும்பினாலும், நான் அங்கு போவேன். நான் என்ன செய்ய வேண்டுமென்று அவர் விரும்புகிறாரோ, நான் அதைச் செய்வேன். அவர் என்னிடம் கூறுகிற வரையில், நான் சரியாக எல்லா நேரமும் அவ்வாறே இருப்பேன். நீங்கள் பாருங்கள்? 75.சரி, ஜிம்மி, என் மகனே, உன்னிடம் அவைகள் கிடைத்து விட்டதா? (சகோதரன் ஒரு கேள்வியை வாசிக்கிறார்: ‘எடுத்துக் கொள்ளப்படுதல் நடக்கும்போது, எல்லா விசுவாசி களின் குடும்பத்தினரும், மனைவியும், பிள்ளைகளும் அதில் போவார்களா? அவர்கள் இயேசு கிறிஸ்துவை கர்த்தராக விசுவாசித்து அவரை நம்புகிறார்கள்?’ - - ஆசிரியர்.) ஆமாம், ஆமாம். எடுத்துக்கொள்ளப்படுதலில் குடும்பத் தினர் அனைவரும் போவார்களா? பாருங்கள், ஆமாம். புரிகிறதா? இப்பொழுது, நீங்கள் கவனிப்பீர்களானால், எடுத்துக் கொள்ளப்படுதல் உலகம் முழுவதும் நடக்கிற ஒரு காரியமாக இருக்கப் போகிறது. எப்படியாக... நீங்கள் எல்லாரும் ஞாயிற்றுக் கிழமை பேசின அந்தப் பாடத்தை சரியாகப் புரிந்து கொண்டீர் களா? நாம் அந்த நேரத்திற்கு, ‘தானியேலின் எழுபது வாரங் களுக்கு’ ஏறக்குறைய எவ்வளவு அருகாமையில் இருக்கிறோம் என்பதை நீங்கள் எல்லாரும் சரியாகப் புரிந்து கொண்டீர்களா? நீங்கள் எல்லாரும் அங்கே ஞாயிற்றுக் கிழமையில் இருந் தீர்கள், இல்லையா? ஆமாம். சரி. நல்லது. சகோதரன் வெல்ச் அவர்களே, உம்மிடம் அந்த ஒலிநாடா இருந்தது என்று நினைக்கிறேன். உங்களில் சிலர் அதை போட்டுக் (கேட்கலாம்). அதைக் குறித்த வரைபடம் உங்களிடம் இருந்தது என்று நம்பு கிறேன், இல்லையா? ஒருக்கால் அது இல்லாமல் இங்கே யிருப்பவர்களுக்கு அதை அப்படியே வரைந்து கொடுத்து, அதை அவர்களுக்கு விளக்கிக் கூறலாம் (நீங்கள் பாருங்கள்?), எனவே அவர்கள்-அவர்கள் அதைப் புரிந்து கொள்ள முடியும். வேதவாக்கியத்தின் மூலமாக நீங்கள் அதைக் காண வேண்டு மென்று நான் விரும்புகிறேன், அதில் கூறுவதற்கு என்னிடம் ஒரு வார்த்தையும் கிடையாது. நாம்-நாம் கடைசி காலத்தில் இருக்கிறோம் என்பதை வேதவாக்கியங்களே நிரூபிக்கிறது. 76.இப்பொழுது, சகோதரர்களாகிய நாங்கள் இன்று பேசிக் கொண்டிருந்தோம். நீங்கள், ‘நல்லது, சகோதரன் பிரன்ஹாமே, எடுத்துக்கொள்ளப்படுதல் அவ்வளவு சமீபமாய் இருக்கிறது என்று நீர் விசுவாசிப்பீரென்றால், நீர் ஏன் மீன்பிடிக்கப் போகிறீர்?’ என்று கேட்கலாம். நான் அதில் என் சிந்தையை எப்போதுமே வைப்பேனென்றால், அது பெரும்பாலும் உங்களை காட்டுக்கு விரைந்தோடச் செய்யும். கிறிஸ்துவை அறியாத பத்தாயிரக் கணக்கான ஜனங்கள் இங்கே வெளியே பாவத்தில் இருப்பதைக் குறித்து எண்ணிப் பார்க்கும் போது, ‘நானோ இங்கே இருக்கிறேனே, என்னால் என்ன செய்ய முடியும்?’ என்று நினைக்கிறேன். ஆனால் நான் இதோ அதைத் தான் எண்ணிப் பார்க்கி றேன். தேவன் அவர்களை அழைத்தாலொழிய என்னால் ஒருவரையும் இரட்சிக்கவே முடியாது. பாருங்கள்? என்னால் அதைச் செய்ய முடியாது. எப்படியும் நான் அவர்களை இரட் சிக்கவே முடியாது. ஆனால், ‘பிதா எனக்குக் கொடுத்திருக்கிற யாவும் என்னிடத்தில் வரும்.’ எனவே நான் எங்கு போக வேண்டுமென்று அவர் என்னிடம் கூறாவிட்டால், என்னால் என்ன செய்ய முடியும்? பாருங்கள்? எனவே, நான் செய்கிற காரியம் என்னவென்றால், அதைக் குறித்துக் கவலைப்படுவதேயில்லை - சற்றும் கவலைப்படு வதேயில்லை. அது எப்பொழுதும் இருந்ததைக் காட்டிலும் மோசமாகத்தான் இருக்கிறது. நான் அதைக் குறித்து சந்தோ ஷப்படுகிறேன். நான் அப்படியே-அப்படியே எல்லாவற்றையும் மூட்டை கட்டிக் கொண்டு ஆயத்தமாயிருக்கிறேன், அது உங்களுக்குத் தெரியும். அது வரும்போது, கர்த்தாவே, இதோ இருக்கிறேன். நான் அப்படியே காத்துக் கொண்டிருக்கிறேன். 77.இப்பொழுது இங்கு தான் அது சம்பவிக்கிறது. ஞாயிற்றுக் கிழமையில் அந்த விளக்கப்படத்தில் (chart) நீங்கள் கண்டபடி, எடுத்துக்கொள்ளப்பட்ட பரிசுத்தவான்கள்... இப்பொழுது, ஆதி பெந்தெகோஸ்தே சகோதரர்களுக்கோ - அல்லது அதற்குப் பிந்திய கால பெந்தெகோஸ்தே சகோ தரர்களுக்கோ, அங்கே அந்த முற்காலத்திய சபைகளில் போது மான அளவில் இடங்கள் நிரம்பவில்லை, நான் அதை நம்ப மாட்டேன். ஆனால் நான் இவ்வாறு நம்புகிறேன், ஒவ்வொரு மறுபடியும் பிறந்த கிறிஸ்தவனும்... நாம் எவ்வாறு மறுபடியும் பிறக்கிறோம்? நாம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவா சித்து, ஏற்றுக்கொள்ளும் போது தான் மறுபடியும் பிறக்கிறோம், (பாருங்கள்?)... இப்பொழுது, நீங்கள் விசுவாசிப்பதாக உங்கள் மனதில் சொல்லிக் கொள்ளும் காரணத்தினால் நீங்கள் விசுவாசிக்கி றீர்கள் என்று நான் நம்புவதில்லை. நீ உண்மையாகவே ஒரு கிறிஸ்தவனா இல்லையா என்று உன்னுடைய ஜீவியமே கூறும் என்று நான் விசுவாசிக்கிறேன். நான்-நீங்கள், ‘என்ன...’ என்று கூறலாம். 78.இன்று, அங்கேயிருக்கும் அந்த சீமாட்டி ஏதோ வொன்றைக் குறித்தோ, அல்லது ஒரு-ஒரு கிறிஸ்தவளாக இருப்பதைக் குறித்த வேறு எதையோ, அல்லது மற்ற எதையோ பற்றிக் கூறினாள். அவள், ‘எந்த ஸ்தாபனம்?’ என்று கேட்டாள். பாருங்கள், எந்த ஸ்தாபனத்தைச் சேர்ந்தவன் என்பதை அவர்கள் துரிதமாக அறிய விரும்புகிறார்கள். 79.நான், ‘எந்த ஸ்தாபனத்தையும் சேர்ந்தவன் அல்ல, நான் வெறுமனே ஒரு கிறிஸ்தவன்’ என்று கூறினேன், நீங்கள் பாருங்கள். ஒரு கிறிஸ்தவன் என்பது... 80.நீங்கள், ‘நல்லது, ஒரு கிறிஸ்தவன் என்பதற்கு ஒரு காம்பல்லைட் (Campbellite) என்று அர்த்தம்’ என்று கூறலாம். இல்லை, அது-அது... அவர்கள் வெறுமனே தங்களைக் கிறிஸ்த வர்கள் என்று அழைத்துக் கொள்கிறார்கள், ஆனால் கிறிஸ்த வன் என்பதற்கு அது அர்த்தமல்ல. கிறிஸ்தவர்களாக இல்லா மல் கிறிஸ்தவ சபை என்று அழைத்துக் கொள்பவைகளைச் சேர்ந்திருக்கிற அநேக ஜனங்களை நினைத்துப் பார்க்கிறேன், அது எனக்குத் தெரியும். மேலும் கிறிஸ்தவர்கள் அல்லாத அநேக அங்கத்தினர்கள் அவர்களிடம் இருக்கிறார்கள் என்று கிறிஸ்தவ ஊழியக்காரர்கள் கிறிஸ்தவ சபைகளைக் குறித்து அதே காரியத்தையே உங்களிடம் கூற (முடியும்); ஆனால் கிறிஸ்தவன் என்பது நீங்கள் சேர்ந்து கொள்ளும் ஒரு சபை அல்ல; அது நீங்கள் தேவனுடைய குடும்பத்தில் பிறந்திருக்கிறீர்கள் என்ற ஒரு அனுபவமாக உள்ளது. 81.இப்பொழுது, கவனியுங்கள், எடுத்துக் கொள்ளப்படுதல் உலகம் முழுவதும் நடக்கும், ஏனென்றால் அவர், ‘இரண்டு பேர் வயலில் இருப்பார்கள், நான் ஒருவனை எடுத்துக் கொள் வேன், மற்றவனைக் கைவிடுவேன். இரண்டு பேர் படுக்கையில் இருப்பார்கள்; நான் ஒருவனை எடுத்துக் கொண்டு, மற்ற வனைக் கைவிடுவேன் (லூக்கா 17:34, 36)’ என்று கூறினார். நீங்கள் பாருங்கள், இரண்டு பேர் படுக்கையில் இருக்கிற பூமியின் ஒரு பக்கம் இருட்டாயிருக்கும் நேரத்தில், இரண்டு பேர் வயலில் இருக்கும் போது, பூமியின் மறுபக்கத்தில் அது அறுவடை நேரமாக இருக்கும். பாருங்கள்? அது ஒரு மகத்தான பெரிய எடுத்துக் கொள்ளப்படுதலாக நிகழும் என்பதை அது காட்டுகிறது; அது சரியாக உலகத்திலிருந்து வெளியே புறப்பட்டு செல்லும். பாருங்கள்? ‘இரண்டு பேர் வயலில் இருப்பார்கள், நான் ஒருவனை எடுத்துக் கொள்வேன், மற்ற வனைக் கைவிடுவேன். இரண்டு பேர் படுக்கையில் இருப்பார்கள், நான் ஒருவனை எடுத்துக் கொண்டு, மற்றவனைக் கைவிடுவேன் (லூக்கா 17:34, 36).’ 82.இப்பொழுது, நாம்-நாம் பார்க்கிறோம்... அதன்பிறகு புஸ்தகத்தில் எழுதப்பட்டவர்களாக காணப்பட்ட யாவரும் அந்த உபத்திரவத்திற்கு முன்பாக அந்நாளில் விடுவிக்கப் பட்டார்கள். எனவே, உங்களுடைய பிள்ளைகளோ, உங்களு டைய தாயாரோ, உங்களுடைய அன்பார்ந்தவர்களோ, அவர் கள் யாராயிருந்தாலும், அவர்களுடைய பெயர் ஆட்டுக்குட்டி யானவரின் ஜீவ புஸ்தகத்தில் எழுதப்பட்டிருக்குமானால், என்னுடைய விலையேறப்பெற்ற பிள்ளைகளே, நீங்கள் சரியாக அங்கேயிருப்பீர்கள். நாம் எங்கிருந்தாலும் காரியமில்லை, நான்... கடல்தாண்டி விமானத்தில் பறந்து, அந்த விமானம் வானத்திலேயே வெடித்து சிதறி, நான் - நீங்கள் இந்த என்னுடைய சரீரத்தில் ஒரு துண்டைக் கூட ஒருபோதும் கண்டுபிடிக்காமல் இருந்தா லும், அதற்கு இதனோடு எந்த ஒரு சம்பந்தமும் இல்லை. பாருங்கள்? நான் அங்கே அதேவிதமாகவே இருப்பேன். நீங்கள் அதைக் குறித்து கவலைப்பட வேண்டாம். உங்கள் கரத்தைக் குலுக்கி, உங்களோடு கர்த்தரைத் துதித்து, இராஜாதி இராஜாவாகவும் கர்த்தாதி கர்த்தாவாகவும் அவருக்கு கிரீடம் சூடுவதற்கு நான் சரியாக அங்கே இருப்பேன். 83.ஒருக்கால் பவுலுடைய சரீரத்தின் ஒரு சிறு துகள் கூட மீதியாக இல்லாமலிருந்திருக்கும் என்று நினைக்கிறேன், அது இருப்பது கடினம் தான். ஆனால் அவனுடைய சரீரத்தை உண்டாக்கின மூலப்பொருட்கள் எல்லாமே எங்கோ ஓரிடத்தில் இருக்கிறது. எனவே, அவைகள் அந்நாளில் ஒன்றாக சேர்க்கப்படும். நீங்கள் மரிக்கும்போது, நீங்கள் உண்மையில் மரிப்ப தில்லை. ஒரு கிறிஸ்தவனால் மரிக்க முடியாது. ஒரு கிறிஸ்த வனுக்கு மரணம் என்ற அப்படிப்பட்ட ஒரு காரியமே கிடையாது, அது வேதாகமத்திலே கிடையாது. லாசருவின் காரியத்தைப் போல... அவர் கூறினார்-அவர் கள் கூறினார்கள்... ‘நம்முடைய-நம்முடைய சிநேகிதனாகிய லாசரு நித்திரையடைந்திருக்கிறான் (யோவான் 11:11)’ என்று இயேசு கூறினார். பாருங்கள், அவன் மரித்து விட்டான் என்று அவர் ஒருபோதும் கூறவில்லை. ‘அவன் நித்திரையடைந் திருக்கிறான்’ என்று தான் கூறினார். 84.அவர்கள், ‘ஓ, நல்லது, அவன் நித்திரையாயிருந்தால், அவன் நன்றாகத்தான் இருக்கிறான் என்று நான்-நான் நினைக் கிறேன். அவன் நிச்சயமாக சுமடைந்து கொண்டிருக்கிறான்’ என்றார்கள். எனவே, அவர் அவர்களுடைய மொழி நடையில் பேச வேண்டியதாயிற்று. 85.அவர், ‘இப்பொழுது, வேறு வழியில்... உங்களுடைய சொந்த பாஷையில் (கூறினால்) அவன் மரித்துப் போனான். அவன் அங்கே இராததினால் உங்கள் நிமித்தம் சந்தோஷப் படுகிறேன். நான் அவனை எழுப்பப் போகிறேன்’ என்றார். பாருங்கள்? ஓ, ஆமாம். பாருங்கள்? நித்திரை செய்தல். பாருங்கள், அவர் அப்பொழுதும் அவருடைய சொந்த... ஐக் கொண்டிருந்தார். புரிகிறதா? ‘உங்கள் நிமித்தமாக-நீங்கள் அதை அறிந்து கொள்ளும் விதமாக, அவன் மரித்துப் போனான். ஆனால் எனக்கோ, அவன் நித்திரையடைந் திருக்கிறான், நான் - செய்யப் போவதில்லை. நான் அவனை உயிர்த்தெழும்படி செய்யப் போவதில்லை, நான் அவனை வெறுமனே எழுப்பப் போகிறேன். பாருங்கள், நான் அவனை எழுப்பப் போகிறேன்’ என்றார். 86.எனவே, நீங்கள்-நீங்கள் இதைக் கவனியுங்கள் இயேசு தாமே மரித்த போதும்... பாருங்கள், சரீரம் மூன்று பாகங்களால் ஆனது. ஒரு ஆத்துமா... நாம் மூன்று பாகங்களாக இருக்கிறோம், நீங்கள் ஏழு சபைக் காலங்களில் கண்ட படி, அவை ஆத்துமா, சரீரம், ஆவி ஆகியவையாகும்; நான் அதை வரைந்து வைத்திருந்தேன்: சரீரத்திற்கு ஐந்து உட்பிரவேசிக்கும் வாசல்கள் (entrances)  இருக்கின்றன, அவை பார்த்தல், ருசித்தல், உணருதல், முகருதல், மற்றும் கேட்டல் ஆகியவையாகும், மேலும் மனசாட்சியும், இன்னும் மற்றவையும் தான் ஆத்துமா வுக்கானவை. அதன்பிறகு ஆவிக்கு அங்கே ஒரு உட்பிர வேசிக்கும் வழி தான் உண்டு: அது உங்களுடைய சுயாதீன சொந்த சித்தமாகும் (free moral agency). அது ஒரு தீர்மானம் எடுப்பதாகும். நீங்கள் பாருங்கள்? நீங்கள் அதைப் புறக்கணிக்க லாம், அல்லது-அல்லது நீங்கள் அதை ஏற்றுக் கொள்ளலாம். எனவே இப்பொழுது, ஒரு நபர் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டு, இரட்சிக்கப்படும்போது, உங்களுடைய வீட்டார் எல்லாருமே, உங்களுடைய முழு குடும்பமே, பூமியிலுள்ள ஒவ்வொரு குடும்பமும் இரட்சிக்கப்பட்டு விடும். இப்பொழுது... அல்லது, அவர்கள் உள்ளே போவார்கள். 87.இப்பொழுது, கிறிஸ்து மரித்த போது, அவர் சிலுவையை விட்டுப் போவதற்கு முன்பாக, தமது ஆவியை தேவனிடத்தில் ஒப்புவித்தார். அவர், ‘உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் (லூக்கா 23:46)’ என்றார். அவருடைய ஆத்துமாவோ பாதாளத்திற்குப் போய், அவர் காவலில் இருந்த ஆவிகளுக்குப் பிரசங்கித்ததாக (அதுதான் அவருடைய மனசாட்சி, அவர் என்னவாக இருந்தாரோ அது...) வேதாகமம் கூறுகிறது, மற்றும் அவருடைய சரீரமோ கல்லறைக்குச் சென்றது. இப்பொழுது பாருங்கள், அவர் வேதவாக்கியங்களின் தடைவேலிக்கு (barricade) பின்னால் இருந்தார். அவரால் மூன்று நாட்களாக உயிர்த்தெழ முடியவில்லை. அவருடைய ஆவி இங்கே தேவனுடைய சமூகத்திற்குத் திரும்பிச் சென்றது. இப்பொழுது, மூன்று நாட்களுக்குப் பிறகு, அந்த தடை அரண் (barricade) கீழே விழுந்தது, ஏனென்றால் வேதவாக்கியம் நிறைவேறியிருந்தது. அவருடைய ஆவியானது அந்த ஆத்துமாவிடம் சென்றது, அந்த ஆத்துமாவோ சரீரத்திடம் சென்றது. அவர் உயிர்த்தெழுந்தார். அவர் மரிப்பதற்கு முன்பாக இவ்வாறு கூறினார், அவர், ‘என்னுடைய ஜீவனைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு. அதை மறுபடியும் எடுத்துக் கொள்ளவும் எனக்கு அதிகாரம் உண்டு (யோவான் 10:17,18)’ என்றார். 88.இப்பொழுது, அதைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள். நான் அறிந்துள்ளவரையில், இன்றிரவு இங்கேயுள்ள நீங்கள் ஒவ்வொருவரும் கிறிஸ்தவர்களாக இருக்கிறீர்கள். இப்பொழுது, கவனியுங்கள். இப்பொழுது உங்களுக்குள் இருக்கிற அந்தக் காரியமானது, இப்பொழுது உங்களுக்குள் இருக்கிற அந்த ஆவி, அந்த அதே ஆவி தான் உங்களை உயிர்த்தெழவும் செய்யும். உங்களுடைய ஜீவனைக் கொடுக்க உங்களுக்கு அதிகாரம் உண்டு. நீங்கள் இப்பொழுதே கிறிஸ்துவுக்காக அதைக் கொடுக்கிறீர்கள். அதன்பிறகு அதை மறுபடியும் எடுத்துக் கொள்ளவும் உங்களுக்கு அதிகாரம் உண்டு. பாருங்கள்? அதைக் கொடுக்கவும், அதை எடுத்துக் கொள்ளவும் உங்களுக்கு அதிகாரம் உண்டு. அது உங்களை உயிர்த்தெழச் செய்கிற உங்களுக்குள் இருக்கிற அந்த அதே தேவனுடைய ஆவிதான். அந்த அதே தேவனுடைய ஆவி தான் கிறிஸ்துவை உயிரோடெழுப்பும்படி அவருக்குள்ளும் இருந்தது. ஆகவே தான், அதைக் கொடுக்க வும் உங்களுக்கு அதிகாரம் உண்டு; அதை எடுத்துக் கொள்ளவும் உங்களுக்கு அதிகாரம் உண்டு. 89.நீங்கள் மரிக்கும்போது, அல்லது - நீங்கள் - நம்மு டைய அன்பார்ந்தவர்களோ அல்லது யாராவது நமக்கு முன்பா கவே போய் விடுவார்களானால், அவர்கள் மரிக்கவில்லை. அவர்களுடைய ஆவி தேவனோடு இருக்கிறது, அவர்களு டைய ஆத்துமாவோ தேவனுடைய பலிபீடத்தின் கீழ் இருக் கிறது, அவர்களுடைய சரீரமோ கல்லறைக்குள் இருக்கிறது, அது சரியாக எங்கேயிருக்கிறது என்று அவர்களுக்குத் தெரியும். எனவே, என்ன சம்பவிக்கிறது? வேதவாக்கியங்கள் எல்லாம் நிறைவேறும் போது, அது வேதாகமத்தில் கூறப்பட்டது போல, - ‘இந்த ஆத்துமாக்கள் பலிபீடத்தின் கீழிருந்து கொண்டு, ‘எதுவரைக்கும் கர்த்தாவே, எதுவரைக்கும்?’ என்று கதறிக் கொண்டிருக்கின்றன’ என்று அது கூறுகிறது. அவர்கள் பூமிக்குத் திரும்பி வந்து, சரீரங்களில் இருக்க விரும்புகின்றனர். அவர், ‘கிறிஸ்துவுக்கு சாட்சியாக நீங்கள் துன்பப்பட்டது போல, உங்கள் உடன் ஊழியக்காரரும் துன்பப்படுகிற வரையில் கொஞ்ச காலம் (இளைப்பாற வேண்டும்)’ என்று கூறினார். அதன்பிறகு, நீங்கள் பாருங்கள், அந்த வேதவாக்கியம் நிறைவேறும் போது, அந்த ஆவிகள் அங்கே நேராக பலிபீடத்தின் கீழ் இறங்கி அந்த ஆத்துமாவை மேலே எடுத்துக்கொள்ளும். அந்த ஆத்துமாவோ கீழே சென்று, அந்த சரீரத்தைக் கண்டுபிடித்து, (அங்கே தான் நீங்கள் இருக்கிறீர்கள்), அதை மீண்டும் உயிர்த்தெழச் செய்யும். 90.அதைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள். இன்றிரவு சரியாக இக்கட்டிடத்தில் இருக்கும் இந்த பரிசுத்த ஆவி, இங்கே என்னுடைய இருதயத்திற்குள் இருக்கிற இந்த பரிசுத்த ஆவி தான் கடைசி நாளில் என்னை உயிரோடெழுப்பும். இப்பொழுது எனக்குள் இருக்கிற இந்த பரிசுத்த ஆவி தான் நான் ஒரு அழியாமையுடைய வாலிப சரீரத்தைக் கொண்டவனாய் இருப்பதைக் காணும், அது ஒருபோதும்... (அழிந்து) போகாது. உங்களுக்குள் இருக்கும் பரிசுத்த ஆவி தான் நரைத்த தலைமுடிகள் மங்கி மறைந்து போவதைக் காணும், மேலும் அது என்னவாயிருந்தாலும் அதைக் காணும். வயது முதிர்ந்த நீங்கள், மிகவும் வயது முதிர்ந்தவர்களா யிருந்து, மீசையைக் கொண்டவர்களாய், இவ்விதமாக நடந்து கொண்டிருந்தாலும், -அது ஒரு துளி வித்தியாசத்தையும் ஏற்படுத்துவதில்லை. அந்த அதே பரிசுத்த ஆவியானவர் அந்நாளில் சடுதியாக, உங்களை மறுபடியும் ஒரு வாலிப னாகவோ, வாலிப பெண்ணாகவோ மாற்றி விடுவார். அது வேதாகமமாக இருக்கிறது. அது உண்மை. அது இப்பொழுது நமக்குள் இருக்கிற அந்த ஆவி தான். அது சரியாக இப்பொ ழுதே நமக்குள் இருக்கிறது. இனி வரப்போகிற ஒன்று அல்ல, இப்பொழுது நமக்குள்ளிருக்கிற ஒன்று. இப்பொழுது அது உங்களுக்குள் இருக்கிற தேவனாகும், அவர் உயிரோ டெழுப்புவார்... 91.நீங்களாகவே மேலே எழும்பிச் செல்ல முடியும். இப்பொழுதே உங்களால் ஏன் அதைச் செய்ய முடியவில்லை? காரணம் என்னவென்றால் பாருங்கள், அங்கே வேதவாக்கியம் தான் உங்களைக் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறது; நீங்கள் எடுத்துக்கொள்ளப்படுதல் வரைக்கும் காத்திருக்க வேண்டி யுள்ளது. பாருங்கள், அங்கே தான் உங்கள் காரியம் இருக்கிறது. நீங்கள் சரியாக அங்கேயே தரித்திருக்க வேண்டும். புரிகிறதா? இவ்வளவு உயரத்திற்கு (எழும்பி) வருவதற்கு உங்களுக்கு அனுமதியில்லை. அது அவ்வாறு இருக்குமானால், ஏன், நாம் -- நாம் நமக்கு சொந்தமான ஒரு சிறிய உலகத்தை நமக்கென்று சிருஷ்டித்திருப்போம் என்று நான் கூறினேன். அப்பொழுது நீங்கள் ஒரு உலகத்தில் ஜீவித்து, நானோ வேறொரு உலகத்தில் ஜீவித்திருப்பேன், அப்படியானால் அங்கே கர்த்தராகிய இயேசுவின் வருகையே இருக்காதே. அது என்னவாக இருக்கும்? புரிகிறதா? ஆனால் அதைச் செய்ய உங்களுக்கு வல்லமை உண்டு. வெறுமனே தேவனுடைய மிக மிகச்சிறிய நிழலும் எதையும் செய்ய முடியும். ஏனென்றால், பாருங்கள், அவர்-அவர் சர்வ வல்லமை உடையவர். சர்வ வல்லமை என்பது என்னவென்று உங்களுக்குத் தெரியும்... அவர் முடிவற்றவராயிருக்கிறார். முடிவற்றவர், முடிவற்றவர் என்பதும் சர்வ வல்லமை படைத்த வர் என்பதும். அதுதான் முடிவற்றவர் என்பது; அங்கே... இல்லாதவர். நல்லது, உங்களால்-உங்களால்-உங்களால் அதை விளக்கிக் கூறவே முடியாது என்பது உங்களுக்குத் தெரியும். முடிவில்லாத என்பது அப்படியே ஒரு கேமராவின் மேல் இருப்பதைப் போல, முடிவற்றது.- அது அப்படியே அங்கே யிருந்து தான் வருகிறது. 92.அதன்பிறகு, சர்வ வல்லமையுள்ள என்பது சகல வல்லமையும் கொண்ட என்பதாகும். போகும் இடமெல்லாம் அவர் இருக்கிறார்... அந்த இரவில், அப்பெரிய கண்ணாடி வழியாக பார்க்கும்படியாக என்னைப் பார்க்க வைக்கும்படியாக, அந்த வானியல் ஆய்வாளர் என்னை மேலே அழைத்துச் சென்ற போது, நான் இங்கே வெளியே நின்று கொண்டு, ஒரு கண்ணாடி வழியாக நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்தேன், அப்போது 120 மில்லியன் ஒளி ஆண்டுகள் தூரத்தையும் என்னால் காண முடிந்தது. 120 மில்லியன் ஒளி ஆண்டுகள் தூரத்தையும் காண முடிந்தது... நல்லது, நீங்கள் இப்பொழுது காணும் வியாழன் கோளைக் குறித்தும், செவ்வாய் கிரகத்தைக் குறித்தும், இந்த நட்சத்திரங்களைக் குறித்தும் பேசுகிறீர்களே, நல்லது, என்னே, நூற்றி... க் குறித்து எண்ணிப் பாருங்கள். ஒளியானது ஏறக்குறைய...பயணம் செய்கிறது. அது என்ன? எண்பத்து... அது வினாடிக்கு 1,86,000 மைல்கள் பயணம் செய்கிறது. வினாடிக்கு ஒரு இலட்சத்து எண்பத்தாறாயிரம் மைல்கள். அது ஒரு 120 மில்லியன் ஆண்டுகளை எடுத்துக் கொள்கிறது. வியூ. வினாடிக்கு 1,86,000 - அதை 120 மில்லியன் ஆண்டுகளுக்கு வகுத்துப் பாருங்கள். அப்படியானால் உங்களுக்கு என்ன கிடைக்கிறது? அதுதான் மைல்கள். ஓ, என்னே, அது அப்படியே நம்மை நீங்கள்-நீங்கள்... போன்று உணரச் செய்கிறது. பாருங்கள்? ஆனால் இப்பொழுது, அப்படியானால் அதற்கும் அப்பால், அங்கே அநேக சந்திரனும், நட்சத்திரங்களும் உள்ளனவே... அவருடைய சொந்த வார்த்தையின் வல்லமையைக் கொண்டு அவர் அவைகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். 93.அந்த அதே காரியம் தான் ஒரு கிறிஸ்தவனான உங்களுக்குள்ளும் இருக்கிற அவைகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. ஓ, என்னே. பாருங்கள், பாருங்கள், அங்கே தான் உங்கள் காரியம் இருக்கிறது. எனவே அங்கே - அதுவாகத்தான் நீங்கள் இருக்கிறீர்கள். பாருங்கள், ஜனங்கள், ‘நல்லது, நான் ஒரு கிறிஸ்தவன். நான் விடாப்பிடியாக தொடர்ந்து முயற்சி செய்ய (dogged around) வேண்டும் என்று நினைக்கிறேன்’ என்று நினைக்க முயலுகிறார்கள். இல்லை, நீங்கள் அவ்வாறு செய்ய வேண் டாம். சகோதரனே, நீ ஒரு கிறிஸ்தவனாயிருக்கிறாய். அது உன்னதமான... நீ ஒரு தேவனுடைய குமாரனாயிருக்கிறாய். நம்முடைய பிதா இராஜாவாயிருக்கிறார். நிச்சயமாக. ஆமென். நம்முடைய பிதாவானவர் இராஜாவாக இருக்கிறார், நாமோ- நாமோ அவருடைய குமாரர்கள். நாம் ஒரு இராஜாவுக்கு இராஜ குமாரர்களும் (இளவரசர்களும்), இராஜ குமாரத்திகளுமாய் (இளவரசிகளுமாய்) இருக்கிறோம், (ஆமென்). பாருங்கள்? அங்கே எவ்வளவு மிக உயர்ந்த நிலை இருக்க முடியுமோ, அவ்வளவு மிக உயர்ந்த நிலையில் இருக்கிறோம். நமது தேவனுடைய அதே ஆவி தான் நமக்குள்ளே இருக்கிறது. அதுதான் காரியம். எனவே, இங்கே சம்பவிக்கிற காரியங்களைக் குறித்து நாம் ஏன் கவலைப்படுகிறோம்? பாருங்கள், அங்கே உள்ள அந்த இடத்தை தான் கவனத்தில் கொள்ள வேண்டும். இது வெறுமனே ஒரு சோதனை காலம் தான். பிதாவானவர் இதை முடிக்கும் போது, நாம் போய் விடுவோம். நாம் வீட்டிற்குப் போவோம். பாருங்கள்? எனவே, அது என்ன வித்தியாசத்தை உண்டுபண்ணும்? 94.எனவே, பிறகு, அக்காரணத்தினால், உங்களுடைய பிள்ளைகள் இரட்சிக்கப்படாமலிருந்தால், அவர்கள் இரட்சிக் கப்படுவது வரையில், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவா சியுங்கள். (இப்பொழுது, பரிசுத்த யோவான் 5:24ல்), இயேசு, ‘என் வசனங்களைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவா சிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு; அவன் நியாயத் தீர்ப்புக்கு உட்படுவதில்லை’ என்று கூறியுள்ளதை ஞாபகம் கொள்ளுங்கள். அப்படியானால், அவன் நியாயத்தீர்ப்புக்கு உட்படாமலிருந் தால், அவன் எங்கே போகிறான்? அவன் எடுத்துக் கொள்ளப் படுதலில் போகிறான். பாருங்கள்? காரணம் எடுத்துக்கொள்ளப் படுதலுக்குப் பிறகு தான் நியாயத்தீர்ப்பு இருக்கிறது. பாருங் கள்? ‘அவன் நியாயத்தீர்ப்புக்கு உட்படாமல், மரணத்தை விட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான்.’ ஏனென்றால் அவன் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசித்திருக்கிறான். அது அற்புதம் அல்லவா? ஆகையால் அவர்கள் - உங்களுடைய பிள்ளைகள் அங்கே உங்களுடனே கூட இருப்பார்கள். உங்களுடைய அன்பார்ந்தவர்களும் அங்கே உங்களுடனே இருப்பார்கள். நானும் அங்கே உங்களோடு இருப்பேன் என்று நம்புகிறேன். ஆமென். 95.சரி, மகனே ஜிம்மி, அங்கே உன்னிடம் வேறு கேள்வி இருக்கிறதா? (சகோதரன் ஜிம்மி அடுத்த கேள்வியை வாசிக்கிறார்: ‘விசுவாசத்தினாலே உலகம் உண்டாக்கப்பட்டது என்று நமக்குத் தெரியும். தயவுசெய்து விசுவாசத்தைக் குறித்து கொஞ்சம் விளக்கிக் கூறுவீர்களா?’ - ஆசிரியர்.) 96.உலகமானது உண்டாக்கப்பட்டது... இப்பொழுது, எபிரெயரில் நாம் அதைக் கண்டுகொள்கிறோம்... உலகமானது தோன்றப்படாதவைகளினாலே உண்டானது என்பதை நாம் அறிகிறோம். இப்பொழுது, நான்-நான் துரிதப்பட முயற்சிப்பேன், ஏனென்றால் அங்கேயுள்ள அந்தச் சிறு கேள்விகள் எல்லா வற்றையும் - அவை எல்லாவற்றையும் நான் கவனிக்கவில்லை. இப்பொழுது, நாம் இதை சற்று எடுத்துக் கொள்வோம் - நாம் பின்னோக்கி ஒரு சிறு பயணம் போகலாம். ஏற்கனவே பத்து மணி ஆகி விட்டது, பத்து மணி வாக்கில் நான் போக ஆயத்தமாயிருப்பேன் என்று அம்மாவிடம் கூறினேன். சிறிது நேரம் காத்திருக்கும்படிக்கு - உங்களுக்கு-உங்களுக்கு அதிக தூக்கம் வருகிறதா? அல்லது மிகவும் களைப்படைந்து விட்டீர் களா? பாருங்கள்? நல்லது, கவனியுங்கள், அங்கே ஏதாவது இருந்ததற்கு முன்பே - நாம் இதைப் பார்ப்போம், அங்கே ஒரு வெளிச்சம் இருந்ததற்கு முன்பே, அங்கே ஒரு உலகம் இருந்ததற்கு முன்பே, அங்கே ஒரு நட்சத்திரம் இருந்ததற்கு முன்பே, அங்கே ஒரு அணு இருந்ததற்கு முன்பே, அங்கே ஒரு மூலக்கூறு இருந்ததற்கு முன்பே, அங்கே ஒரு தேவன் இருந்தார். இந்த நபராகிய தேவன் யார்? அவர் ஆகாயமாக இருக்கிறாரா? அவர் வெளிச்சமாக இருக்கிறாரா? அவர்... ஆக இருக்கிறாரா? அவர் தேவனாக இருக்கிறார். அதை நீங்கள் எல்லாருமே கூற முடியும். பாருங்கள்? சற்று சிந்தித்துப் பாருங்கள், ஒரு மூலக்கூறு... ஒரு சிறு அணுவில் அநேக மூலக்கூறுகள் இருக்கின்றன. பாருங்கள்? அப்படியானால் அந்த மூலக்கூறுக்கும் அப்பால், அவைகளில் ஒன்று கூட அங்கே இருப்பதற்கு முன்பே, அங்கே அப்பொ ழுதும் தேவன் இருந்தார். அவர் எல்லாமுமாக இருந்தார், அவர் சகலத்தையும் நிரப்பிக் கொண்டிருந்தார். பாருங்கள்? 97.இப்பொழுது, இந்த தேவனில்... இப்பொழுது, நாம் இவ்வாறு செய்யப் போகிறோம் - நாம் அவரை ஒரு சிறு - ஒரு சிறு வடிவமாக ஆக்கப் போகிறோம், அப்பொழுது உங்களால் காண முடியும். இப்பொழுது, இதற்குள்ளே - இந்த நபராகிய தேவனுக்குள்ளே... அங்கே இந்த நபருக்குள்ளே தன்மைகள் இருந்தன. அந்தத் தன்மைகள் பிதாவாக இருக்க வேண்டியிருந்தன, ஒரு சுகமளிப்பவராக இருக்க வேண்டியிருந்தன, ஒரு இரட்சகராகவும் இருக்க வேண்டியிருந்தன; அதுதான் இப்பொழுது இந்த மகத்தான நபருக்குள்ளே இருந்தன, அது ஒரு மூலக்கூறோ அல்லது எதுவுமோ இருப்பதற்கு முன்பே இருந்தது - அங்கே எந்த மூலக்கூறுகளும் இல்லாத போதே, ஆனால் இங்கே இன்னும் தேவன் இருந்தார். இப்பொழுது, அங்கே உள்ளே பிதாவாக இருக்க வேண்டிய, ஒரு குமாரனாக இருக்க வேண்டிய, ஒரு இரட்சகராக இருக்க வேண்டிய, ஒரு சுகமளிப்பவராக இருக்க வேண்டிய, அந்த எல்லாமாய் இருக்க வேண்டிய தன்மைகள் இருந்தன. இப்பொழுது, இதை உடையவராக இருந்த இந்த நபர், இப்பொழுது, இந்த நபராகிய தேவன்... 98.இப்பொழுது, அவர் என்ன செய்தார்... முதலாவது காரியம் என்னவென்றால், நாம் இவ்வாறு கூறுவோம், (நாம் அறிந்துள்ளவரையில், நாம் எவ்வளவு சிறியதாக பிரிக்கக் கூடுமோ அவ்வளவு சிறியதான காரியமாகிய) ஒரு மூலக்கூறை அவர் உண்டாக்கினார். அவர் ஒரு மூலக்கூறை உண்டாக்கின பிறகு, அவர் ஒரு வினாடியில் அவைகளில் 100 பில்லியன் அளவு உண்டாக்கினார், அப்படியே அவர் என்ன செய்தார்? அது உண்டாக வேண்டுமென்று அவர் உரைத்தார். இப்பொ ழுது, நீங்கள்... நாம் அதற்குள்ளாக போவதற்கு நமக்கு நேரம் இருக்குமானால், இங்கே இதோ ஒரு நல்ல பாடம் இருக்கிறது. பாருங்கள்? இப்பொழுது, அவர் அதை உரைத்தார். அவர் அதைக் கூறினபோது, மூலக்கூறுகள் சுழலத் தொடங்கின. அதன் பிறகு அவர், ‘அணுக்கள் உண்டாகக்கடவது’ என்றார். அங்கே தான் அணுக்களின் பிரமாணங்கள் இருக்கின்றன. அவைகள் இன்னும் அந்தப் பிரமாணத்தில் தான் தரித்திருக்கின்றன. அவைகளுடைய பாதையில் - இன்னும் பயணம் செய்து கொண்டிருக்கின்றன. யாவுமே தேவனுடைய பிரமாணங்களில் தான் பயணித்துக் கொண்டிருக்கின்றன. 99.நான் உங்களிடம் கூறிக் கொண்டிருந்த அந்த மனிதனைப் போல, அந்த வயதான சகோதரன் பாங்ஸ் உட்டும், நானும் அவரைக் காணச் சென்றோம், அது உங்களுக்குத் தெரியும். அவர்... க் குறித்துப் பேசிக் கொண்டிருந்தார். எவ்வாறு... நான் அவரிடம் கேட்டேன். அவர் ஒரு நாஸ்திகராக இருந்தார், நான் அவரிடம் இவ்வாறு கேட்டேன், ‘அந்த தாவர உயிர் சத்து ஆகஸ்டு மாதத்தில் அந்த மரத்தை விட்டுப் போய், கீழே வேர்களுக்குள் போய் விடுகிறதே? எது அதைச் செய் கிறது? அவர்... இலைகளைப் பழுப்பு நிறமாக ஆக்குவது எது?’ என்று கேட்டேன். அவர், ‘ஏனென்றால், சத்து (sap)...’ என்றார். நான், ‘என்ன... அந்தச் சத்து ஏன் கீழே போய் விடுகிறது?’ என்று கேட்டேன். அவர், ‘நல்லது, அது அப்படியே கீழே போய் விடுகிறது’ என்றார். நான், ‘அது கீழே போகாமலிருந்தால் என்னவாகும்?’ என்று கேட்டேன். ‘அந்த மரம் மரித்து விடும்’ என்றார். 100.நான், ‘நல்லது, எந்த அறிவுத்திறன் அந்த சத்தை கீழே வேர்களுக்குள் போகச் செய்கிறது? ஒரு பக்கெட் தண்ணீரை ஒரு கம்பத்தில் மாட்டி வைத்து, அது ஆகஸ்டு மாதத்தில் கீழே போகிறதா என்று பாருங்கள்’ என்றேன். புரிகிறதா? நான், ‘எந்த அறிவுத்திறன் அந்த சத்தை அம்மரத்தை விட்டுப் போகச் செய்து, கீழே வேர்களுக்குள் போக வைத்தது? அங்கே கீழே போக வேண்டுமென்று ஏதோவொன்று அதனிடம் கூறுகிறது, அல்லதுஅது-அது-அது உறைந்து போய் மரித்து விடும். அந்த மரம் மரித்து விடும். பாருங்கள்? நமக்கு எந்த குளிர்ந்த தட்பவெப்பநிலையும் இல்லாதிருக்கிறது, அல்லது இன்னும் எதுவுமேயில்லை. ஆனால் அது...’ என்று கூறினேன். அவர், ‘நல்லது, அது-அது வெறுமனே இயற்கையாக உள்ளது’ என்று கூறினார். 101.‘நல்லது, இயற்கை என்பது என்ன? இயற்கை என்பது என்ன என்று என்னிடம் கூறுங்கள்.’ பாருங்கள்? இயற்கை என்பது தேவனுடைய ஒரு பிரமாணமாக இருக்கிறது. ஆமாம், அது தேவனுடைய ஒரு பிரமாணமாகும். 102.இப்பொழுது, விசுவாசம் என்பதும் தேவனுடைய ஒரு பிரமாணம் தான் (பாருங்கள்?), அதே காரியம் தான். நாம் பேசிக் கொண்டிருக்கும் தேவனுடைய இந்த சகல வல்லமையும் விசுவாசத்தின் மூலமே அடையக் கூடியதாக இருக்கிறது. ‘எல்லாம் கூடும். இந்த மலையைப் பார்த்து தள்ளுண்டு போ என்று சொல்லி, நீங்கள் சொன்னபடியே நடக்கும் என்று உங்கள் இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசித்தால், அது உங்களுக்கு உண்டாகும்.’ அது எளிதாகப் பெற்றுக் கொள்ளத் தக்கதாக உள்ளது. நீங்கள் அந்தப் பிரமாணத்தைப் பெற்றிருந் தால், அங்கே தான் அது இருக்கிறது. பாருங்கள்? அந்தப் பிரமாணம் விசுவாசமாக உள்ளது - அதுதான் எல்லாவற்றை யும் ஆளுகை செய்கிறது. 103.இப்பொழுது, தேவன் தமது பிரமாணத்தின் மூலமாக மூலக்கூறுகளை உண்டாக்கினார். அது தேவனுடைய ஒரு பிரமாணமாகும். அதன்பிறகு தேவன் அணுக்களை உண்டாக் கினார். பிறகு அதிலிருந்து தேவன் ஒரு சூரியனை உண்டாக் கினார். அதிலிருந்து, அந்த சூரியனிலிருந்து, நட்சத்திரங்களை உண்டாக்கினார். அந்த நட்சத்திரத்திலிருந்து... அது தூரத்தில் பறந்து கொண்டிருக்கும் சூரியனின் சிறு துண்டுகள் தான். அவரிடம் என்ன இருந்தது? நீண்ட காலத்திற்கு முன்பு, அங்கே அவருடைய தன்மைகள் தங்களைத் தாங்களே திறந்து காண்பித்துக் கொண்டிருந்தன. அதன்பிறகு ஒரு உலகம் வருகிறது. உலகமானது ஒரு சிருஷ்டிப்பாக வந்த பிறகு. அந்த சிருஷ்டிப்புக்கு பிற்பாடு, சிருஷ்டிக்கும்படியான ஒரு பிரமாணம் வருகிறது. அங்கே ஒரு உலகம் இருந்த பிறகு... 104.இந்த உலகத்தை உண்டாக்கினது எது? அது எப்படி என்று யாராவது விளக்கிக் கூற முடியுமா? நீங்கள் விரும்புகிற எவ்விதமாகவும் ஒரு பந்தை சுழற்றி, அதை ஆகாயத்தில் எறிந்து விடுங்கள், இரண்டு சுற்றுகளை சுற்றாது. அது வினாடிக்கு பில்லியன் சுற்றுகளை சுற்றுகிறது, அது ஒரே இடத்தில் வைத்து இரண்டு சுற்றுகளை சுற்றாது. இருப்பினும், இந்த உலகத்தில் நேரம் தவறிப்போனதே கிடையாது, அது மிகச்சரியாக 24 மணி நேரங்கள் மாறி மாறி வந்து கொண்டே யிருக்கிறது என்று 6000 வருட பதிவுச் சான்று நமக்குண்டு - அது எந்தவிடத்திலும் நிற்பதேயில்லை. பாருங்கள்? அது என்ன? அங்கே ஒரு உலகம் இருந்ததற்கு முன்பே இம்மகத்தான நபர் - அங்கே ஒரு உலகம் இருந்ததற்கு முன்பாகவே, அந்த மகத்தான நபர் அங்கேயிருந்தார், தேவ னுடைய ஒரு பிரமாணம் தான் அதை சுழலச் செய்கிறது. தேவனுடைய அதே பிரமாணம் தான், அது அங்கே இருக்கும் படி அதை உரைத்தது. அவர் ஒரு சிருஷ்டிகராயிருக்கிறார். அவர் சிருஷ்டிக்கிறார். பாருங்கள்? ஆகையால் தான் இந்த உலகமானது... இல்லாமலே உண்டாக்கப்பட்டது. விசுவாசத்தினாலே, தேவன் உலகத்தை உண்டாக்கினார், ஏனெனில் (பாருங்கள்?) அவருடைய சொந்த விசுவாசமே உலகத்தை உண்டாக்கினது. அவ்வாறு தான்... இப்பொழுது, அவர்... 105.பாருங்கள், அவர் பாவத்திடமாக இறங்கி வருவது வரையில், அவர் இறங்கி வந்து, மனிதனையும் மிருகங்கள் அனைத்தையும் உண்டாக்கினார். ஆனால் அவரால் பாவத்தை சிருஷ்டிக்க முடியவில்லை, ஏனென்றால் அவர் பாவத்தை உண்டாக்கி விட்டு, அவர் நீதிபரராயும், நீதிக்குப் பிதாவாகவும் இருக்க முடியாது. எனவே, அவர் என்ன செய்தார் என்பது உங்களுக்குத் தெரியுமா? அவர் தமது சொந்த சாயலில் மனிதனை உண்டாக்கி, அவன் விழுந்து போவான் என்பதை அறிந்திருந்தார், ஆனால் சுயாதீன சித்தத்தின் அடிப்படையில் அவனை வைத்து, ‘இப்பொழுது, இந்த மரத்தைத் தொடாதே’ என்று கூறினார். இப்பொழுது, அவரால்... என்று கூற முடியவில்லை. இப்பொழுது, அவன் அதைத் தொடப் போகிறான் என்பது அவருக்குத் தெரியும், ஆனால் அவரால்...?... முடியவில்லை, இதைத் தொடும்படி அவனை, ஏனெனில் அவர், ‘இந்த மரத் தைத் தொட்டால், நீ பிழைப்பாய்; இந்த மரத்தைத் தொட்டால் நீ மரிப்பாய்’ என்று கூறினார். பாருங்கள்? மனிதன் தோல்வி அடைவான் என்பது அவருக்குத் தெரியும், இருப்பினும் அவனை தோற்றுப் போகும்படி செய்ய அவரால் முடியவில்லை. அவர் தாமே அதைச் செய்ய வேண்டியிருந்தது... எனவே அது தேவனை நீதியுள்ளவராகச் செய்கிறது, நீங்கள் பாருங்கள்? மனிதன் தானாகவே விழுந்து போனான். அவர் அவனை தம்மண்டையில் மிக நெருக்கமாக வரச் செய்த பிற்பாடு, அவர் அவனை சுயாதீன சித்தத்தின் அடிப்படையில் வைத்தார், ஆகையால், அங்கே தான் அவன் விழுந்து போனான். அவனுடைய சொந்த சுயாதீன சித்தத்தின் செயல்பாட்டின் மூலமாகவே, அவன் விழுந்தான். இன்றும் பிள்ளைகளாகிய நீங்கள் ஒவ்வொருவரும், வயது வந்தவர்களாகிய நாம் ஒவ்வொருவரும் அந்த அதே இரண்டு மரங்களின் (விருட்சங்களின்) அருகில் தான் வைக்கப் பட்டிருக்கிறோம். நாம் ஜீவனை ஏற்றுக்கொள்ளலாம், அல்லது அதைப் புறக்கணிக்கலாம். பாருங்கள்? 106.எனவே, அது உண்டாக வேண்டுமென்று தேவன் உரைத்தார், உலகம் உண்டானது. இந்த இதே தரை தேவ னுடைய வார்த்தை தான். இங்கேயுள்ள இந்தக் காரியம் தேவ னுடைய வார்த்தையாக உள்ளது. நம்முடைய சரீரங்கள் தேவ னுடைய வார்த்தையாக உள்ளன. அங்கேயிருக்கிற எல்லாமே தேவனுடைய வார்த்தையாகத்தான் இருக்கிறது. பாருங்கள்? ஏனென்றால் இவை எல்லாமே தேவனிடமிருந்து தான் உருவானது. சரி, ஐயா. இப்பொழுது-இப்பொழுது, அது சரியாக இல்லா மலோ, அது தெளிவாக புரிந்து கொள்ளும் வகையில் இல்லா மலோ இருந்தால், ஏன், நீங்கள்-நீங்கள் எனக்கு ஒரு குறிப்பு எழுதி, அதை சபையிடம் கொடுத்து விடலாம்...?... 107.சரி, சகோதரன் ஜிம்மி. (சகோதரன் ஜிம்மி அடுத்தக் கேள்வியை வாசிக்கிறார்: ‘1 கொரி 16:22 ஐ விளக்கவும்...’ - ஆசிரியர்.) 108.நாம் பார்ப்போம், 1 கொரிந்தியர் 16:22. சரி, ஐயா. சற்று பொறுங்கள். இந்த - இந்தச் சிறு - இந்த சிறு வேத ஆராய்ச்சி கள் உண்மையாகவே நமக்கு உதவி செய்ய முடியும். அது- அது உங்களை பெலப்படுத்தி, உங்களை உறுதியான வல்லமை மிக்க மனிதர்களாக ஆக்க முடியும் - அது உங்களை அவ்வாறு ஆக்க முடியும். 16ம் அதிகாரம் என்று தானே கூறினாய், மகனே? (ஒலி நாடாவில் காலியிடம் - ஆசிரியர்.)... அவன்... இருக்கக் கடவன்.’ ஓ, எனது சிறப்பான காரியம். என்னால் முடிய வில்லை - என்னால் அந்தப் பெயரை உச்சரிக்க முடியுமா இல்லையா என்று தெரியவில்லை.அ-னா-தீ-மா மா-ர-மா-தா (A-n-a-t-h-e-m-aM-a-r-a-m-a-t-h-a). வேறொரு வேதாகமம் வைத்திருக்கும் யாராவது அதைத் தனித்தனியாகப் பிரித்துப் பார்த்து, அது என்னவென்று பாருங்கள். அதாவது அந்தா... அது என்ன கூறுகிறது? அது... போன்று ஒலிக்கிறது. அது என்ன, ஃபிரட் அவர்களே? வேறொரு... ஐ எடுங்கள் - அதை எடுத்துக் கொள்ளுங்கள். யாராவது வேறு வேதாகமம் வைத் திருக்கிறீர்களா? அது அங்கே இருக்கிறதா என்று பாருங்கள். அனாதீமா. நல்லது, அனாதீமா என்பது என்ன? இப்பொ ழுது, நான் கூறுவது உமக்கு புரிந்து விட்டது. உமக்குத் தெரியுமா, ஃபிரட் அவர்களே? யாருக்காவது... உங்கள் எல்லா ரிலும் யாருக்காவது அனாதீமா என்றால் என்னவென்று தெரி யுமா? உங்களிடம் ஒரு அகராதி உள்ளதா? நாம் சிறிது நேரத்தில் அதைக் கண்டுபிடித்து விடலாம். ஒரு அகராதியைக் கொண்டு வாருங்கள். சரி, அவர் ஒன்றைக் கொண்டு வருகிறநேரத்தில், ஒருவேளை நான் வேறொரு கேள்விக்கு பதிலளிக் கலாம். சரி, ஐயா. 109.(சகோதரன் ஜிம்மி அடுத்தக் கேள்வியை வாசிக்கிறார்: ‘சாத்தான் மின்னலைப்போல வானத்திலிருந்து விழுகிறறதைக் கண்டேன் என்பதை விளக்கவும்’ - ஆசிரியர்.) 110.‘சாத்தான் மின்னலைப்போல வானத்திலிருந்து விழுகிற தைக் கண்டேன் (லூக்கா 10:18)’ அது லூக்காவிலா இருக்கிறது... அங்கே அந்த வேதவாக்கியம் உள்ளதா? அப்படியே... நல்லது, அதுதான் என்று நான் நினைக்கிறேன். ‘சாத்தான் மின்னலைப்போல வானத்திலிருந்து விழுகிற தைக் கண்டேன்.’ இப்பொழுது, அது... இப்பொழுது, நான் இதைக் குறித்த முக்கிய விஷயங்களை மட்டும் சற்று விவரித் துக் கூறுவேன். இது அதைச் செய்யவில்லை என்றால், நான் அதை அறிந்து கொண்டு, விவரமாக அதை எடுத்துரைக்க எனக்கு நீங்கள் - நீங்கள் அனுமதி கொடுங்கள். உங்களுக்கு ஞாபகம் உள்ளதா? நாம்-நாம்அதற்குள் வரும்போது, அதைப் புரிந்து கொள்வோம் - அங்கே நமது வேத ஆராய்ச்சியில் மேலும் கூடுதலான விஷயங்களை நாம் பெற்றுக் கொள் வோம்... இயேசு... என்று உங்களுக்குத் தெரியும். இயேசு அசுத்த ஆவிகளுக்கு விரோதமாக தம்முடைய சீஷர்களுக்கு அதிகாரம் கொடுத்து, அவர்கள் வெளியே சென்று, பிசாசுகளைத் துரத்தின பிறகு சற்று கழிந்து அது இருக்கிறது. அவர் அவர்களை இரண்டிரண்டு பேராக அனுப்பி, அவர், ‘நீங்கள் புறஜாதிகளிடத்தில் போக வேண் டாம், அதற்கு மாறாக, காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவே லரிடம் போங்கள் (மத்தேயு 10:6). நீங்கள் போகையில், பரலோக இராஜ்யத்தைக் குறித்து பிரசங்கம் பண்ணி, வியாதியஸ்தர்களை சுகமாக்குங்கள், பிசாசுகளைத் துரத்துங்கள்,’ என்றார், மேலும் அதைப் போன்ற மற்ற காரியங்களையும் கூறினார். நல்லது, அதன்பிறகு... அதன்பிறகு அவர்கள் சந்தோஷத்தோடே களி கூர்ந்து கொண்டு திரும்பி வந்தனர். (இப்பொழுது, இந்தக் கேள்வியைக் கேட்ட உங்களுக்கு அது எங்கேயிருக்கிறது என்று தெரியும், பாருங்கள்?) - அவர்கள் களிகூர்ந்து கொண்டே சந்தோஷத்தோடு திரும்பி வந்தனர். அவர்-அவர், ‘உங்கள் நாமங்கள்... சந்தோஷப்படாமல், பிசாசுகள் உங்களுக் குக் கீழ்ப்படிகிறதற்காக சந்தோஷப்படாமல், உங்கள் நாமங்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறதற்காக சந்தோஷப்படுங்கள் (லூக்கா 10:20)’ என்றார். அவர், ‘சாத்தான் மின்னலைப்போல வானத்திலிருந்து விழுகிறதைக் கண்டேன்’ என்றார். 111.பாருங்கள், தொடர்ந்து முன்னேறிச் சென்று கொண் டிருந்த அந்தச் சபையினுடைய வல்லமையானது சாத்தா னுடைய முழு இராஜ்யத்தையும் தலைகீழாக கவிழ்த்துப் போட்டிருந்தது, நீங்கள் பாருங்கள்? அவன் தன்னுடைய இடத்திலிருந்து விழுந்ததாக அவர் கண்டார்... போகும்படியாக தேவன் மீண்டுமாக தம்முடைய சபைக்கு வல்லமை கொடுத் திருந்த காரணத்தினால். அவன் மின்னலைப்போல வானத்தி லிருந்து விழுகிறதை அவர் கண்டார். அந்த - உடைய வல்லமையினால், அவன் பரிசுத்த ஸ்தலங்களை விட்டும், மற்றும் யாவற்றையும் விட்டு முற்றிலுமாக வெளியே வீசி எறியப்பட்டான், (நீங்கள் பாருங்கள்?), அந்தச் சபையின் வல்லமையினாலே, வல்லமையைப் பெற்றிருந்த அவர்களைக் கொண்டு அவன் அவ்வாறு தூக்கி எறியப்பட்டான். இயேசு, ‘அசுத்த ஆவிகளுக்கு மேலாக நான் உங்களுக்கு அதிகாரம் கொடுக்கிறேன்’ என்றார். பாருங்கள்? அவர்கள் உண்மையி லேயே சாத்தானுடைய இராஜ்யத்தை தலைகீழாகக் கவிழ்த்துப் போட்டனர். இன்றும் அதைக் கொண்டு நான் என்ன செய்ய முடியும்? ஓ, தேவனுக்கு ஸ்தோத்திரம். சரி, சகோதரன் ஜிம்மி, ஒருக்கால் உன்னிடம் வேறொரு கேள்வி இருக்கலாம். 112.(சகோதரன் ஜிம்மி அடுத்த கேள்வியை வாசிக்கிறார்: ‘‘இரத்தம் புறறப்பட்டுக் குதிரைகளின் கடிவாளங்கள் மட்டும் பெருகிவந்தது’ என்பதை விளக்கவும்.’ - ஆசிரியர்.) 113. ...கடிவாளங்கள், அது வெளிப்படுத்தல் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் அர்மகெதோன் ஆகும் (உ-ஊ)... இப்பொழுது, கி.பி. 70ல் தீத்து (பண்ற்ன்ள்) எருசலேமின் மதில்களைப் பிடித்து, எருசலேமின் மதில்களை அழித்துப் போட்ட போது இருந்த ஒரு நிலைக்கு நாம் கடைசி நாட்களில் வருகிறோம். அங்கே - அதன் மத்தியில் அதிக அளவு இரத்தம் சிந்தப்பட்டதாக அவர்கள் உறுதியாக கூறுகிறார்கள். அந்த மதில்களுக்குள்ளேயிருந்த பத்து இலட்சம் அல்லது அதற்கும் அதிகமான யூதர்களின் இரத்தம் சிந்தப்பட்டது, அவர்கள் ஸ்திரீகளையும் குழந்தைகளையும் கூட கொல்லும் அளவுக்கு அது இருந்தது... நல்லது, அது... அந்த அளவுக்கு மிகவும் மோசமாக இருந்தது. 114.அவர்கள்-அவர்கள் பரிசுத்த ஆவியானவரைப் புறக் கணித்து விட்டிருந்தனர். பாருங்கள், இப்பொழுது, தேவன், அவர் - அவர்கள் கிறிஸ்துவைப் புறக்கணித்து, அவரை ஒரு பெயல்செபூல் என்று அழைத்த போது, அவர், ‘நான் அதற்காக உங்களை மன்னிக்கிறேன். (பாருங்கள்?) நான் உங்களை மன்னிக்கிறேன்,’ ஆனால், அவர் செய்து கொண்டிருந்த அதே காரியத்தைச் செய்யும்படியாக, ‘ஏதோவொரு நாளில் பரிசுத்த ஆவியானவர் வருவார்.’ ‘அதற்கு விரோதமான ஒரு வார்த்தையும் மன்னிக்கப்படுவதில்லை’ என்றார். நல்லது, பெந்தெகோஸ்தே நாளில், அந்த ஜனங்கள் உரத்த சத்தமிட்டுக் கொண்டும், நடனமாடிக் கொண்டும், குடித்து வெறித்தவர்களைப் போல நடந்து கொண்டும், கூச்சலிட்டுக் கொண்டும், சத்தமிட்டுக் கொண்டும், அவ்வாறு தொடர்ந்து செய்து கொண்டும் இருந்ததை அவர்கள் கண்ட போது, அவர்கள் என்ன செய்தனர்? அவர்கள் என்ன கூறினார்கள்? அவர்கள், ‘இவர்கள் மதுபானத்தினால் நிறைந்திருக்கிறார்கள்; இவர்கள் குடித்து வெறித்திருக்கிறார்கள்’ என்றும் மேலும் அவ்விதமான எல்லாவற்றையும் கூறினார்கள். அப்போஸ்தலர் 2.அவர்கள் இவர்களைக் கேலி செய்து, இவர்களை எல்லா மாகவும் அழைத்தார்கள். என்ன சம்பவித்தது? அது அவர் களை தேவனுடைய இராஜ்யத்திற்கு வெளியே முத்திரை போட்டு விட்டது, பாருங்கள்? 115.அதன்பிறகு எருசலேம் முற்றுகை போடப்பட்ட போது... இப்பொழுது, நாம் அதை வெளிப்படுத்தல் 7ம் அதிகாரத்தில் பெற்றுக் கொள்ளப் போகிறோம்; நாம் சரியாக கேள்வி கேட்டவரிடம் திரும்பி வருவோம். நாம் அதற்குத் திரும்பி வந்து விடுவோம். பிறகு - அவர்கள்... தீத்து மதில்களைப் பிடித்த போது, வரலாறு கூறுகிறது - நம்முடைய கர்த்தராகிய இயேசுவின் நாட்களில் வாழ்ந்தவ ராகிய முற்காலத்து வரலாற்றாசிரியரான ஜோசபஸ் (அவர் ஒரு மகத்தான வரலாற்றாசிரியராய் இருந்தார்). அவர் அதைக் கூறினார் - அவர்கள் உள்ளே பிரவேசித்த போது, அங்கே உள்ளேயிருந்த அவர்களில் அநேகரை ஒரே நேரத்தில் கொன்று போட்டனர், இரத்தம் ஓடி, அவ்விதமாக அந்த வாசல்களுக்கு வெளியே பாயவும் கூட செய்தது. 116.இப்பொழுது, கடைசி நாட்களில், அவர் கத்தோலிக் கத்தையும், ரோமானிஸத்தையும், மற்றும் அந்த எல்லா காரியங் களையும் கண்ணியில் சிக்க வைப்பார் என்று வேதம் முன்னு ரைக்கிறது, மேலும் அவர்கள் - கம்யூனிஸமும், அவர்கள் எல்லாருமே அங்கேயிருக்கும் மெகிதோ (Megiddo) பள்ளத்தாக்குகளில் ஒன்றாகக் கூடுவார்கள், அங்கே இரத்தம் புறப் பட்டுக் குதிரைகளின் கடிவாளத்தின் ஒரு பகுதி (horse's bit) மட்டுமாக - குதிரைகளின் கடிவாளம் மட்டுமாக பெருகிவரும் அளவுக்கு அவர்கள் மத்தியில் ஈவிரக்கமின்றி அவ்வளவு படுகொலை நடக்கும், அது அந்த அளவுக்கு இருக்கும். பாருங்கள், அது வெளிப்படுத்(தல்) புத்தகத்தில் உள்ளது... அது... இருக்கும். ஆனால் பரலோகப் பிதாவுக்கு நன்றி, நாம் (அப்போது) இங்கே இருப்போம் என்று நான் நினைக்கவில்லை. அவரு டைய கிருபையினால், நாம் இங்கே இருக்க மாட்டோம். நாம் அப்போது மகிமையில் இருப்போம். பாருங்கள்? அது சரியாக அந்த இரண்டு தீர்க்கதரிசிகள் அர்மகெதோன் யுத்தத்தில் தீர்க்கதரிசனம் உரைப்பதற்கு பிறகு சம்பவிக்கும். அப்போது தான் இந்த-இந்த புறஜாதி தேசங்கள் மிகவும் ஒழுக்கக்கேடான (பழி பாவத்துக்கு பயப்படாத) ஒரு நிலையை அடைந்து, அப்படியே தொடர்ந்து செய்து கொண்டிருப்பார்கள், சபை களின் கூட்டமைப்பும், இந்த எல்லாமுமே ஒன்றிணையும். தேவன் சபையை, தெரிந்து கொள்ளப்பட்ட சபையை யாவற் றையும் விட்டு வீட்டிற்கு எடுத்துக் கொள்வார். உறங்கிக் கொண்டிருக்கும் எல்லா கன்னிகைகளுமே காத்துக் கொண் டிருப்பார்கள்... இப்பொழுது, அவர்கள் எல்லாரும் அங்கே (யுத்தத்தில்) சந்திக்கும் போது, அங்கே அந்த கடிவாளத்தின் ஒரு பகுதி (bridle's bit) உறங்கிக் கொண்டிருக்கும் கன்னிகைகளை விட்டும், அந்நாளில் பின்னால் இருக்கும் அவர்கள் எல்லாரை விட்டும், கம்யூனிஸத்தை விட்டும் வெளியே வரும்; சென்ற நாட்களில் அவர் செய்ததைப் போன்று, தேவன் அங்கே அந்தப் பள்ளத்தாக்கில் அவர்களோடு வழக்காடுவார் என்று அவர் கூறியிருக்கிறார், அது உங்களுக்குத் தெரியும். அங்கே தான் அது குதிரைகளின் கடிவாளங்கள் மட்டுமாக பாய்ந்து வரும். சொல்லப்பட்ட அக்காரியங்கள் உங்களுக்குப் புரிந்து விட்டதா? அவர்கள்... ஓ, அவர்கள் இன்னும் எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறார்கள்... ஓ, அது... தொடர்ந்து முன்னே செல்லுங்கள், அது சரிதான். 117.(மூன்று அசுத்த ஆவிகளைக் குறித்த அடுத்தக் கேள்வியை சகோதரன் ஜிம்மி வாசிக்கிறார் - ஆசிரியர்.) 118.வெளிப்படுத்தின விசேஷம் - அது கள்ளத்தீர்க்க தரிசியின் வாயிலிருந்தும், வலுசர்ப்பத்தின் வாயிலிருந்தும், மற்றவைகளின் வாயிலிருந்தும் புறப்பட்டு வந்தது (வெளி. 16:13). இப்பொழுது, நாம் அதை நம்முடைய ஆராய்ச்சியில் புரிந்து கொள்ளப்போகிறோம். இப்பொழுது, (நீங்கள் பாருங் கள்?), மூன்று அசுத்த ஆவிகள் என்பவை மூன்று இஸம்கள் ஆகும். இப்பொழுது நான் அதை உங்களுக்கு அடையாளப் படுத்திக் (type) காண்பிக்கட்டும், அப்பொழுது அது அங்கே - அது எங்கே தொடங்கப்பட்டது என்றும், அது எங்கே துவங்கினது என்றும் நீங்கள் கண்டு கொள்வீர்கள். பாருங்கள்? அவைகள் கம்யூனிஸம், பாசிசம், நாசிஸம் ஆகியவை யாகும். அவைகள் ஆவிகளாக இருந்தன. கம்யூனிஸம் என்பது ஒரு ஆவியாகும். அது உங்களைப் பிடித்துக் கொள்கிறது. பாருங்கள்? அது ஒரு ஆவியாகும். மேலும் அது- அது அதைப் போன்ற ஏதோவொன்றாக இருக்கும், நான் மாத்திரம்... அது-அது...அது உண்மையில் அதுவல்ல. ஆனால் அது அவ்விதமான மூன்று ஆவிகளாகவே இருக்கும், அவை ஒரு வகையான முன்னோடியாகவே இருந்தன. ஆனால், நிச்சயமாக, உங்களுக்குத் தெரியும்... அது கத்தோலிக்கத்திலும் இருக்கிறது, நீங்கள் பாருங்கள்? ஆனால் நான் அதை நேரடியாக கூறுவதற்கு முன்பாக... நான் அறிந்தவைகளைக் குறித்து நிச்சயப்படுத்திக் கொள்வதற்காக, ஒரு சில காரியங்களைப் அறிந்து கொள்ள நான்-நான்-நான் விரும்புகிறேன், (நீங்கள் பாருங்கள்?) ஆனால் அது கம்யூனிஸத்தைப் போன்றும், பாசிசத்தைப் போன்றும் மூன்று ஆவிகளே... அநேக வருடங்களுக்கு முன்பு நாம் அதைக் கொண்டு வந்தோம் என்பது உங்களுக்குத் தெரியும். நான் உங்களுக்குச் சொன்னதை ஞாபகம் கொள்ளுங் கள், அது - இருக்கும் என்று நான் கூறினேன். ஒரு காரியம் சம்பவித்து, அது எல்லாவற்றையும் கம்யூனிஸத்திற்குள் முடிவ டையச் செய்யும். அங்கே தான் அது சம்பவித்தது. அந்நேரத் திலும் அது அதேவிதமாகவே இருக்கும். நீங்கள் பாருங்கள்? புறப்பட்டு செல்லும் மூன்று அசுத்த ஆவிகள். அது-அதுவாக இருக்கும். அது... 119.இப்பொழுது நான் உண்மையாகவே, சிறிதும் சந்தேகத் திற்கு இடமின்றி அதை விசுவாசிக்கிறேன். நீங்கள் பொருட் படுத்தவில்லை எனில், நான் சற்றே அதன் முக்கிய அம்சங் களை மட்டும் விவரித்துக் கூறுகிறேன்... நான் அதைத் தொடர்ந்து விளக்கிக் கூறும் போது, நான் அதனோடு சிறிறு கூடுதலாக சேர்த்துக் கொண்டால், நான் அதைச் செய்வேன் என்றால், நல்லது, நீங்கள், ‘நீர் அதை அங்கே அந்த இரவில் முழுவதுமாக விளக்கிச் சொல்லவில்லையே’ என்று கூறுவீர் கள், பாருங்கள்? நான் அதைச் செய்தால். நான் அதைக் குறித்து சிந்திப்பது இதோ இருக்கிறது. அது ஒரு ஆவி என்று நான் விசுவாசிக்கிறேன், உறங்கிக் கொண் டிருக்கும் கன்னிகையும், சபையின் கூட்டமைப்பும், கிறிஸ்து வைப் புறக்கணித்த யூதாயிஸமும் (Judaism), அதைப் புறக்கணித்த யூதர்களும், கத்தோலிக்கமும். ஏனென்றால் அது எதை விட்டுப் புறப்பட்டு வருகிறது என்று உங்களுக்குப் புரிகிறதா? அது கள்ளத்தீர்க்கதரிசியை விட்டுப் புறப்பட்டு வருகிறது, (பாருங்கள்?), அது கள்ளத்தீர்க்கதரிசியின் வாயி லிருந்து புறப்பட்டு வெளியே வருகிறது, அது போப் முறை மையாக (popery) இருந்தது, மிருகத்தை விட்டு வெளியே புறப்பட்டு வருகிறது. பாருங்கள்? அங்கிருந்து தான் அவை எல்லாமே புறப்பட்டு வருகிறது, அது எங்கேயிருக்கிறது என்ற பின்னணிச் சூழலை நீங்கள் காணலாம். அவை முழு உலகத்தையும் அர்மகெதோனுக்கு (வர) தூண்டுகிற (ஏவிவிடுகிற) மூன்று அசுத்த ஆவிகளாக உள்ளன. பாருங்கள்? அதுதான் அந்த மூன்று அசுத்த ஆவிகளாகும். அப்படியானால், சரியாக அதில் தான் நீங்கள் அந்த மூன்று ஐயோக்களைப் பெற்றுக் கொள்கிறீர்கள். நான் அன்றொரு நாளில் அதைப் பேசினது உங்களுக்கு நினைவிருக்கும். நான் சொன்னேன்... கடைசி ஏழு வாதைகளும், ஏழு முத்திரைகளும், மூன்று ஐயோக்களும், மற்றும் இரண்டு - மூன்று அசுத்த ஆவிகளும், மேலும் அது-அதுஅதனூடாகவே வருகிறது. சரி, உன்னிடம் வேறொரு கேள்வி இருக்கிறது, அப்படித் தானே? 120.(ஒரு சகோதரன் அடுத்தக் கேள்வியை வாசிக்கிறார்: ‘வேதாகமம் முழுவதும் ஐபிராத்து நதியின் முக்கியத்துவம் என்ன, அது ஆவிக்குரிய பிரகாரமாக பேசப்பட்டதா?’ - ஆசிரியர்.) 121.ஆமாம். ஐபிராத்து நதி, அது எப்போதுமே ஒரு மகத்தான நதியாக இருந்து வருகிறது, ஏனெனில் ஐபிராத்து நதிக்கு வேதாகமத்தில் ஒரு முதன்மையான இடம் உண்டு. தொடக்கத்தில், அது ஏதேனின் ஊடாக பாய்வதை நாம் கண்டு கொள்கிறோம்: ஐபிராத்து நதி அவ்வாறு ஏதேனின் ஊடாகப் பாய்ந்தது. அது ஏதேனின் ஊடாக பாய்ந்து சென்றதாக வேதா கமம் கூறுகிறது. நாம் காண்கிற அடுத்த காரியம் என்னவெனில், ஐபிராத்து நதியானது நேராக பாபிலோனினூடாகவும் கூட பாய்ந்து சென்ற ஒரு நதியாகும். - அதே நதி தான். பாருங்கள்? ஐபிராத்து நதியானது பாபிலோனின் ஊடாகவும் பாய்ந்து சென்றது. இப்பொழுது, அந்தத் தூதன் தன்னுடைய கலசத்தி லுள்ளதை ஐபிராத் நதியின் மேல் ஊற்றினான் என்பதை நாம் கண்டுகொள்கிறோம், அப்பொழுது வட திசை இராஜா (the king of the north) வரும்படியாக அந்த நதி வற்றிப்போயிற்று. அவர்கள் அர்மகெதோனுக்குள் வரும்போது, அக்கடைசி வேளையில் உண்மையாகவே என்ன சம்பவிக்கும் என்று நான் எண்ணிப் பார்க்கிறேன். பாருங்கள், அவர்கள் அந்தவிடத்தை சென்று சேர்வதற்கு, அவர்கள் அங்கே எகிப்து வழியாக வர வேண்டியிருக்கிறது. அவர்கள் அந்த தேசங்கள் வழியாக வர வேண்டியிருக்கிறது, அவர்கள் அவ்விடத்தை அடைவதற்காக ஐபிராத்து நதியைக் கடந்து போயாக வேண்டியிருக்கும். 122.பாருங்கள், ஐபிராத்து நதி இன்றும் ஓடுகிறது. நமக்கு- நமக்கு அது தெரியும். நீங்கள் பாருங்கள்? தென் அமெரிக்கா வில் அமேசானும், எகிப்தில் நைல் நதியும், மற்றும் ஐபிராத்து நதியும்... ஓ, மற்றொரு நதி எது? அங்கே இரண்டு நதிகள் உண்டு - அங்கே ஏதேனின் உச்சியிலிருந்து அவை தோன்றி பாய்ந்தன (headed up). ஐபிராத்து நதி தான் இந்தப் பெரிய... அது வருவதற்காக வழியை ஏற்படுத்தினது. பாருங்கள், வடதேசத்து இராஜா வரும்படியாக, அந்த இராஜாக்களுக்கு, வழியை ஏற்படுத்தினது. அது-அது கடைசி நாட்களில் அர்ம கெதோன் யுத்தத்தின் போது சம்பவிக்கும். நீங்கள் பாருங்கள்? அந்த ஐபிராத்து நதி... 123.அவைகள் அவ்வளவு தானா? அல்லது அவைகள் அவ்வளவு தான். இப்பொழுது, அவர்கள் கிறிஸ்துவைப் புறக்கணித்தால், இந்த நபர் எப்படியிருக்கிறான் - என்பதைக் குறித்து என்னுடைய மனதில் இருந்தது. (பாருங்கள்?) அது அப்படியே... அதை நீங்களாகவே சொந்தமாக ஒரு-ஒரு அகரா தியில் பார்த்துக் கொள்ளலாம். ஏனெனில் அது... ஏதோ வொன்றல்ல. நான் இப்பொழுது அதை இங்கே பேசவில்லை. ஆனால் நீங்களே அதைப் பாருங்கள், அப்பொழுது அதற்கு என்ன அர்த்தம் என்று அறிந்து கொள்வீர்கள். அது... உங்களால் முடியும், வேறு வார்த்தைகளில் கூறினால்... நான் அதைப் போன்ற காரியங்களை உங்களோடு வேதவாக் கியத்தில் குறிப்பிடுவதற்கு கூடுமான இரண்டு அல்லது மூன்று இடங்கள் உள்ளன. வேறு வார்த்தைகளில், - உள்ளதைப் போன்று, ‘தானியே லின் தேவனுக்கும், மற்றும் யாவற்றிற்கும் கீழாக இந்த இன்ன இன்னவற்றிற்கு தலைவணங்காத எந்த மனிதனும், அவனு டைய வீடு எடுத்துப் போடப்படும், அவனுடைய பிள்ளைகள் சுட்டெரிக்கப்படுவார்கள், அவனுடைய வீடு எருக்களமாக்கப் படும்’ என்று நேபுகாத்நேச்சார் கூறினதைப் போன்று. பாருங் கள்? அந்த வார்த்தைகள் என்னவென்று நம்மால் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும்; அவர்கள் அப்படியே அதை வெளிப்படுத்தி, அவ்விதமாகக் கூறினார்கள். ஆனால் நீங்கள் அப்படியே அகராதியில் அதைப் பின்னோக்கிப் பார்த்தால், சரியாக அது என்னவென்று அது-அதுஉங்களுக்குக் கூறும். நீங்கள் பாருங்கள்? அது என்னவென்று உங்களுக்குக் கூறும். 124.நல்லது, இந்தச் சிறு பழைய காரியங்கள் சந்தேகங் களைத் தெளிவுப்படுத்திக் கொண்டிருக்கின்றன, நான்-நான்- நான் அவைகளைக் குறித்து அதிகமாக எடுத்துக் கூறவில்லை, அவர்கள் - நான் நின்று அதை எடுத்துக் கூற வேண்டும். ஏனெனில் நீங்கள் பாருங்கள், அது ஒரு - அது... ஒவ்வொரு வரும்... நீங்கள் எல்லாரும் நாளைக்கு வேலை செய்ய வேண்டி யிருக்கிறது, கர்த்தருக்குச் சித்தமானால், நான் மியாமிக்குப் போகிறேன், நான் 10:15 மணிக்கு அங்கு போகிறேன். நான் உங்களை அதிக நேரம் பிடித்து வைக்க விரும்பவில்லை. என்னுடைய வாலிப பிள்ளைகள் உறங்கிக் கொண்டிருக்கி றார்கள் என்று நினைக்கிறேன். நீங்களும் கூட உறங்கிக் கொண்டிருக்கிறீர்கள் என்று ஊகிக்கிறேன். எனவே அங்கே தான் நம்முடைய காரியம் இருக்கிறது. சிறு பிள்ளைகள் விரைவாக தூங்கி விடுகிறார்கள். ஆனால் நான் இதைக் கூற விரும்புகிறேன்: அவைகள் மிக மிக அருமையான கேள்விகள், அவைகள் ஒவ்வொன் றுமே மிக நல்ல கேள்விகள் தான். இரவுக்காக எனக்கு வேறொரு கேள்வி இருக்குமானால், அல்லது, கூடாரத்தில் வேறு ஏதாவது கேள்வி இருக்குமானால், நீங்கள் எல்லாரும்... இவ்வாறு செய்ய நான் விரும்புகிறேன். நான் அதை அக்காலை யில் கூறினால், நீங்கள் அந்தக் கேள்விகளை என்னிடம் கொடுத்து விடுங்கள், அப்பொழுது நான் அவைகளை ஆய்ந்து படிக்க சிறிது நேரம் எனக்குக் கிடைக்க முடியும். நீங்கள் அறிந்துள்ளபடி, அது அப்படியே முன்முயற்சி இல்லாமலே தான் செய்யப்படுகிறது. அதன்பிறகு நீங்கள்- நீங்கள் பேசத் துவங்குகிறீர்கள். நான் எதன்பேரிலும் அதிக நேரம் பேசுவதற்கு தலைசிறந்த மனிதனாக இருக்கிறேன். நான் பிரசங்கம் பண்ணும் உத்தியை நீங்கள் இங்கே கவனிக்கிறீர்கள், ஆகையால் தான் நான் அங்கே நாள் முழுவதும் உங்களைப் பிடித்து வைக்கிறேன், (நீங்கள் பாருங்கள்?) நான் ஏறத்தாழ அதிக நேரம் பிரசங்கம் பண்ணுகிறேன். 125.ஆனால் பில்லி கிரகாமை நீங்கள் கவனித்ததுண்டா? இப்பொழுது, பில்லிகிரகாம் ஒரு பயிற்சி பெற்ற பிரசங்கியார், அவர் ஒரு மகத்தான மனிதராவார். பில்லி கிரகாம், அவர் சரியாக அங்கே தான் பிரசங்கம் பண்ணுவதற்கான தம்முடைய வேதபாகத்தை முன் வைக்கிறார். அவர் இங்கே அதை விட்டுப் பின்னோக்கிச் சென்று, அப்படியே தொடர்ந்து எல்லா நேர மும் அந்தப் பாடத்தையே தொடர்ச்சியாகப் பேசிக் கொண் டிருப்பார். அவர் ஒருபோதும் தம்முடைய சத்தத்தை குரல்தாழ்த்திப் பேசாமல், அந்தப் பாடத்திற்குள் தொடர்ந்து சென்று அதை பேசிக் கொண்டிருப்பார், அவர் தமது சத்தத்தைத் தாழ்த்துவது அரிது தான். பாருங்கள்? அந்தவிதமாகத்தான் பரிசுத்த ஆவியானவர் அவரைப் பிரசங்கம் பண்ண வைக்கிறார். பாருங்கள்? அதைச் செய்வதற்காக அந்த உத்தியைத் தான் அவர் கொண்டிருக்கிறார். அவ்விதமாகத்தான் அவர் அதைச் செய்கிறார். சார்லஸ் ஃபுல்லர், உங்களில் அநேகர் அவருடைய பிரசங் கத்தைக் கேட்டிருக்கிறீர்கள். அவர் ஒரு தேர்ச்சிமிக்க அற்புத மான மனிதராவார். எனவே, சார்லஸ் ஃபுல்லரும் ஒரு வேதாகம விரிவுரையாளரைப் (Bible expositor) போன்றவர் தான். அவர் ஒரு - அவர் போதிக்கவே விரும்புகிறார், அவர் காரியங்களை எவ்வாறு விளக்குகிறார் என்பதும், மற்றும் எல்லாமே உங்களுக்குத் தெரியும், அவர் அப்படியே அதை கிறிஸ்துவுக்குள் வைக்கிறார், அவர் ஒரு மகத்தான தேர்ச்சி மிக்க போதகர் ஆவார். அவர் என்ன செய்கிறார் என்பதை நீங்கள் கவனிக்கிறீர்கள். அவர் பிரசங்கம் பண்ணுவதில்லை; அவர் அப்படியே அதைப் போதிக்கிறார். 126.நல்லது இப்பொழுது, நீங்கள் கவனிப்பீர்களானால், நான் கொண்டிருக்கிற ஒரு சிறிய எளிய வழி என்னவென்றால், நான் இங்கே ஒரு பாடத்திற்கான மூல வேதபாகத்தை துவங்கு கிறேன். என்னுடைய வேதபாகம் என்னவாயிருந்தாலும், நான் இங்கே பின்னோக்கிச் சென்று, என்னுடைய சூழலுக்கு வருகி றேன். பிறகு நான் அதை இங்கே கொண்டு வந்து, என்னுடைய வேதபாகத்தோடு அதை சரியாக வரிசைப்படுத்தி கூறுகிறேன். அதன்பிறகு நான் இங்கே பின்னால் சென்று, வேறு எதை யாவது எடுத்துக் கொண்டு, இங்கே அதைக் கொண்டு வந்து, அதை இங்கே எடுத்துக் கூறுகிறேன். அதன்பிறகு இங்கே பின்னால் போய், வேறு ஏதாவது ஒன்றை பெற்றுக் கொள்கிறேன், அது எல்லாவற்றையுமே இங்கே சரியான விதத்துக்கு கொண்டு வரும் வரையில் அதைச் செய்து கொண்டே யிருக்கிறேன், அதன்பிறகு அதைக் கொண்டு என்னுடைய மூல வேதவாக்கியத்தை (மூல வேதபாகத்தை) ஒரே நேரத்தில் முழுவதுமாக அழுத்தமாகக் கூறுகிறேன். நான் வழக்கமாக இந்தப் பழமையான சிறு பிரசங்கங் களைப் பண்ணுகிற காரணம் என்னவென்றால்... நான் வழக்க மாக பிரசங்கம் பண்ண முயற்சிக்கிறேன். நிச்சயமாகவே, நான் ஒரு பிரசங்கி அல்லவென்று அறிந்து கொள்ளும்படியாக நீங்கள் நீண்ட காலம் என்னைச் சுற்றிலும் இருந்து வருகிறீர்கள். ஆனால், ‘இதை விசுவாசிக்கிறாயா?’, ‘இந்தக் கன்மலையைப் பார்த்துப் பேசு’, ‘ஒரு ஸ்திரீயை வந்து பாருங்கள்’ போன்ற வையும், அதைப் போன்ற எல்லாமே வெறுமனே மூன்று சிறிய வார்த்தைகள் தான் என்பது உங்களுக்குத் தெரியும். வெறு மனே... நான் கிணற்றண்டையில் இருந்த அந்த ஸ்திரீயைக் குறித்த எல்லாவற்றையும் விளக்கமாக பேசி, அது என்னவாக இருந்தது என்று கூறி விட்டு, பிறகு சரியாக கடைசியில், அதை அடைகிறேன், அப்போது பாருங்கள், ‘ஒரு மனிதனை வந்து பாருங்கள். ஒரு மனிதனை வந்து பாருங்கள்!’ என்ற காரி யத்தை அடைகிறேன். அதன்பிறகு, ‘கன்மலையைப் பார்த்துப் பேசு’ என்பதில், நான் இஸ்ரவேலரை எடுத்துக் கொண்டு, பிறகு அவர்களைக் கொண்டு வருகிறேன். பாருங்கள், நான் என்னு டைய சூழலைப் பெற்றுக் கொண்டு, அதை இங்கே என்னு டைய மூல வேதபாகத்திற்கு வரிசைப்படுத்தி வைக்கிறேன் - அப்பொழுதும் என்னுடைய வேதபாகத்திற்கு வருவதில்லை. 127.சிறிது நேரத்திற்கு முன்பு, சற்று நேரத்திற்கு முன்பு, அதைப் புரியும்படி சொன்னதை - அதை விளக்கிக் கூறினதை நீங்கள் கவனித்தீர்கள். அதே காரியம் தான். அங்கேயிருந்த அந்த ரோமனைக் குறித்துக் கூறினது (பாருங்கள்?), ‘கர்த்த ராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீ இரட்சிக்கப்படுவாய்’ என்று கூறினது. பாருங்கள், அது ஒரு கேள்வி - இரட்சிக்கப்படுவதைக் குறித்து. பாருங்கள், நான் திரும்பிச் சென்று, அவை எல்லாம் என்னவென்று கண்டுகொண்டு, அதை மறுபடியும் திரும்பப் பெற்றுக் கொண்டு, திரும்பிச் சென்று, யோபையும் அவர்கள் எல்லாருக்கும் பிறகே சென்று, அதையும் இங்கே கொண்டு வந்து, அதையும் வரிசையில் கொண்டு வந்தேன், அதன்பிறகு துரிதமாக அதைக் குறித்துப் பேசுவதைக் குறைத்துக் கொண்டேன். இதுதான் அதுவாக இருக்கிறது; இதுதான் விசுவாசம். நீங்கள் பாருங்கள்? யோபு விசுவாசத்தை உபயோகப்படுத்தினான். அந்த ரோமன் விசுவா சத்தை உபயோகப்படுத்தினான். நாமும் விசுவாசத்தையும் மற்றும் யாவற்றையும் உபயோகிக்கவே ஆயத்தமாயிருக் கிறோம். பாருங்கள், அப்படியே... அந்தவிதமாகத்தான் நான் அதை எண்ணிப் பார்க்கிறேன், நான் அதை என்னுடைய வழியில் செய்து, நீங்கள் விளக்கிக் கூற முயற்சித்துக் கொண்டிருக்கும் காரியத்தை ஜனங்கள் தாங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்ற போதிய வாஞ்சை யோடு கேட்கும்படி வைக்க என்னால் கூடுமானால், இங்கே கடைசியான முக்கிய கருத்திற்காக உங்களுடைய முதன்மை யான பாடப்பொருளை (உரை மூலம்) (text) தக்கவைத்துக் கொள்கிறீர்கள், அதன்பிறகு அதை அடைவதில் வெற்றி பெற்று விடுகிறீர்கள். பிறகு... என்று கூறுகிறீர்கள். ஓ, அதன் மற்ற காரியங்கள் வெளிப்பட்டு விடுகின்றன. ஏனென்றால், நீங்கள் காண்கிறீர்கள், நீங்கள் அதைப் புரிந்து கொள்கிறீர்கள். பாருங்கள், நீங்கள் அப்படியே - நீங்கள் இங்கே வந்து சேர்ந்து, தளர்ந்த கம்பியை பெற்றுக் கொண்டு, இந்த ஒன்றை உள்ளே இழுக்கிறீர்கள். அதைக் குறித்த தொல்லை என்ன வென்றால், நான் பெற்றுக் கொள்ளாத அநேக தளர்ந்த கம்பிகளை நான் விட்டு விட்டேன், எனவே நான் – 128.நல்லது, நீங்கள் அனைவரும் இங்கே வந்து, அமர்ந்து எங்களோடு பேசினதும், மற்றும் எல்லா காரியமும் உண்மை யிலேயே அருமையாக இருக்கின்றது. நான் அதைப் பாராட்டு கிறேன். நான் மீண்டும் இதை என்னுடைய முழு இருதயத் தோடும் கூற விரும்புகிறேன்; நான் இதை எனக்குள்ளிருக்கிற எல்லாவற்றைக் கொண்டும் கூற விரும்புகிறேன். ஜனங்களா கிய நீங்கள் எவ்வளவு பெரிய ஒரு காரியத்தை கிரயமாகக் கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை நான் ஒருபோதும் உணரவேயில்லை. நான்-நான் அப்படியே... அது உங்களைக் காண்பதற்காக இல்லாமலோ, உங்களை நேசிப்பதற்காக இல்லா மலோ இருந்தால், நான் செய்கிற காரியங்களை, நான், ‘வேறொரு தடவை அந்தக் கூடாரத்தில் நான் பிரசங்கம் பண்ணப் போவதில்லை’ என்று கூறி விடுவேன். நீங்கள் சென்று, ஒரு ஆராதனையைக் கேட்பதற்காக, நீங்கள் எல்லா ரும் 1500, 1800 மைல்கள் பிரயாணம் செய்ய வேண்டியிருப் பதைக் காணும் போது. இப்பொழுது, அந்த உயர்ந்த பற்றுறுதியை நான் பாராட்டு கிறேன். ஆனால் இன்னுமாக, நீங்கள் செய்து கொண்டிருப் பதைக் குறித்தே எண்ணிக் கொண்டிருக்கிறேன், பாருங்கள்? ம்ம்ம். 129.அந்த ஆற்றுக்கு அப்பாலிருக்கிற அத்தேசத்தில், உங்கள் ஒவ்வொருவரையும், உங்களையும் உங்கள் பிள்ளை களையும், உங்களுடைய சிறு பிள்ளைகளையும், எல்லாரையும் நான்-நான்அங்கே உங்களைக் காண்பேன் என்று நான்-நான் தேவனிடத்தில் நம்பிக்கையாயிருக்கிறேன். நானும் அங்கே இருப்பேன் என்று நம்புகிறேன். நான் அங்கே இருப்பேன் என்று நம்பிக் கொண்டிருக்கிறேன். இப்பொழுது பாருங்கள், நீங்கள் ஒவ்வொருவரும் - உங்கள் பிள்ளைகளில் ஒருவரும் இழக்கப்பட்டுப் போகாமல் இருப்பார்களாக, உங்களில் ஒருவரும் இழக்கப்பட்டுப் போகாதிருப்பீர்களாக; நாம் எல்லாருமே அந்நாளில் அங்கேயிருப் போமாக. அங்கே வெளியிலுள்ள நம்முடைய சிறிய சகோதரி கூட, அங்கே வெளியில் வேறொரு அறையில் பாத்திரங் களைக் கழுவிக் கொண்டிருக்கும் அங்கே வெளியிலுள்ள அந்தச் சிறிய கறுப்பின சீமாட்டியும் அங்கிருப்பாளாக. நான்-நான் இங்கே ஒருநாள் அந்த ஸ்திரீயிடம் பேசிக் கொண்டிருந்தது எனக்கு ஞாபகத்தில் இருக்கிறது... என்று நம்புகிறேன். அது அதே பெண்மணி தானா? அவளுடைய கணவன், நான் ஒரு தடவை அங்கே அவரை சந்தித்தேன்- சந்தித்தேன் என்று நம்புகிறேன். அல்லது இல்லை, அது உங்களுக்காக வேலை செய்கிற ஒரு பையன் தான். அவர் ஒரு அருமையான வயதான மனிதராகக் காணப்பட்டார். நமக்கு ஏமாற்றங்கள் இல்லாத இடமாகிய அவ்விடத்தில் நாங்கள் சந்திப்போம் என்று நான்-நான்நம்புகிறேன், இரவில் வழக்க மான நேரத்தையும் கடந்து அமர்ந்திருப்பது அதற்கு மேலும் இருக்காது, ஏனென்றால் அங்கே எந்த இராக்காலமும் இராது. 130.ஓ, எனது சகோதரனே, சகோதரியே, நான் அப்படியே-அந்தக் காலையில் என்ன நடந்தது என்று எந்தவிதத்திலாவது அதை என்னால் விளக்கிக் கூற முடியுமானால், நான் அங்கே என்னுடைய மனைவியின் அருகில் படுத்துக் கொண்டிருந்த போது, அவர் என்னை படுக்கையை விட்டு எழுப்பி, என்னை அங்கே மேலே எடுத்துக் கொண்டு, திரைக்கப்பால் நோக்கிப் பார்க்க அனுமதித்தார். அது எதைப் போன்று காணப்பட்டது என்றும், அது என்ன வாக இருந்தது என்றும் இப்பொழுது உங்களுக்கு விளக்கிக் கூறுவதற்கு எனக்கு மாத்திரம் வல்லமை இருக்கக் கூடுமா னால்... நான் அவர்கள் எல்லாரையும் அங்கே கண்டேன். அவர் கள் எல்லாருமே இளமையாக இருந்தனர், என்னால்-என்னால்அவர்களை அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை. பாருங்கள், அவர்கள் எல்லாரும் என்னருகில் வந்து, தங்கள் கரங்களை என்னைச் சுற்றிலும் போட்டுக் கொண்டனர், மற்றும் யாவற்றையும் செய்தனர். அவர்கள் - அவர்கள் மனிதர்களாக (human beings) இருந்தனர். பாருங்கள்? அவர்கள் ஒரு தூதனைக் குறித்துக் கூறுவது போல... அவர்கள் ஏதோவொரு வித பளுவற்ற லேசான பொருளாக (feathers) இருக்க வில்லை... அவர்கள்-அவர்கள் அதைக் கூறின போதிலும், ஒரு தூதனுக்கு இறகுகள் (feathers) உண்டு என்று நான் நினைக்க வில்லை. நீங்கள் பாருங்கள்? ஆனால் ஒரு தூதன் என்பவன் ஒரு செய்தியாளனாக இருக்கிறான். அந்த வார்த்தைக்கு ஒரு செய்தியாளன் என்று அர்த்தம். எனவே, அவர்களுக்கு இறகுகள் மற்றும் அதைப் போன்ற காரியங்கள் உண்டு என்று நான் நினைக்கவில்லை. ஆனால் அது அப்படியே... அவர்கள் எல்லாருமே அங்கே இருந்தனர், அவர்கள் எல்லாரும் சந்தோஷமாய் இருந்தனர். அவர்களால் சந்தோஷமாய் இருப்பதைத் தவிர வேறு எதாகவும் இருக்க முடியவில்லை. அங்கே அதைக் காட்டிலும் அதிகமான காரியம் எதுவும் இல்லாமலிருந்தால், நான்-நாம் ஓடுகிற ஓட்டங்கள் எல்லாவற்றிற்காகவும், நாம் செய்கிற காரியங்களுக்காகவும் மற்றும் அவ்விதமான எல்லாவற்றிற்காகவும் அது நமக்குக் கொடுத்திருக்கும். 131.ஆனால் நீங்கள்... இருக்க விரும்புகிறேன். நான் இதைக் கூற விரும்புகிறேன், கடைசி நாட்களில் அங்கே தேசத்தில் ஒரு பஞ்சம் வரும் என்று வேதாகமம் கூறுவதை நானும் கூட விசுவாசிக்கிறேன். அது ஆகாரக் குறைவினாலோ, ஜலக்குறைவினாலோ உண்டாகிய பஞ்சமல்ல, ஆனால் உண் மையாக தேவனுடைய வார்த்தை கேட்கக் கிடையாத பஞ்சம் வரும். ஜனங்கள் தேவனுடைய வார்த்தையைக் கேட்கும் படியாக கிழக்கிலிருந்தும், மேற்கிலிருந்தும், வடக்கிலிருந்தும், தெற்கிலிருந்தும் தேடித் திரிவார்கள். நாம் இப்பொழுது ஏறக்குறைய அந்த நாளில் தான் ஜீவித்துக் கொண்டிருக்கி றோம். பாருங்கள்? நான் யாரையும் அவமதிக்கவில்லை, (நீங்கள் பாருங்கள்?), நம்முடைய சபைகளையும் நான் அற்பமாக கருதவில்லை, இல்லை, ஐயா... ஆனால் நீங்கள் அறிந்திருப்பீர்களானால், இந்த அநேக சபைகளுடைய பிரசங்க பீடங்களில், நாம் அருமை யான மனிதர்களையும், நல்ல மனிதர்களையும், தேவனுடைய உண்மையான மனிதர்களையும் கொண்டிருக்கிறோம் என்று நம்புகிறேன். ஆனால் அந்த ஸ்தாபனம் கூறுவதற்கு மாறாக எதையாவது அவர்கள் கூறுவார்களானால், தாங்கள் உதைத்து வெளியே தள்ளப்படுவார்கள் என்றும், தாங்கள் கைவிடப்பட்டு குளிரில் விட்டு விடப்படுவார்கள் என்றும் அவர்கள் பயப்படுகிறார்கள். அந்த மனிதனுக்கு தேவையானது என்னவென்றால், கொஞ்சம் தைரியமே என்று நான் நம்புகிறேன். நான் அதை நம்புகிறேன், ஏன், தங்களுடைய ஸ்தாபனம் எதைச் செய்தாலும் அதைப் பொருட்படுத்தாமல், அவர் அவர்களைப் பொறுப் பெடுத்துக் கொள்வார் என்பதைக் காண்பிக்கும்படியாக, தேவன் யாரோ ஒருவரைத் தெரிந்து கொண்டு, அவரை ஒரு உதாரணமாக ஆக்க வேண்டுமென்று தேவன் விரும்புகிறார் என்று நான் நம்புகிறேன். எனவே, எனக்கு ஒத்தாசை செய்ய வும்... என்னை அனுமதிக்கும்படியாகவும், அவர் என்னோடு (இருப்பார்) என்பது தான் என்னுடைய நம்பிக்கையாய் உள்ளது. மேலும் நான்... 132.கிறிஸ்தவர்களே, கவனியுங்கள். ஒரு முறையாவது... தேவனுக்கு முன்பாகவும் தெரிந்து கொள்ளப்பட்ட தூதர்களுக்கு முன்பாகவும் நான்-நான்-நான் உங்களுக்கு உறுதியாகக் கட்டளையிடுகிறேன், நீங்கள்... நான் தவறான எதையா வது செய்து கொண்டிருப்பதை நீங்கள் எந்நேரம் கண்டாலும், தயவுசெய்து நீங்கள் வந்து என்னிடம் கூறுவீர்களா? ஏனென்றால் நான்-நான்-நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன், அங்கே உங்களை இழந்து விட (விரும்பவில்லை). நீங்கள் முன்னேறிச் சென்று கொண்டிருக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியும். எனவே, நான்... என்னிடத்தில் தவறு இருப்பதை, நான் சரியல்லாத எதையாவது செய்கிறதை, உங்களுடைய வழியில் தடைக்கல்லைப் (stumbling block) போடும்படியாக எதையாவது நான் செய்கிறதை நீங்கள் எப்போதாவது காண்பீர் களானால், நீங்கள் வந்து என்னிடம் கூறுங்கள். 133.இப்பொழுது, நான் அநேக நேரங்களில், இங்கே ஒரு இடத்திலிருந்து மற்ற இடத்திற்குப் பிரயாணம் செய்து, நகைத்து (laugh), கடுமையாகக் கண்டித்து, காரியங்களைக் கூறுகிறேன். நான் என்ன செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்? எனக்குள் இருக்கிற இறுக்கமான (wound up) உணர்வுகளில் சிலவற்றை வெளியேற்ற முயற்சிக்கிறேன். நீங்கள் பாருங்கள்? நான் செய்ய விரும்புவது அதுவல்ல. பாருங்கள்? நான் நகைப் பதற்குக் கூட விரும்புவதில்லை, அல்லது... இங்கே வந்து, சகோதரன் வெல்ச் அவர்களை அழைத்து வருகிறேன், அப்பொழுது -ஐக் குறித்து அவர் வேறு ஏதோவொன்றை சிறிது கூறுவதை நான் கேட்க முடியும், ஓ, அங்கே வெளி யிலிருக்கும் அந்தச் சிறு பையன் - ஒரு கறுப்பின பையன், அவன் ஒரு மீனைப் பிடித்தான், அப்போது பாதுகாவலர் அவனைப் பிடித்துக் கொண்டார், அவன் தான் ஆமைக்கான தூண்டில் இரையைத் தான் பிடித்துக் கொண்டிருந்ததாக கூறி னான் மற்றும்-மற்றும்அதைப் போன்ற ஏதோவொன்று, அது உங்களுக்குத் தெரியும். அந்தச் சிறு... அந்தச் சிறு பிரங்கியார் என்னிடம் கூறின போது... நான் அவர்களிடம் இன்றைய சிறு பெண்கள் தாங்கள் ஃபெபி, ஃபைபை (Fefe and Fifi) என்னும் பூடுல் நாயுடன் இருப்பதைக் குறித்துக் கூறிக் கொண்டிருந்தேன். நீங்கள் பாருங் கள்?... அதைப் போன்று. நான் எதற்காக அப்படிச் செய்து கொண்டிருக்கிறேன்? நான் நகைக்கும்படியாகவும், நானாக என்னை நகைத்துச் சிரிக்க வைத்து, இயல்பான மனநிலைக்கு வரும்படியாகவுமே அதைச் செய்கிறேன். நீங்கள் இந்த சாவுக்குரிய மண்டலத்திற்கு மேலாக அடி எடுத்து வைத்து, அங்கேயுள்ள அந்த மண்டலங்களுக்குள் பிரவேசிக்கும் போது, அது-அது-அது உங்களை ஒரு சுழற்சி யில் (twist) வைக்கிறது, நான் என்ன கூறுகிறேன் என்பது உங்களுக்குத் தெரியும். 134.அப்படியானால் சற்று சிந்தித்துப் பாருங்கள், நான் சிந்திப்பது இதோ இருக்கிறது. இந்த ஊழியத்தைக் கொண்டு, நான் எவைகளுக்காக பதில் கூற வேண்டியதாய் இருக்கப் போகிறது என்பதை நினைவுபடுத்திக் கொள்கிறீர்களா? வெறு மனே டிஃப்டன், ஜார்ஜியாவுக்கல்ல, இந்தியானாவுக்கல்ல, ஐக்கிய நாடுகளுக்கல்ல, ஆனால் ஒரு உலகளாவிய ஊழியத் திற்காக இந்த உலகத்திற்கு முன்பாக நான் பதில் கூறியாக வேண்டும். பாருங்கள்? நான் அஞ்ஞானிகளுக்கும் (heathens) பதில் கூறியாக வேண்டும். இன்னும் சரியாகச் சொன்னால், நான் அந்த அஞ்ஞானிகளுக்காக தேவனிடத்தில் பதில் கூறியாக வேண்டும். பாருங்கள்? நான் வீட்டில் உட்கார்ந்து கொண்டு, ‘நல்லது, நான் நம்புகிறேன் - நான் நம்புகிறேன் - நான் நம்புகிறேன்...’ என்று சிந்தித்துக் கொண்டிருந்த போது. அன்றொரு நாள் அங்கே மேலே இருந்தது போன்று, அப்போது நான் மிகவும் இறுக்க மான நிலையை அடைந்து, நான், ‘நான்-நான்-நான் தொடர்ந்து வேறொரு கூட்டத்தைக் கொண்டிருக்கப் போகிறேன்’ என்றேன். தொடர்ந்து வேறொரு கூட்டத்தைக் கொண்டிருக்கி றேன், நீங்கள் அறியும் முதலாவது காரியம் என்னவென்றால், நான் மிக இறுக்கமாக நிலையில் இருக்கிறேன். நான்-நான் வேட்டையாடுவதற்கும், மீன்பிடிப்பதற்கும், யாரோ ஒருவரோடு வெளியே போயாக வேண்டியிருக்கிறது. நான்-நான் எதையா வது செய்ய வேண்டியிருக்கிறது, - ஏனென்றால் நான் வெறு மனே ஒரு மனிதன் தான், வெறுமனே ஒரு மனிதப் பிறவி தான். நீங்கள் பாருங்கள்? அது - அதுதான்... உங்களுக்கு அது புரிகிறது. 135.ஆனால் நான் அந்த வழியை விட்டு வெளியே எங்கேயாவது இருக்கிறேன் என்று நீங்கள் எப்பொழுதாவது நினைப்பீர்களானால், நீங்கள் வந்து அதை என்னிடம் கூறி விடுங்கள். மகனே, என்ன சம்பவித்தாலும் காரியமில்லை, நான் ஒரு வகை சிப்பியைப் போல, அதை நிறுத்தி விடுவேன், ஏனென்றால் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று நான்- நான் விரும்புகிறேன்; என்னிடம் எந்த இரகசியங்களும் கிடையாது. எனக்குத் தெரிந்த எல்லாமும் உங்களுக்கும் கூடத் தெரியும். பாருங்கள்? கர்த்தர் எனக்குக் காண்பித்து, அதைக் கூற வேண்டுமென்று கர்த்தர் என்னை அனுமதித்த யாவற்றையுமே நான் உங்களிடம் கூறியிருக்கிறேன். நான் எதையும் மறைத்து வைக்கவில்லை. எனது ஜீவியம் ஒளிவு மறைவின்றி வெளிப்படையாக இருக்கிறது. நான் யார் என்றும், நான் எதைக் கொண்டு உண்டாக்கப்பட்டிருக்கிறேன் என்பதும் உங்களுக்கு- உங்களுக்கு-உங்களுக்குத் தெரியும். என்னால் கூடுமான வû ரயில், நான் அனுதினமும் அதே விதமாகவே ஜீவிக்க முயற்சி செய்கிறேன். நிச்சயமாகவே, அநேக நேரங்களில், நான் உற்சாகமற்றும், சோகமாகவும், சோர்வாகவும், களைப்படைந்தவனாகவும், அல்லது அதைப் போன்ற ஏதோவொன்றாகவும் இருப்பதை நீங்கள் காண்கிறீர்கள். நிச்சயமாகவே, நான் - அது இந்த ஊழியத்தோடு சேர்ந்தே போகிறது என்று உங்களுக்குத் தெரியும்; நீங்களும் கூட அவ்விதம் உணருகிறீர்கள், நீங்கள்...நீங்கள் காலத்தின் பக்கங்களினூடாகத் திருப்பிப் பார்த்தால், அந்தப் பாதையில் (சென்ற) மனிதர்களுக்கும் அந்தவிதமாகவே இருந்தது என்பதை நீங்கள் காண்பீர்கள். நாம் எல்லாருமே அவைகளைப் பெற்றுக் கொள்கிறோம். 136.ஆனால் அதைக் குறித்தக் காரியம் என்னவெனில், நாம் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள விரும்புகிறோம். உங்களுக்கும் கூட ஏற்றத் தாழ்வுகள் இருக்கிறது என்று உணரு கிறேன். அவைகளைக் கொண்டிருப்பது நான் மட்டுமல்ல. நீங்களும் அவைகளைக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் உங்களுடை யவைகளைக் கொண்டிருக்கும் போது, நான் புரிந்து கொள்ள முயற்சிப்பேன். நான் என்னுடையவைகளைக் கொண்டிருக்கும் போது, நீங்கள் புரிந்து கொள்ள முயற்சியுங்கள். நான் எங்கோ கடல் கடந்து போகும் போது, அல்லது வெளியே எங்காவது ஒரு கூட்டத்தில் இருந்து, பிசாசுகள் எல்லா இடங்களிலும் ஒன்று திரண்டு, எனக்கு சவால் விட்டும், மற்ற யாவற்றையும் செய்யும் போது, ஏன், நீங்கள் எல்லாரும் எனக்காக ஜெபிக்க வேண்டும் என்பதை நினைவுகூருங்கள். நீங்கள் அதைச் செய் வீர்களா? 137.நாம் இப்பொழுது கொஞ்சம் அவரிடம் பேசுவோமா? பரலோகப் பிதாவே, இங்கே நின்று, இரத்தத்தால் கழுவப்பட்ட இந்த ஒரு கூட்ட பிள்ளைகளுடன் பேசுவதென்பது மகிமை யாகவே உள்ளது. அநேக வருடங்களுக்கு முன்பு, அவர்கள் வருகிற இடத்தில் நடந்த சிறு வீட்டுக் கூட்டத்தில், பரிசுத்த பவுல் நின்றது போல நான் இன்றிரவு நின்று கொண்டிருக்கி றேன் என்று உணருகிறேன். பவுல் ஆக்கில்லாவிடமும் பிரிஸ் கில்லாவிடமும் வந்தான், அவர்கள் எப்படியாக ஜனங்களை உள்ளே ஒன்று கூடி வரும்படி செய்திருக்க வேண்டியிருந்தது. அவன் ரோமாபுரிக்குச் சென்று, ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, உள்ளே வருகிறவர்களை அவன் ஏற்றுக் கொண்டான். இன்றிரவும் இங்கே ஜனங்கள் - இந்தக் கூடாரத்திற்கு வருகின்றனர். இவ்வளவு மைல்கள் தூரம் எல்லாம் காரோட்டிக் கொண்டு வரும் இந்த ஜனங்கள், கர்த்தாவே, நான் அதை எவ்வளவாக பாராட்டுகிறேன் என்று அவர்களிடம் கூற முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்... நான் அவர்களை எவ்வளவு பாராட்டுகிறேன் என்பதை அவர்களிடம் கூறக் கூடிய வார்த் தைகள் கூட என்னிடம் இல்லை. ஆனால் பிதாவே, நான் என்ன கூற விரும்புகிறேன் என்பதை நீர் அவர்களுடைய இருதயங்களில் அறியச் செய்ய வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். அன்புள்ள பிதாவே... அவர்களுக்காக நான் செய்யும் எனது ஜெபத்திற்கு தயவுகூர்ந்து நீர் பதிலளிக்க வேண்டும் என்று ஜெபிக்கிறேன். கர்த்தாவே, அவர்கள் ஒவ்வொருவரை யும் இரட்சியும். அவர்களில் ஒருவரும் இழக்கப்பட்டு போகாமலிருப்பார்களாக, அல்லது அவர்கள் குடும்பத்தினரில் யாரும் இழக்கப்பட்டு போகாதிருப்பார்களாக; அவர்கள் ஒவ்வொரு வரும் அங்கே இருப்பார்களாக. 138.அவர்களுடைய சிறு பிள்ளைகளுக்காக நான் ஜெபிக்கிறேன். இங்கே தன்னுடைய தகப்பனாரின் மடியில் படுத்திருக்கிற இந்தச் சிறு பையனைக் குறித்து சிந்தித்துப் பார்க்கிறேன், மேலும் அவனுடைய தாய் உட்கார்ந்து, கூர்ந்து கவனித்து, வரப்போகிற நாட்களைக் குறித்து சிந்தித்துக் கொண்டிருக்கிறாள். அங்கே நாளைய தினம் ஒன்று இருக்கு மானால், இந்த இதே சிறு பையன் சவிசேஷத்தை எடுத்துக் கொண்டு செல்ல மாட்டான் என்பது எப்படி எங்களுக்குத் தெரியும்? தேவனே, இந்தச் சிறு பையனையும், மற்ற யாவரையும், இந்தச் சிறு பெண் பிள்ளைகளையும் பையன்களையும் நீர் ஆசீர்வதிக்க வேண்டும் என்றும், அவர்கள் எல்லாரோடும் நீர் இருக்க வேண்டும் என்றும் நான் ஜெபிக்கிறேன். தங்க ளுடைய வீட்டை, ஜெப வீட்டைத் திறந்து கொடுத்த சகோதரன் மற்றும் சகோதரி ஈவான்ஸ் அவர்களோடும் நீர் இருந்தருளும். 139.இப்பொழுது எங்களோடு இருந்து, எங்கள் பாவங் களை எங்களுக்கு மன்னித்தருளும். தேவனே, அவர்கள் எப்பொழுதாவது வியாதிப்பட்டு, அவர்கள் அழைக்க வேண் டியதாய் இருந்தால், நீர் என்னுடைய ஜெபத்தைக் கேட்பீர் என்று அவர்கள் விசுவாசம் கொள்கிற அப்படிப்பட்ட ஒரு ஜீவியத்தை நான் ஜீவிக்கட்டும். கர்த்தாவே, அப்போது நான் அவர்களுக்காக ஜெபிக்கும் போது, என்னைக் கேட்டருளும். இதை அருளும். அவர்கள் எனக்காக ஜெபிக்கும் போதும் அதைக் கேட்டருளும், ஏனென்றால் எனக்கு அவர்களுடைய ஜெபங்கள் தேவையாயுள்ளது, பிதாவே. மேலும் அவர்கள் எனக்காக ஜெபிக்கும் ஒவ்வொரு தடவையும், நீர் அந்த ஜெபத்தைக் கேட்க மாட்டீரா, கர்த்தாவே? நான் அவர்களுக் காக ஜெபித்துக் கொண்டிருக்கும் போதும், அதைக் கேட்டரு ளும், பிதாவே. எங்களுடைய ஜீவனுள்ள நாளெல்லாம் நாங்கள் உம்மை ஒன்றாக சேவிப்போம். அந்த மகத்தான ஏதோவொரு நாளில், நாங்கள் உமது வீட்டிற்கு ஏறி வருவோம் என்று நம்புகிறோம். நாங்கள் அந்தக் கதவைத் தட்டும் போது, நீர் எங்களை உள்ளே விட மாட்டீரா, பிதாவே? அந்த நேரம் வரையில், எங்களைப் பேணி பாதுகாத்து (watch over), எங்களை ஆசீர்வதித்து, எப்போதும் எங்களை உண்மை யுள்ளவர்களாக காத்துக் கொள்ளும். நாங்கள் இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். 140.மக்களே, உங்களுக்கு மிகவும் நன்றி. உங்களை ஏறக்குறைய 10:30 மணி வரையில் - அது மட்டுமாக இங்கே பிடித்து வைத்திருந்ததற்காக வருந்துகிறேன். இங்கே படுத்துக் கொண்டிருக்கிற இந்தச் சிறு பையன் ஒரு சிறு குதிரைப் படை வீரனைப் (trooper)  போன்று உறங்கிக் கொண்டிருக்கிறான், அவனுக்கு எவ்வளவு வயதாகிறது? இரண்டு வயது முடிந்து விட்டது. சகோதரியே, நீங்கள் எப்படியிருக்கிறீர்கள்? நான் உங்க ளுடைய கரத்தைக் குலுக்கினது, நான் உள்ளே வந்த போதா அல்லது இல்லையா என்று தெரியவில்லை. நல்லது, உங்களையும் சகோதரன் வில்லி அவர்களே, உங்களையும் மீண்டும் காண்பதில் மகிழ்ச்சி. ஃபிரட் அவர்களே, நீர் காலையில் இங்கிருந்து புறப்பட்டு, வீட்டிற்குத் திரும்பிச் செல்வீர் என்று நினைக்கிறேன். நீர் என்னுடைய-என்னுடைய முதலையை திரும்ப எடுத்துக் கொண்டு போகிறீர். சகோதரன் உட் அவர்களே, உம்மை வீட்டில் சந்திக்கிறேன். கர்த்தர் உம்மை ஆசீர்வதிப்பாராக. சகோதரன் ஸ்காட் அவர்களே, உம்மை மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி, சகோதரனே. உம்மை இதற்கு முன்பு எங்கேயோ பார்த்திருக்கிறேன் என்று நம்புகிறேன், இல்லையா? நான் பார்த்திருக்கிறேன் என்று நினைத்தேன். உமது முகம் நன்கு தெரிந்த முகமாக தோற்றமளிக்கிறது. சகோதரன் வேய்ன் அவர் களே, கர்த்தர் உம்மை ஆசீர்வதிப்பாராக. இந்த ஊழியக்காரரை என்னிடம் அழைத்து வர எண்பது மைல்கள் தூரம் வந்ததற் காக உம்முடைய பெட்ரோல் டேங்கை நிறைக்க வேண்டும் என்று நான் இன்னும் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். மகனே, (தேவன்) உன்னை ஆசீர்வதிப்பாராக. சகோதரியே, உன்னையும் (தேவன்) ஆசீர்வதிப்பாராக. உங்களைத் தொந்தரவு செய்கிற என்னுடைய எல்லாமும்... நான் அப்படியே தொந்தரவு கொடுத்துக் கொண்டிருக்கிறேன், அது உங்களுக்குத் தெரியும், இல்லையா? 141.சகோதரி ஈவான்ஸ் அவர்களே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அது உண்மையாகவே அருமையான காலை உணவாகவும், இரவு உணவாகவும் இருந்தது, உங்க ளுடைய உபசரணை அருமையாக இருந்தது. இயேசு இவ்வாறு கூறினதை ஞாபகம் கொள்ளுங்கள், அவர், ‘மிகவும் சிறியவ ராகிய... (இவர்களுக்கு) நீங்கள் எதைச் செய்தீர்களோ’ என்றார். இப்பொழுது, அவர், ‘மிகவும் பெரியவர்களாகிய... (இவர் களுக்கு) நீங்கள் எதைச் செய்தீர்களோ’ என்று கூறுவதை நீங்கள் கேட்பதில்லை. புரிகிறதா? பாருங்கள், அது வேறு யாராவது இருக்கும். ஆனால் ‘மிகவும் சிறியவராகிய... (இவர் களுக்கு) நீங்கள் எதைச் செய்தீர்களோ’ என்று தான் கூறினார். அது நான் தான் என்று நினைக்கிறேன். எனவே, நீங்கள் எனக்குத் தான் அதைச் செய்திருக்கிறீர்கள். சகோதரியே, உங்களையும் கூட மீண்டும் காண்பதில் மகிழ்ச்சியடைகிறேன். தேவன் எப்போதும் உங்களோடு இருப் பாராக. நான்... ஓ, என்னே. அது உங்களுடைய தாயார் இல்லை என்று நீங்கள் எப்படி கூற முடிந்தது? நீங்கள் மிகவுமாக ஒன்று போலவே காணப்படுகிறீர்கள். சகோதரியே, உங்களைக் காண வந்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. நீங்கள் அங்கேயிருக்கும் இந்த வாலிபரின் மனைவி என்று நம்புகிறேன். நீங்கள் தான் சகோதரன் ஸ்காட். நீங்கள் எல்லாருமே சகோதரிகளா? நல்லது, நீங்கள் சகோதரிகள் தான் என்று நினைத்தேன். நிச்சயமாக நான் அவ்வாறு தான் எண்ணினேன். உங்களை மீண்டும் காண்பதில் மகிழ்ச்சி. என் சகோதரனே, நல்ல தைரியத்தை விடாமல் தொடர்ந்து காத்துக் கொள்ளுங்கள். இது ஒருக்கால் புதிதான ஒன்று என்று கூறலாம். இங்கேயிருக்கும் இந்தச் சிறு பெண் பிள்ளையை நான் கவனிக்கவில்லை. ஓ, நல்லது, சகோதரியே, உன்னை சந்திப்ப தில் மகிழ்ச்சியடைகிறேன், கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பாராக. சகோதரியே, உன்னைக் காண்பதில் மகிழ்ச்சி, அவர் ஏதோ வொன்றிற்காக நல்லவராக இருப்பார். அப்படியே அவரை ஏற்றுக்கொள்ளுங்கள். சகோதரனே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. சகோதரன் ஈவான்ஸ் அவர்களே, தேவன் உம்மோடு இருப்பாராக, மகனே. இப்பொழுது, தேனே, நீ எங்களுடைய வாலிப பருவத்தை அடையும் போது, நாங்கள் பெரியவர்களாக இருந்து மரித்துப் போயிருப்போம். என்னுடைய சகோதரனே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. பிறகு, நாம் போவதற்கு முன்பாக, இதை உங்களிடம் கூறுகிறேன், நாம் சற்று நம்முடைய காலூன்றி எழுந்து நின்று, இந்தச் சிறு பாடலைப் பாடுவோம். நீங்கள் என்னோடு அவ்விதமான ஒரு சிறு செய்யுளைப் பாடுவீர்களா... சிறிய? அது சரிதானா? நாம் மீண்டும் சந்திக்கும் வரை, தேவன் உங்களுடன் இருப்பாராக! அவருடைய ஆலோசனையான நடத்துதல் உங்களைத் தாங்கு வதாக, அவருடைய ஆடுகளோடு கூட உங்களையும் பத்திரமாக வேலியடைத்துக் கொள்வாராக; நாம் மீண்டும் சந்திக்கும் வரை, தேவன் உங்களுடன் இருப்பாராக! நாம் சந்திக்கும் வரை. நாம் சந்திக்கும் வரை! இயேசுவின் பாதத்தண்டையில் நாம் சந்திக்கும் வரை; நாம் சந்திக்கும் வரை. நாம் சந்திக்கும் வரை! நாம் மீண்டும் சந்திக்கும் வரை, தேவன் உங்களுடன் இருப்பாராக! 142.நாம் வழக்கமாக சிறு ஜெபக் கூட்டங்களில் இவ்வித மாகத்தான் செய்கிறோம், நாம் இவ்விதமாக சுற்றியிருக்கும் ஒருவர் கரங்களை ஒருவர் பற்றிக் கொள்கிறோம். பாருங்கள்? நாம் இச்சிறு பாடலை பாடி, நாம் ஒன்றாக சிறிய வட்ட வடிவமாக வருவோம். அவ்விதமாகத்தான் செய்கிறோம். நீங்கள் பாருங்கள்? நீங்களும் அவ்விதமாக ஒருவர் மற்றவரோடு ஒரு தொடர்பைக் கொண்டிருந்தீர்கள். அது உங்களுக்குத் தெரியும். நாம் பாடுவோம். இந்தச் சிறு பாடல் உங்களுக்குத் தெரியுமா? நமது இருதயங்களை கிறிஸ்தவ அன்பினால் பிணைக்கும் பிணைப்பு ஆசீர்வதிக்கப்படுவதாக; ஒரே சிந்தையுள்ளவர்களின் ஐக்கியம் மேற்கூறியது போன்றிருக்கும். நமது பிதாவின் சிங்காசனத்தின் முன்னிலையில் நமது பொதுவான ஜெபங்களை நாம் ஊற்றுகிறோம்; நமது பயங்கள், நமது நம்பிக்கைகள், நமது நோக்கங்கள் நமது ஆறுதல்கள், நமது கவலைகள் அனைத்தும் ஒன்றே. நாம் பிரிந்து செல்லும் போது, அது உள்ளில் நமக்கு வேதனை தருகிறது; ஆனால் நாம் இருதயத்தில் இன்னும் இணைக்கப்பட்டு, மறுபடியும் சந்திப்போமென நம்புகிறோம். 143.இப்பொழுது, நம்முடைய தலைகள் வணங்கி யிருக்கையில், நாம் அப்படியே அந்த மாதிரி ஜெபத்தை திரும்பவும் கூறுவோம். பரமண்டலத்திலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக. உம்முடைய ராஜ்யம் வருவதாக, உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறது போலப் பூமியிலேயும் செய்யப்படுவதாக. எங்களுக்கு வேண்டிய அனுதின ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும், எங்களுக்கு விரோதமாய் பாவம் செய்தவர் களை நாங்கள் மன்னிப்பது போல, எங்கள் பாவங்களையும் எங்களுக்கு மன்னியும். எங்களைச் சோதனைக்குட்படப் பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும். ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே. ஆமென். நாம் மீண்டும் சந்திக்கும் வரை, தேவன் உங்கள் ஒவ்வொருவரையும் இப்பொழுது ஆசீர்வதிப்பாராக. 144.சகோதரன் வெல்ச் அவர்களே, அவை எல்லா வற்றையும் அங்கேயிருக்கும் ஒலிநாடாவில் பதிவு செய்து விட்டீர்கள் என்றா கூறுகிறீர்கள்? ம்ம்ம். நல்லது, நீங்கள் எல்லா ரும் புறப்பட்டு எங்களோடு ஃபுளோரிடாவுக்கு வரவேண்டு மென நான் விரும்புகிறேன். கர்த்தருக்குச் சித்தமானால்... நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்று நான்-நான் உங்களிடம் கூறுகிறேன், நான் சிறு பிள்ளைகளை வெளியே அழைத்துச் செல்ல முயற்சித்துக் கொண்டிருக்கிறேன், நீங்கள் பாருங்கள், அவர்கள்-அவர்கள் தங்களுடைய விடுமுறையை முடிக்கவில்லை. அவர்களுடைய பாட்டிக்கு மாரடைப்பு ஏற்பட்டிருந்தது, நாங்கள் திரும்பி வர வேண்டியதாயிற்று. ஆகையால், ஒருவிதத்தில் அவர்களுடைய விடுமுறையை முடித்து விடும் படியாக நான் அவர்களை வெளியே அழைத்துச் சென்று கொண்டிருக்கிறேன், ஏனென்றால் அவர்கள் உடனடியாக மீண்டும் பள்ளிக்குப் போக புறப்பட வேண்டியுள்ளது. எனவே, நான் நாளை அவர்களை எங்காவது அழைத்துச் செல்வேன், ஒருக்கால் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கிற்கோ, அல்லது எங்காவது அழைத்துச் செல்வேன். 145.(சகோதரன் பிரன்ஹாம் வெவ்வேறான ஜனங்களுடன் உரையாடுகிறார் - ஆசிரியர்.) நான் ஒருக்கால் ஞாயிற்றுக் கிழமைக்கு முன்னே திரும்பி வர வேண்டியதாயிருக்கும். (சகோதரன் ஈவான்ஸ் ஒரு மியூஸியத்தைக் குறித்து பேசுகிறார் -ஆசிரியர்.) ஓ? ஆமாம்? நல்லது, நான் அங்கு சென்று அவைகளைக் காண விரும்புகிறேன். ஆம், ஐயா. இப்பொழுது நான் அந்த மியூசியத்தில் இருந்ததில்லை. அதாவது... அது என்ன மியூசியம்? ரிப்ளேஸ் மியூஸியம் (Ripley's Museum). அது செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கிலா உள்ளது? அது செயின்ட்... செயின்ட் அகஸ்டினில் இருக்கிறது என்று கருதுகிறேன். ஆமாம், நான் அங்கே போகிறேன்... நான் முதலாவது போக வேண்டிய இடம் ஜாக்சன்வில், இல்லையா? ஆமாம், திரும்பி... ஏனென்றால் நான் இதற்கு மறுபக்கம் திரும்ப வேண் டும். ஜாக்ஸன்வில்லுக்கு இந்த வழியில் திரும்ப வேண்டும், அதன்பிறகு நான், நீங்கள் கூறியபடி, லாகிறாஸீ வழியாகப் போய், அந்த வழியாக வெளிப்புறமாக போக வேண்டுமா?...?... குறுக்குச்சாலை வழியாக போக வேண்டும். உ-ஊ. 146.கூடாரத்தின் முகப்பு கிழக்கு மற்றும் மேற்கை பார்த்தபடி இருக்கிறது. நான் கட்டினேன்... அது... நீங்கள் முன் பக்கத்திலிருந்து உள்ளே வரும்போது, 8வது தெரு இந்த வழியாக எங்கே போகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? அப்போது நீங்கள் சரியாக கிழக்கு நோக்கிப் போய்க் கொண் டிருக்கிறீர்கள். பாருங்கள்? அப்படியானால்... அப்போது நீங்கள் நின்று கொண்டிருப்பீர்களானால்... நான் பிரசங்கம் பண்ணிக் கொண்டிருக்கும் போது, நான் மேற்கு திசையை நோக்கியபடி பிரசங்கம் பண்ணிக் கொண்டிருக்கிறேன். பாருங்கள் இப்பொ ழுது, பீடமானது கிழக்கு திசைக்கு நேராக இருப்பதால் நான் அப்படி செய்கிறேன், ஏனென்றால் இயேசு கிழக்கு திசையி லிருந்து வருகிறார். அப்படியானால் அது-அது என்னை...அந்தப் பீடம், நாம் எப்போதுமே கிழக்கு நோக்கியே தலைகளை வணங்குகிறோம். பாருங்கள்? நல்லது வழக்கமாக, எனக்குத் தெரியவில்லை. நான் வேதா கமத்தில் கண்டேன், அவர்கள்... அங்கே முற்காலத்தில் வழக்கமாக, தானியேல் தான் சென்று, ஜன்னல்களை மேலே உயர்த்தி னதாகக் கூறியிருக்கிறான், அது உங்களுக்குத் தெரியும், மற்றும் அதைப் போன்ற எல்லாவற்றையும் நீங்கள் அறிவீர்கள். அவன் கிழக்கை நோக்கியபடி ஜெபம் செய்தான். எனவே... அந்த பழங்கால மொசைக் தேவாலயத்தை நான் கவனித் திருக்கிறேன், அந்தப் பீடமானது கிழக்கு திசை நோக்கி இருந் தது என்று நினைக்கிறேன். எனவே, நிச்சயமாகவே, நீங்கள் எங்கேயிருந்தாலும் பொருட்டல்ல, தேவன் உங்கள் ஜெபத் தைக் கேட்பார், நீங்கள் பாருங்கள்? ... ஆம், ஐயா. நல்லது இப்பொழுது, நான் ஜெபித்து மற்றும் யாவற்றையும் செய்த ஒரு நேரத்தைக் கண்டிருக்கிறேன், நான்-நான் அப்படியே - நான் மறுபக்கமாகத் திரும்புவதில்லை, பாருங்கள்? அப்படியே நான் ஒழுங்காக அடிக்கடி அதைச் செய்கிறேன். ஆனால் இப்பொழுது, நான் அதைப் போன்ற எதையும் பார்க்காமல் இருந்து, அப்படியே சென்று அதில் தாவிக்குதித்து விடுவேனானால், நான் வெறுமனே... 147.அங்கே இரண்டு - நான் ஒருபோதும் ஒரே திசையில் செல்ல முடியாது என்று நான் அறிந்து கொண்ட ஒரு இடம் உண்டு. இருப்பினும் அது எங்கேயிருக்கிறது என்று எனக்குத் தெரியும். அது கிராண்ட்மா காக்ஸில் (Grandma Cox) இருக்கிறது. என்னால் அங்கே போக முடிந்தும், நேராக ஒரே திசையில் போக முடியவில்லை. அங்கே ஏதோவொன்று இருக்கப் போகிறது இவ்விதமாக என்னை நோக்கிப் பாருங்கள், ஏதோ வொரு நாளில் அங்கே ஏதோவொன்று சம்பவிக்கப் போகிறது. நான் இங்கேயிருக்கும் இந்த வாசலுக்கு நேராகப் போகி றேன், அது - உண்மையில் அது எவ்வளவு கூடுமோ அவ்வ ளவு தெற்கு திசை நோக்கியிருக்கிறது, அது எனக்கு வலது பக்கத்தில் திரும்பியிருக்கிறது. ஆனால் அதுவல்ல, பாருங்கள்? அதுவல்ல. அது அதற்கு நேர்மாறாக இருக்கிறது. பாருங்கள்? மேலும் நான்-நான் அப்படியே... இப்பொழுது, நான் காடுகளுக்குள் போய், நான் வழிதவறிப் போனாலோ அல்லது வேறு ஏதோவொன்றைப் போல ஆகி, அப்போது, நான் மறுபக்கம் திரும்பினால்... இப்பொழுது, நான் முழுவதும் உணர்ச்சிவசப்பட்டவனாய் இருந்தால், நல்லது, என்னால்-என்னால் அதைச் செய்ய முடியாது. பாருங்கள்? ஆனால் நீங்கள் அப்படியே ஒரு சில நிமிடங்கள் தரித்து அமைதலாய் நின்று, ‘பரலோகப் பிதாவே, எனக்கு உதவி செய்யும்’ என்று கூறினால். சகோதரனே, நான் எளிதாக உங்களிடமாக வழிநடத்தப்பட முடியும். அது சரியே. 148.ஒருமுறை நான் சகோதரன் உட் அவர்களோடும் சகோதரி உட் அவர்களோடும்... வெளியே சென்றேன். நாங்கள் சாட்டனூகாவிலிருந்து வந்து கொண்டிருந்தோம். சகோதரன் உட் அவர்கள் தான் காரை ஓட்டிக் கொண்டு வந்தார்... அது 41 என்று நினைக்கிறேன், அப்படியே திரும்பிச் சென்று கொண் டிருந்தோம். எனவே, அது... நான்-நான் மிகவும் களைப்படைந் திருந்தேன். ஓ, நான் மிகவுமாக களைப்படைந்திருந்தேன். நான் ஆராதனைக்குப் பிறகு பின்புறத்தில் படுத்திருந்தேன், அங்கே பின்புறத்தில், காரின் பின்புறத்தில் படுத்து உறங்கச் சென்றேன். பிறகு நான் விழித்து விட்டேன். ஆனால் நான் எழுந்த போது, நான் கூறினேன்... மூடுபனி? உங்களுக்கு முன்னே உங்களுடைய கரத்தை காண்பதே கடினமாக இருந்தது. நான், ‘ஏய், சகோதரன் உட் அவர்களே, நீங்கள் தவறாக போய்க் கொண் டிருக்கிறீர்கள்’ என்றேன். அவர் கூறினார்... பாருங்கள், நான் அப்பொழுது தான் அந்தக் கூட்டத்தை விட்டு வெளியே வந்திருந்தேன். அவர் சொன்னார்; அவர், ‘ஓ, இல்லை. நான் போய்க் கொண்டிருக்கிறேன், நான், நான் 41ல் தான் போய்க் கொண் டிருக்கிறேன்’ என்றார். நானோ, ‘ஆனால் நீர்-நீர் தெற்கு நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறீர்’ என்றேன். ‘இப்பொழுது, இதைப் போன்ற ஒரு மூடுபனியில் உம்மால் எவ்வாறு கூற முடிகிறது? பாரும், உம்மால் சாலையைக் கூட காண முடியவில்லையே’ என்றார். நான், ‘ஆனால்... நீர்... நீர் போய்க் கொண்டிருக்கிறீர் நீர் - நீர் தெற்கு நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறீர் என்று என்னால் இப்பொழுதே கூற முடியும்’ என்றேன். அவர், ‘இல்லை, இல்லை. அங்கே 41 இருப்பதைப் பாரும்’ என்றார். நான், ‘ஆனால் அது தவறாய் இருக்கிறது’ என்றேன். நல்லது, நாங்கள் ஒரு சிறு பிரிவுற்ற பகுதியில் தொடர்ந்து காரோட்டிக் கொண்டிருந்தோம், அவர் தாம் சரியாக இருப்ப தாக தொடர்ந்து என்னோடு விவாதித்துக் கொண்டிருந்தார். ‘நான் சரியாக 41ல் இருந்தவாறு மெம்பிûஸ நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறேன்’ என்றார். நான், ‘நீங்கள் சற்று கூர்ந்து கவனித்துப் பாருங்கள்’ என் றேன். நாங்கள் பெட்ரோல் நிறைக்கும் இடத்திற்குச் சென்றோம். நான், ‘மெம்பிஸிற்கு எவ்வளவு தூரம்?’ என்று கேட்டேன். அவர், ‘மகனே, நீ-நீ மறுபக்கம் திரும்பிப் போக வேண் டும், நீ ஜார்ஜியாவில் இருக்கிறாய்’ என்றார். ‘இந்த வழியில் திரும்பிச் செல்லுங்கள்’ என்றார்... நாங்கள் போய்க் கொண் டிருக்கவில்லை. ஆம், ஐயா. ஆம், ஐயா? ஆம், ஐயா. ஆம், ஐயா. நல்லது, நீங்கள் கவனிக்கவில்லை என்றால்... 149.நான் ஒரு முறை மலைகளில் காணாமல் போனது என் நினைவுக்கு வருகிறது. அங்கே... நான் ஒருபோதும் வழிதவறிப் போக மாட்டேன் என்றும், நான் காடுகளை மிகவும் நன்கு தெரிந்தவன் (woodsman) என்று நான்-நான் நினைத்திருந் தேன். ஆனால் நான் உண்மையில் வழிதவறிப் போய் விட்டேன். என்னுடைய மனைவியும், பில்லி பாலும் என்னோடு இருந்தனர், பில்லிபால் ஒரு சிறு குழந்தையாய் இருந்தான். மேலும் அவர்கள்... நான் அவர்களை விட்டு விட்டு, நான்... சென்றேன். ஒரு கரடியை வேட்டையாடுவதற்காக சென்றேன், நீங்கள் பாருங்கள்? நான் கரடியை வேட்டையாடிக் கொண்டிருந்தேன். அப்போது நான்-நான் அங்கே மறுபக்கத்திலிருந்த ஒரு பெரிய ஆண்மானை நோக்கி ஓடிப்போய், இந்த ஆண்மானைச் சுட்டேன். நான், ‘நல்லது, நான் திரும்பி விடுவது நல்லது’ என்று நினைத்தேன். நான் கீழே இறங்கி வர வேண்டுமென்பது எனக்குத் தெரியும்... நான் மேலே அடிரான்டாக்கில் இருந்தேன். நான் இவ்விதமாக அந்த மலையின் மேலே சென்று நான்... ஏதோவொன்று சாலையைக் கடந்து சென்றது. அது ஒரு - அது ஒரு மலை சிங்கமாக இருந்தது. அது அப்படியே தன்னுடைய காதுகளை வைத்தபடி அமைதியாக சென்றது. அதற்கு முன்பாக - நான் அதைச் சுடுவதற்கு போதுமான அளவு துரிதமாக எனது துப்பாக்கியை எடுத்தேன், அதுவோ அந்த இடத்தை விட்டுத் தப்பி ஓடி விட்டது. நீங்கள் பாருங்கள்? 150.மேடா தன்னுடைய ஜீவியத்திலேயே காடுகளில் ஒருபோதும் இருந்ததேயில்லை. பாருங்கள்? மேலும்... நல்லது, அது தேனிலவு நேரத்தில் நடந்தது. பாருங்கள்? நான் அங்கே ஒரு நல்ல வேலையில் இருந்தேன். நீங்கள் பாருங்கள்? நான் விவாகம் செய்து கொண்ட அந்த அதே நேரத்தில், அப்போது, நான், உங்களுக்குத் தெரியும், நான் அவளை எங்களுடைய தேனிலவுக்கும் அழைத்துச் சென்று, அதே நேரத்தில் வேட்டையாடுவதற்கும் போய்க் கொண்டிருந் தேன். நீங்கள் பாருங்கள்? எனவே-எனவே-எனவே, நான்... 151.நான்-நான், ‘நல்லது இப்பொழுது, நான் இப்பொழுது எப்படி போவது?’ என்று நினைத்தேன். நான்... நான் இந்த வழியாக மேலே வந்து, கீழே திரும்பி, ஒரு குன்றின் பாறை பக்க விளிம்பின் மேலாக சென்று, சுற்றுப்புற இடத்தின் சூழ்நிலையிலிருந்து பெரிதும் வேறுபட்ட ஒரு சிறு இடம் வழியாக கீழிறங்கிச் சென்றேன். நான் எங்கேயோவுள்ள அந்த மிகப்பெரிய (இடத்தை) நோக்கி, கனடா நாட்டுப் பகுதியை நோக்கிச் சென்று கொண்டிருந்தேன் என்பதை அறிந்து கொண் டேன், ஆனால் அது எங்கே இருக்கிறது என்பது எனக்குத் தெரியவில்லை. திடீரென்று, ஒரு புயல் வீசியது. அந்தப் பனிப்புயல்களின் தீவிரம் அதிகரித்தது. உங்களுக்குத் தெரியும். ஓ, அந்த மூடுபனி மிகத் தாழ்வாக இருந்தது, உங்களுக்கு முன்னே உங்களுடைய கரத்தைக் கூட பார்க்க முடியவில்லை. அப்போது நீங்கள் - அந்த தேசத்தில் - நீங்கள் எங்கேயிருக்கிறீர்கள் என்பதே உங்களுக்குத் தெரிய வில்லை என்றால் நீங்கள் கீழே உட்கார்ந்து கொள்வது தான் நல்லது. ஏனென்றால் நீங்கள் சரியாக அங்கேயே மரித்துப் போவீர்கள். பாருங்கள்? நீங்கள் ஒரு இடத்தை அடைந்து, அங்கேயே தங்கியிருந்து, புசிக்க ஏதாவதைப் பெற்றுக் கொண்டு, புயல் முடிகிற வரையில் ஓரிரு நாட்கள் காத்திருக்க வேண்டும். அதன்பிறகு வெளியே போய், நீங்கள் எங்கே யிருக்கிறீர்கள் என்று பார்க்கலாம். 152.எனவே, என்னால் அங்கே தங்கியிருக்க முடிய வில்லை. மேடா காடுகளில் இருந்ததில்லை, அதற்கு முன்னே அவள் ஒருபோதும் காடுகளில் இருந்ததே கிடையாது, அவள் ஒரு சிறு சாய்வான கூரையின் (lean-to)  (கீழே) இருந்தாள். அதற்கு ஒரு கதவு கூட கிடையாது, வெறுமனே, உங்களுக்குத் தெரியும், அதைப் போன்ற ஒரு சிறு சாய்வான கூரையாக இருந்தது. எனவே, நான் அங்கே அந்நிலையில் இருந்தேன். ஓ, என்னே! என்னிடம் இருந்தது, நான் இவ்வித மாக போகத் துவங்கி, ‘நல்லது, நான் இங்கு எங்கேயோ தான் திரும்பி மேலே போக வேண்டும்’ என்று நினைத்தேன். நான் சரியாக மானைச் சுட்ட இடத்திற்குத் திரும்பி வந்தேன். நான் மீண்டும் அங்கிருந்து சென்றேன். நான், ‘நான் இங்கிருந்து வெளியே தான் என்னுடைய வழியைக் கண்டுபிடிக்க வேண்டும். என்னுடைய மனைவியும் குழந்தையும் காட்டில் மரித்து விடுவார்களே’ என்றேன், பாருங்கள்? அது குளிராக மாறிக் கொண்டிருந்தது. அந்த மூடுபனி அதிதீவிரமாக இருந்தது, சிறிது நேரத்தில் பனி பெய்யப் போவதாய் இருந்தது. நீங்கள் பாருங்கள்? நான் மீண்டும் நடக்கத் துவங்கினேன், மீண்டுமாக அந்த மான் இருந்த இடத்திற்கே திரும்பி வந்து விட்டேன். அவ்வாறு மூன்று முறை நடந்தது. நல்லது, அப்போது நான் அறிந்து கொண்டேன்... 153.நான், ‘நல்லது, நான்-நான் எங்கேயோ... நான்-நான் போய்க் கொண்டு இருக்கிறேன்...’ என்றேன். பாருங்கள், இப்பொழுது, இந்தியர்கள் அதை மரண நடை என்று அழைப்பர். நீங்கள் ஒரு மேடு பள்ளங்கள் இல்லாத சமதளத்தில் இருந்து, வட்டங்களுக்குள் சுற்றி சுற்றி நடந்து கொண்டிருக்கிறீர்கள். பாருங்கள்? இப்பொழுது, ஒரு திசை காட்டியைக் கொண்டிருந்தால், நீங்கள் அவ்வாறு செய்ய மாட்டீர்கள். பாருங்கள்? ஆனால் நீங்கள் ஒரு வட்டத்திற்குள் சுற்றி நடந்து கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் மரண நடையில் இருப்பதாக இந்தியர்கள் அதை அழைக்கிறார்கள். பாருங்கள்? ஏனென்றால் நீங்கள் அப்போது மூர்க்க வெறி கொண்ட வர்களாய் ஆவீர்கள். அப்போது தான் அவர்கள் தங்கள் சிந்தையை இழந்தவர்களாய், அலறிக் கொண்டே ஓடத் துவங்குவார்கள், மற்றும் யாவற்றையும் செய்வார்கள். கடைசியில் அவர்கள் உயரமாயுள்ள செங்குத்தான பாறைலிருந்து விழுந்தோ அல்லது எதையாவது செய்து கொல்லப்படுவார்கள், அல்லது அவர்கள் தங்களைத் தாங்களே கொன்று போடுவது வரை அவ்வாறு செய்வார்கள். 154.அதன்பிறகு, எனக்கு-எனக்கு ஞாபகம் வந்து, நான், ‘நல்லது, நான் சரியாக நேராகவே போய்க் கொண்டிருக்கிறேன்’ என்று கூறினேன். நான்-நான்...?... நான் ஒருவித மனக்குழப் பத்தோடு, ‘உட்கார்ந்து விடு. ஏன், நீ ஒரு வயதான முட்டாள். நீ வழிதவறிப் போகவில்லை என்று உனக்குத் தெரியும். உன்னால் -உன்னால் வழிதவறிப் போகவே முடியாது’ என்று எண்ணினேன். நீங்கள் பாருங்கள்? நான் தொடர்ந்து அவ்வாறு கூறிக் கொண்டிருந்தேன். நல்லது அது, அதைப் பாருங்கள் - அது அங்கே இருக்கவில்லை. ஏதோவொன்று அங்கே இல்லாம லிருக்கும் போது, உங்களால் அதை மனந்திறந்து பேச முடியாது என்பது உங்களுக்குத் தெரியும்.... போன்று. ஆகையால், நான், ‘நல்லது, நான் வழிதவறிப் போக வில்லை. நான் எங்கேயிருக்கிறேன் என்பது எனக்கு சரியாகத் தெரியும். நிச்சயமாக. நான் சரியாகத் தான் இந்த வழியில் வந்திருக்கிறேன். அது முற்றிலும் சரிதான்’ என்றேன். நான் அவ்விதமாக எனக்கு நானே பேசிக் கொண்டே போய்க் கொண்டிருந்தேன், அது உங்களுக்குத் தெரியும், எவ்வளவு கூடுமோ அவ்வளவு அதிகமாக வியர்த்து வடிந்து கொண் டிருந்தது. இப்பொழுது, நானாக இருந்தால், நான் அப்படியே எங்காவது ஓரிடத்துக்குச் சென்று, ஒரு சிறு இடத்திற்குள் போய், புயல் முடியும் வரையில் ஒருக்கால் ஓரிரு நாட்கள் காத்திருப்பேன். ஆனால் அது சரியாகவே இருந்திருக்கும். என்னுடைய மானிடத்திலிருந்து ஒரு துண்டை எனக்கு எடுத்துக் கொண்டு, அது போகட்டும் என்று (மீதியை) விட்டு விடுவேன். நீங்கள் பாருங்கள்? ஆனால் உங்களால் அதைச்செய்ய முடியாது, மனைவி காட்டில் இருக்கிறாள். அவர்கள் காட்டில் இருந்தனர். ஏன், அவர்கள் அன்று இரவே மரித்து விடுவார்கள். அவர்கள் காடுகளில் தங்களைத் தாங்களே எப்படி பாதுகாத்துக் கொள்வது என்பது அவர்களுக்குத் தெரியாது. பாருங்கள்? 155.எனவே, நான் நினைத்தேன்... நான் சற்று அங்கே போகத் துவங்கினேன், அப்போது ஏதோவொன்று, ‘நானே கர்த்தர், ஆபத்துக் காலத்தில் அநுகூலமான துணை’ என்று கூறுவதை நான் கேட்டேன். நான் அப்படியே தொடர்ந்து நடந்து கொண்டிருந்தேன். நான், ‘இப்பொழுது, நான் மனக் குழப்பத்துக்குள்ளாகிக் கொண்டிருக்கிறேன். நீங்கள் பாருங் கள்? நான் காரியங்களைக் கேட்டுக் கொண்டிருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறேனே’ என்று எண்ணினேன். அது இருபது வருடங்களுக்கு முன்பு, அவள் விவாகம் செய்து கொண்ட ஆரம்பத்தில் நடந்தது. நான் அப்படியே இவ்விதமாக தொடர்ந்து போய்க் கொண்டிருந்தேன். 156.அது, ‘நானே கர்த்தர், ஆபத்துக்காலத்தில் அநுகூல மான துணை’ என்றது. அது மூன்று அல்லது நான்கு தடவை கள் அவ்வாறு கூறினது. 157.சிறிது கழிந்து, நான் நின்று, ‘நான் நிலை குலைந்து போய் விட்டிருப்பேன், அல்லது சர்வவல்லமையுள்ள தேவன் என் மேல் இரக்கமாயிருக்க வேண்டும்’ என்று நினைத்தேன். நான் முழங்கால் படியிட்டு, எனது துப்பாக்கியை கீழே வைத்து விட்டு, ‘தேவனே, நான் வழிதவறி விட்டேன் என்று ஒப்புக் கொள்கிறேன்.’ நீங்கள் பாருங்கள், ‘நான்-நான் இழக்கப்பட்டு போனேன். அப்படியானால் நீர்... என்னால் ஒருபோதும்... என்னால் இங்கிருந்து வெளியே போகவே முடியவில்லை... என்னால் ஒருபோதும் வழிதவறிப் போக முடியாது என்றும் நான் காடுகளில் மிக நன்றாக பழக்கமுள்ளவன் என்றும் நினைத்திருந்தேன். ஆனால் நான் முற்றிலுமாக திசை மாறி விட்டேன். அங்கே... இல்லை’ என்றேன். நான் உணர்ச்சிவசப் பட்டவனாய் இருந்தேன். நீங்கள் பாருங்கள்? ‘எனவே, வெளியே போகும்படியான எனது வழியை நான் கண்டுபிடிக்க எனக்கு அங்கே எந்த வழியுமே இல்லை. நான்-நான் வாழத் தகுதியற்றவன், ஐயா. ஆனால் எனது மனைவியும் குழந்தை யும் வாழத் தகுதியுள்ளவர்கள்’ என்றேன். பாருங்கள்? ‘எனவே அவர்களிடம் போய் சேர எனக்கு உதவி செய்யும், அப்பொழுது அவர்கள் காட்டில் மரிக்க மாட்டார்கள். நான் வாழத் தகுதியற்றவன், ஆனால் அவர்களோ தகுதியுள்ள வர்கள். நீர் எனக்கு உதவி செய்வீரென்றால், நான் உமக்கு மிகவும் நன்றியுள்ளவனாயிருப்பேன்’ என்றேன். 158.நான் எழுந்தேன். நான், ‘இப்பொழுது, நான் சரியாக இந்த வழியை நோக்கி என்னுடைய முகத்தை வைத்துக் கொள்ளப் போகிறேன், நான் மேடாவையும் அவர்களையும் விட்டு வந்த இடத்தை நோக்கி நேராகப் போய்க் கொண் டிருக்கிறேன் என்று எனக்குத் தெரியும்’ என்றேன். ஆனால் நான்...?... அந்த மரண நடையில் சரியாக கனடா நாட்டிற்குள் போய்க் கொண்டிருந்தேன், (நீங்கள் பாருங்கள்?) சரியாக கனடாவிற்குள் போய்க் கொண்டிருந்தேன். (பாருங்கள்?) நான் இவ்விதமாக நடக்கத் தொடங்கினேன். திடீரென்று ஏதோவொன்று போவதை உணர்ந்தேன் (சகோதரன் பிரன் ஹாம் விளக்குகிறார் - ஆசிரியர்.), அது ஒரு கரம். ‘அது யார்?’ அந்தக் கடைசி ஏற்ற வேளையில் திரும்பிப் பார்ப்பதற்காக நான் மேலே நோக்கிப் பார்த்தேன். அப்போது அந்த ஹரிகேன் மலையின் உச்சியை நான் காணும் அளவுக்கு மூடுபனி போது மான அளவு விலகிப் போயிருந்தது. அவர்கள் ஹரிகேன் மலையின் சற்று கீழே தான் தங்க வைக்கப்பட்டிருந்தனர். நல்லது, அப்போது, நான் அங்கே நின்று கொண்டு, ஒரு குழந்தையைப் போல அழுது, எனக்கு உதவி செய்ததற்காக தேவனைத் துதித்தேன், உங்களுக்குத் தெரியும். 159.அதன்பிறகு, நான் அந்த வழியை எடுத்துக் கொள்ள வேண்டியதாய் இருந்தது. அது என்மேல் அந்தகாரமான (நேர மாய்) இருந்தது. மான்களும் மற்றும் காரியங்களும் எனக்கு முன்னாக துள்ளிக் குதித்து வேகமாக பாய்ந்து கடந்து சென்றன. ஆனால் நானோ... அது இருளான பிறகு, அந்த காட்டிலாகா அதிகாரியை எனக்குத் தெரியும், மேலும் நான்... அந்தக் காட்டி லாகா அதிகாரியினுடைய சிற்றறை சரியாக அங்கே அந்த சாய்வான கூரையிருக்கும் இடத்திற்கு அருகாமையில் தான் இருந்தது, ஆனால் அது பூட்டிக் கிடந்தது. அப்போது, அங்கிருந்து கீழே அந்த பூட்டிய வீட்டிற்கு 25 மைல்கள் தூரம் இருந்தது. நீங்கள் பாருங்கள்? அப்போது இங்கே மேலே மலையில், காட்டிலாகா அதிகாரியின் சிறு அறைக்கு அருகில் இங்கே இருந்தது, அதன் பிறகு அந்தக் கோபுரம் வரையில், அங்கே மேலேயிருக்கும் அந்தப் பெரிய முகடின் மேல்... நல்லது, நான் எங்கோ ஓரிடத்தில் அந்த முகடின் மேல் தான் இருந்தேன் என்று அறிந்து கொண்டேன். ஆனால், அந்த மலைகள் அநேக, அநேக, அநேக மைல்கள் சுற்றிலும் சூழ்ந்து காணப்படுகின் றன, அது உங்களுக்குத் தெரியும்: அங்கே அந்த மலையைச் சுற்றிலும் முப்பது, நாற்பது, ஐம்பது மைல்கள் தூரம். எனவே நான், ‘இப்பொழுது, அங்கே அதன் வழியாக கீழே வருகிற அந்தக் கம்பியை மாத்திரம் என்னால் தொட முடியுமானால்’ என்று நினைத்தேன். தொலைபேசியில் பேசு வதற்காக, அவரும் நானும் தான் அந்தக் கம்பியைக் கட்டி யிருந்தோம், உங்களுக்குத் தெரியும். அந்த மரங்களின் மேல் ஆணி கொண்டு பொருத்திக் கட்டியிருந்தோம், அது கீழே அவருடைய பணியிடம் வரை போகிறதாய் இருந்தது. அதன் பிறகு அவர்கள் அதைக் கொண்டு அந்தக் கோபுரத்திலிருந்து கீழே அந்தப் பணியிடம் வரையில் தகவலைப் பரப்புகிறார்கள். அப்போது என்னுடன் கரடி வேட்டையாடுவதற்காக ஒரு சில நாட்களில் அவர் பிரயாணம் பண்ணி வருவதாக இருந்தது. 160.மேலும் இரவு நேரமாகி விட்டது. அப்போது என்னால் பார்க்கவே முடியவில்லை, உங்களுக்குத் தெரியும். அது எப்படியும் இருட்டாகி இருந்தது. ஏறக்குறைய முப்பது, நாற்பது நிமிடங்களில் இருட்டாகி விட்டது. அது ஏறக்குறைய பிற்பகல் 2 மணி அல்லது மூன்று மணி மட்டுமே. ஆனால் நான் இவ்விதமாக என்னுடைய கரத்தை தொடர்ந்து மேலே உயர்த் திப் பிடித்தபடி நடந்தேன். நான் அப்போது தான் அதைப் புரிந்து கொண்டிருந்தேன்... மேலும் என்னுடைய துப்பாக்கி யையும் இந்தக் கையில் பிடித்தபடி நடந்து கொண்டிருந்தேன், உங்களுக்குத் தெரியும். அந்தக் கம்பி ஏறக்குறைய இவ்வளவு உயரத்தில் தான் இருந்தது என்று எனக்குத் தெரியும், அங்கே தான் நாங்கள் அதை வழி நெடுகிலும் எல்லா இடங்களிலும் அந்த மரங்களின் மேல் ஆணியடித்து மாட்டி வைத்தோம். ‘அந்தக் கம்பியை என்னால் தொட முடியுமானால்’ என்று நினைத்தேன். ஒரு மரக்கிளை அவ்விதமாக என் கையில் பட்டது, உங்களுக்குத் தெரியும். நான், ‘நான்... இல்லை, இது ஒரு மரக்கிளை தான்’ என்று நினைத்து விட்டு, நீங்கள் பாருங்கள்? நான் மீண்டும் முயற்சித்தேன். அதன்பிறகு நான் மாற்றிக் கொண்ட போது... நான் அதிக நேரமாக என்னுடைய கையை மேலே உயர்த்தி வைத்திருந்ததால், எனது கரத்தில் வலியேற்பட்டது. நான் மாற்றி, என்னுடைய துப்பாக்கியை இங்கே வைத்து விட்டு, நான் அதையும் தாண்டி போய் விடக்கூடாது என்பதை நிச்சயப்படுத்திக் கொள்வதற்காக, இரண்டு அடி தூரம் பின்னோக்கிச் சென்றேன். நீங்கள் பாருங்கள்? ஏனென்றால்... மேலும் அதைப் போன்று. சகோதரனே, - முன்னோக்கி (போய்க் கொண்டிருந்தேன்), காரிருளான மன நிலையை அடைந்தேன், உங்களுக்குத் தெரி யும். அப்போது, நான் ஏறக்குறைய ஒரு மணிநேரமாக அந்த இருளில் நடந்து கொண்டிருந்திருந்தேன். என்னுடைய கரமானது அந்தக் கம்பியில் பட்டது, நான் அந்தக் கம்பியைத் தொட்டு விட்டேன். 161.நல்லது, நான் அப்படியே என்னுடைய தலையைத் தாழ்த்தி அழத் தொடங்கினேன், உங்களுக்குத் தெரியும். மேலும் நான், ‘கர்த்தாவே, சரியாக இந்தக் கம்பியின் முடிவில் என்னுடைய மனைவியும் மற்றும் யாவுமே காத்துக் கொண் டிருக்கின்றனர். பாரும்?’ என்று நினைத்தேன். நான், ‘அது சரி தான்’ என்று எண்ணினேன். நான் அங்கே நின்று கொண்டு, என்னுடைய தலையைத் தாழ்த்தி வைத்துக் கொண்டு, அதற் காக அவருக்கு நன்றி கூறினேன். நான், ‘ஆம், கர்த்தாவே. நான் எனது கரத்தால் உம்மைப் பற்றிக் கொண்டேன். இது ஒரு மின்னோட்டம், ஒரு கம்பியாகவும் உள்ளது. சரியாக இப்பொ ழுது என்னுடைய இருதயத்தில் நான் பற்றிப் பிடித்துக் கொண் டிருக்கிற இந்தக் கம்பியின் கடைசியில், எனக்கு அன்பான யாவுமே வைக்கப்பட்டுள்ளன (பாருங்கள்?), எனக்கு அன்பான வர்கள் யாவரும், எனது இரட்சகராகிய என்னுடைய கர்த்தரும், எனக்கு அன்பான யாவருமே இந்தக் கம்பியின் கடைசியில் வைக்கப்பட்டு இருக்கிறார்கள்’ என்று நினைத்தேன். 162.எனவே, நான் அந்தக் கம்பியை விட்டு என்னுடைய கையை விடவேயில்லை. நான் அந்தக் கம்பியை பின் தொடர்ந்து மலையின் கீழே வந்து கொண்டிருந்தேன். அங்கே நாங்கள் கீழிருந்து மேலே வந்த இடத்திலிருந்த பாதை சிறிது - கொஞ்சம் தகர்ந்து - பாதி தகர்ந்து போயிருந்த போதிலும், உங்களுக்குத் தெரியும். ஆனால் நான் அதை நம்பவில்லை. நான் அப்படியே அந்தக் கம்பியைப் பற்றிப்பிடித்துக் கொண்டிருந்தேன். நான் ஒரு மரத்தின் மேல் மோதிய போது, நான் அந்த மரத்தைச் சுற்றிச் சென்று, அதை மீண்டும் பிடித்து, தொடர்ந்து அடுத்த மரத்திற்குப் போய், பிறகு அதைப் பிடித்து - தொடர்ந்து கீழே போய்க் கொண்டேயிருந்தேன். அந்த மலையின் கீழே ஏறக்குறைய மூன்று மைல்கள் தூரம். பிறகு நான் அங்கே கீழே வந்து சேர்ந்தேன். மேடா ஏறக் குறைய நரம்புத் தளர்ச்சி நிலையில் (hysterics) இருந்தாள், உங்களுக்குத் தெரியும். அப்படிப்பட்ட ஒரு இக்கட்டான நிலையில் இருந்தாள். ஆனால் அதுதான் அது. பாருங்கள்? இழக்கப்பட்டு போவதைப் போன்ற உணர்ச்சி வேறு எதிலுமே இல்லை. இழக்கப்பட்டு (வழிதவறிப் போவதைக்) குறித்து என்ன - காடுகளில் வழிதவறிப் போவதைக் குறித்து. ஆனால் தேவனிடமிருந்து இழக்கப்பட்டுப் போவதைக் குறித்து என்ன? அப்போது தான் அது மோசமாக இருக்கிறது. 163.நல்லது, மேடா? வா, தேனே. சகோதரன் வெல்ச் அவர்கள் வேலைக்குப் போக வேண்டியுள்ளது. பாங்ஸ்-ம் மற்றும் அவர்களும் அநேகமாக அதிகாலையில் புறப்பட விரும்பலாம். மற்றும் இந்த மற்ற சகோதரர்கள் எல்லாரும் வேலைக்குப் போக விரும்புகின்றனர். நம்முடைய சகோதரிகள் குழந்தைகள் எல்லாரையும் கழுவ வேண்டியுள்ளது... உங்க ளுக்கு நன்றி. உங்களுக்கு நன்றி. நான் உங்களிடம் பேசிக் கொண்டிருந்ததில் பாதி அளவா வது நீங்கள் கேட்டு அனுபவித்திருந்தால்... அது அற்புதமாக இருந்தது. ஆம், ஐயா. சகோதரன் வெல்ச் அவர்களே, இன்று பிற்பகலில் அந்த அருமையான நேரத்திற்காகவும் கூட நன்றி, நாங்கள் - உடன் அங்கே வெளியே இருந்தோம். அங்கே வெளியே அந்த சதுப்பு நிலங்களிலிருந்த முதலையை விட்டு என்னை அழைத்து வந்து கொண்டிருந்தார். சகோதரியே, உங்கள் எல்லாருக்கும், அந்த அருமையான இரவு ஆகாரத்திற்காக உங்களுக்கு நிச்சயமாக நன்றி செலுத்துகிறேன். ஓ, என்னே. உங்களுக்கும் கூட அங்கே உள்ளே ஒரு சிறு பெண் பிள்ளை இருக்கிறாளா? அவளுக்கு மிக அழகான முடி இருக்கிறது. அவளுக்கு ஒருவித மிகவும் மஞ்சள் கலந்த பொன் நிறமாக காணப்படுகிற தலைமயிர் உள்ளதையும், அவள் அதை பின்னிப் போட்டிருக்கிறாள் என்பதையும் நான் கவனித்தேன். அது-அது உண்மையிலேயே அழகாயுள்ளது. 164.சகோதரியே, உங்களுடைய தலைமயிரையும் குறித்து கூட நான் உங்களைப் புகழ விரும்புகிறேன். அது நன்றாக உள்ளது என்பதை நான் அறிவேன். நீங்கள் வழக்கமாக குட்டைத் தலைமயிரை அணிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன், இல்லையா? அது ஒருவிதமாக உங்களுடைய தோள்களுக்கு கீழே கிடக்கும், ஒருவித குறிப்பிட்ட பாணியில் கத்தரிக் கப்பட்ட முடி அல்லது... அதைப் போன்ற ஏதோவொன்று. அல்லது நீங்கள் அவ்வாறு செய்கிறீர்களா? ஆமாம். நான்... ஆம். நான்... நல்லது, அது உண்மையிலேயே இப்பொழுது அருமையாகத் தோற்றமளிக்கிறது. பாருங்கள்? இங்கேயிருக்கும் இந்த-இந்த ஸ்திரீகள் எல்லாருமே தங்களுடைய நீண்ட தலை முடியையும் மற்றும் யாவற்றையும் கொண்டிருப்பதை நான் கவனித்துக் கொண்டிருந்தேன். அது... போன்று தோற்றமளிக்கிறது. அது... ஓ, அவர்கள் ஒரு விதமாக இருப்பது போன்று மற்றவிதமாகவும் அருமையாக இருக்க முடிகிறது, உங்களுக்குத் தெரியும். அவர்கள் குட்டை முடியைக் கொண்டிருந்தாலும், அல்லது கொண்டிராவிட்டாலும், ஆனால் அது அப்படியே அவ்விதமாகவே தோற்றமளிக்கிறது. உங்க ளுக்குத் தெரியும். நான் என்ன கூறுகிறேன் என்பது உங்க ளுக்குத் தெரியும். நீங்கள் அப்படியே... அது வெறுமனே ஒருக்கால் நானாகவும் இருக்கலாம். ஆனால்... 165.அதோ அந்தச் சிறு பெண் பிள்ளை இருக்கிறாள். அவள் சற்று கூச்ச சுபாவமுடையவளாயிருக்கிறாள், இல்லையா? நான் அவனை எடுத்து வைத்துக் கொள்ளலாமா, தேனே? அவள் எங்கே? ஓ... இல்லை. அவர்கள் என்னிடம் கூறுவது உங்களுக்குக் கேட்கிறதா? உங்களுக்கு அது புரிந்ததா? அவள், ‘நாங்கள் பெக்கி வருவதற்காகக் காத்துக் கொண்டிருக்க வேண் டியிருந்தது’ என்று கூறினாள், ஆனால் அவள், ‘அது நீங்கள் அங்கே சென்று, மீண்டும் பிரசங்கம் பண்ணத் துவங்கலாம் என்று அர்த்தமல்ல’ என்று கூறினாள். அந்தச் சிறு பெண் பிள்ளையும் கூட அழகான தலை முடியைக் கொண்டிருக்கவில்லையா, தேனே? அவளும் கூட அங்கே தன்னுடைய சிவப்பு ஸ்ட்ராபெர்ரி பழங்களைப் போன்ற சிறு இளம் பொன்னிற தலைமயிர் முடியை (strawberry blonde) பின்புறம் கட்டி (pony tail) கீழே தொங்கிக் கொண்டிருக்க... ஒரு அழகான இளம் பெண்ணாக இருக்கிறாள். 166.இல்லை. சகோதரன் வெல்ச் அவர்களே, நான் வெளியே போய், அந்தப் பழைய - அந்தப் பழைய காடிலாக் காரை என்னால் ஸ்டார்ட் பண்ண முடிகிறதா என்று பார்க்கப் போகிறேன். நான்... ஒரு நிமிடம் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள், என்னால் முடிகிறதா என்று பார்க்கிறேன்... சிலசமயங்களில் அது கொஞ்சம் இருமிக் கொண்டும், குரைத்துக் கொண்டும் இருக்கும், உங்களுக்குத் தெரியும்... பெர்னி, என்ன? லாஸ் ஏஞ்சலிஸ் பட்டணத்திற்கு தீர்க்கதரிசனம் PROPHECY TO LOS ANGELES வில்லியம் பிரான்ஹாம் அவர்கள் லாஸ் ஏஞ்சலிஸ் தண்ணீருக்குள் மூழ்கிவிடும் என்று தீர்க்கதரிசனம் உரைத்த பில்ட்மோர் ஓட்டல் (Biltmore Hotel in Los Angeles).  இந்த ஓட்டல் லாஸ் ஏஞ்சலிஸ் பட்டணத்தில் அமைந்துள்ளது. முழு சுவிசேஷ வர்த்தக புருஷரால் ஒழுங்கு பண்ணப் பட்டிருந்த இந்த கூட்டத்தில் தான் தீர்க்கதரிசி வில்லியம் பிரான்ஹாம் 1965- ம் ஆண்டு ஏப்ரல் 29 மாலையில் ‘மணவாட்டியைத் தெரிந்துகொள்ளுதல் (Choosing of a Bride)’ என்ற செய்தியில் லாஸ் ஏஞ்சலிஸ் பட்டணத்திற்கு விரோதமாக தீர்க்கதரிசனம் உரைத்தார். கலிபோர்னியாவில் நான் கடைசியாக அளித்த செய்தி என் நினைவுக்கு வருகின்றது. நான் மறுபடியும் அங்கு போகமாட்டேன் என்று நினைத்தேன். லாஸ் ஏஞ்சலிஸ் கடலுக்குள் ஒரு நாள் மூழ்கி விடும் என்று நான் அங்கு முன்னறிவித்தேன். அது கர்த்தர் உரைத்ததாவது! ஆகவே அது நிச்சயம் நிறைவேறும். அவளுடைய முடிவு நெருங்கி விட்டது. அது எப்பொழுது நேரிடும் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் அது நிகழுமென்பது உறுதி. நான் அவ்விதம் உரைத்தபின்பு நிலநடுக்கங்கள் உண்டாகி அந்தப் பட்டினத்தை அசைத்தன. தூதன் இறங்கி வந்தபோது உங்களில் சிலர் அந்தக் குன்றின் மேல் நின்று கொண்டிருந்தீர்கள். அப்பொழுது வெளிச்சம் உண்டாகி, நாம் நின்று கொண்டிருந்த குன்றைச் சுற்றிலும் அக்கினி விழுந்தது. அப்பொழுது கற்பாறைகள் பிளவுபட்டு, உடைந்து, நம்மைச் சுற்றிலும் விழுந்தன. மூன்று முறை வானத்திலிருந்து இடிமுழக்கம் உண்டானது. அப்பொழுது நான், ‘மேற்கு கடற்கரையின் மேல் நியாயத்தீர்ப்பு விழும்’ என்று அறிவித்தேன். இரண்டு நாட்கள் கழித்து அலாஸ்கா ஏறக்குறைய தண்ணீரில் மூழ்கிவிட்டது. இதை உரைத்த அதே தேவன், ‘லாஸ் ஏஞ்சலிஸ் அழிந்து விடும்’ என்று உரைத்துள்ளார். அது எப்பொழுது நேரிடும் என்று என்னால் கூற முடியாது. கப்பர்நகூமைக் குறித்து ஆண்டவர் கூறினதை அப்பொழுது நான் யோசித்துக் கூட பார்க்கவில்லை. நான் வேதபுத்தகத்தைத் திறந்து இயேசு கூறினதைப் படித்தேன்; ‘வான பரியந்தம் உயர்த்தப்பட்ட கப்பர்நகூமே, நீ பாதாள பரியந்தம் தாழ்த்தப்படுவாய்; உன்னில் செய்யப்பட்ட பலத்த செய்கைகள் சோதோமிலே செய்யப்பட்டிருந்த தானால், அது இந்நாள் வரைக்கும் நிலைத்திருக்கும்’ (மத். 11:23). அது உரைக்கப்பட்டு 150 ஆண்டுகளுக்குப் பின்னர், கப்பர்நகூம் தண்ணீரில் மூழ்கினது. இவையனைத்தும் உரைத்து நிறைவேற்றின அதே தேவ ஆவியானவர், ‘தூதர்களின் பெயரை (லாஸ் ஏஞ்சலிஸ்) சூடிக்கொண் டிருக்கும் கப்பர்நகூமே, நீ எவ்வளவாக உன்னை வானபரியந்தம் உயர்த்திக் கொண்டாய்! நீ சாத்தானின் உறைவிடமாக இருக்கின்றாய். போதகர்களின் கல்லறைத் தோட்டமாக நீ அமைந்திருக்கிறாய். நல்லவர்கள் உன்னிடம் வந்தால் அவர்கள் எலிகளைப் போல் மாண்டு போகின்றனர். உனக்கு என்ன நேர்ந்தது? தூதர்களின் பெயரால் உன்னை அழைத்துக் கொள்பவளே! உன்னில் செய்யப்பட்ட பலத்த செய்கைகள் சோதோமில் செய்யப் பட்டிருந்ததானால், அது இன்று நிலைத்திருக்கும். உன் நேரம் வந்து விட்டது’ என்று கூறுகின்றார். நான் கூறினது நிறைவேறாமல் போனால், என்னைக் கள்ளத் தீர்க்கதரிசியாகக் கருதுங்கள். ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்படுதல், டிசம்பர் 4, 1965, பத்தி எண் 191-197